உள்ளடக்கத்துக்குச் செல்

சபாவித்து வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபாவித்து வம்சம்
دودمان صفوی
Dudmān e Safavi
1501–1736
சின்னம் of Safavid dynasty
சின்னம்[2]
பேரரசர் முதலாம் அப்பாஸ் ஆட்சியில் சபாவித்துப் பேரரசின் வரைபடம்
பேரரசர் முதலாம் அப்பாஸ் ஆட்சியில் சபாவித்துப் பேரரசின் வரைபடம்
நிலைபேரரசு
தலைநகரம்தப்ரிஸ்
(1501–1555)
குவாஸ்வின்
(1555–1598)
ஸ்பாஹன்
(1598–1736)
பேசப்படும் மொழிகள்அலுவல் மொழி பாரசீகம். பிற மொழிகள் அரபு, அஜர்பைஜானி மொழி, ஜார்ஜியா மொழி மற்றும் துருக்கி மொழி
சமயம்
சியா இசுலாம், பன்னிருவர் பிரிவு
அரசாங்கம்இசுலாமிய முடியாட்சி
ஷாகான்ஷா 
• 1501–1524
முதலாம் இசுமாயில்(துவக்கம்)
• 1732–1736
மூன்றாம் அப்பாஸ் (முடிவு)
விசியர் 
• 1501–?
முகமது ஜக்காரியா குஜுஜி (முதல்)
• 1729–1736
நாதிர் குவாலி பெக் (இறுதி)
சட்டமன்றம்அரசவைக் குழு
வரலாறு 
• சபியத்தீன் அட்ராபிலி சபாவியா ஆட்சியை நிறுவுதல்
1301
• தொடக்கம்
1501
• ஹோத்தாகி பேரரசின் ஆக்கிரமிப்பு
1722
• சபாவித்து நாதிர் ஷா மீண்டும் கைப்பற்றுதல்
1726–29
• முடிவு
மார்ச் 1736
• நாதிர் ஷா முடிசூட்டிக்கொள்தல்
1 அக்டோபர் 1736
பரப்பு
2,850,000 km2 (1,100,000 sq mi)
நாணயம்துமான், அப்பாசி நாணயம், ஜார்ஜியன் அப்பாசி, ஷாகி[3]
  • 1 Tuman = 50 அப்பாசி
  • 1 Tuman = 50 பிராஞ்ச் லிவெரே
  • 1 Tuman = £3 6s 8d.
முந்தையது
பின்னையது
[[தைமூர் பேரரசு]]
அக் கோயுன்லு
சிரவன்ஷா
மரசியான்
பாதுஸ்பானித்துகள்
மிகிராபந்திகள்
அப்ராசியாப் வம்சம்
ஓர்மஸ் இராச்சியம்
ஹோத்தாகி வம்சம்
அப்சரித்து வம்சம்
உருசியப் பேரரசு
உதுமானியப் பேரரசு
தற்போதைய பகுதிகள்
a State religion.[4]

சபாவித்து வம்சம் (Safavid dynasty) நவீன ஈரானை 1501 முதல் 1736 முடிய ஆண்ட சியா இசுலாம் பன்னிருவர் பிரிவைச் சார்ந்த அரச வம்சமாகும்.[5]

சபாவித்து பேரரசு போர்க்களங்களில் வெடி மருந்துகளை பயன்படுத்தியதால், இதனை வெடிமருந்து பேரரசு என்றும் அழைப்பர்.[6]

சபாவித்து வம்சத்தின் ஆட்சி இரானிய அஜர்பைசான் பிரதேசத்தின் ஆர்டபில் நகரத்தில் முதலாம் ஷா இசுமாயில் (1501–24) என்பவரால் நிறுவப்பட்டது.

சபாவித்து வம்சத்தினர், இசுலாமிய சூபி - குர்திஷ் கலப்பினத்தவர் ஆவார். [7]சபாவித்து வம்சத்தினர் அசர்பைஜானியர்களுடனும், [8] ஜார்ஜியா நாட்டு மக்களுடனும் திருமண உறவு கொண்டிருந்தனர். [9]

சபாவித்து வம்சத்தினர் 1501 முதல் 1722 முடிய தற்கால ஈரான், ஈராக், அசர்பைஜான், பாகாரேயின், ஆர்மீனியா, ஜார்ஜியா, குவைத், சிரியா, துருக்கியின் சில பகுதிகள், வடக்கு காகசஸ், உஸ்பெகிஸ்தான், ஆப்கானித்தான், பாகிஸ்தான், துருக்மெனிஸ்தான் பகுதிகளை ஆண்டனர்.

1736-இல் சபாவித்து பேரரசு சிதறுண்டாலும், ஈரானை சியா இசுலாம் பிரிவுக்கு மாற்றியதுடன், அனதோலியா, காக்கேசியா மற்றும் ஈராக்கிலும் சியா இசுலாம் பரவியது.

சபாவித்து வம்ச ஆட்சியாளர்கள்

[தொகு]
  • முதலாம் இஸ்மாயில் 1501–1524
  • முதலாம் தமாஸ்ப் 1524–1576
  • இரண்டாம் இஸ்மாயில் 1576–1578
  • முகம்மது கொடபண்டா 1578–1587
  • முதலாம் அப்பாஸ் 1587–1629
  • சஃபி 1629–1642
  • இரண்டாம் சஃபி 1642–1666
  • முதலாம் சுலைமான் 1666–1694
  • சுல்தான் முதலாம் உசைன் 1694–1722
  • இரண்டாம் தமாஸ்ப் 1722–1732
  • மூன்றாம் அப்பாஸ் 1732–1736

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ingvild Flaskerud (26 November 2010). Visualizing Belief and Piety in Iranian Shiism. Continuum International Publishing Group. pp. 182–183. ISBN 978-1-4411-4907-7. Retrieved 24 July 2011.
  2. ↑ Ingvild Flaskerud (26 November 2010). Visualizing Belief and Piety in Iranian Shiism. Continuum International Publishing Group. pp. 182–183. ISBN 978-1-4411-4907-7. Retrieved 24 July 2011.
  3. ↑ Ferrier, RW, A Journey to Persia: Jean Chardin's Portrait of a Seventeenth-century Empire, p. ix.
  4. ↑ The New Encyclopedia of Islam, Ed. Cyril Glassé, (Rowman & Littlefield Publishers, 2008), 449.
  5. ↑ "SAFAVID DYNASTY". Encyclopædia Iranica. 
  6. ↑ Streusand, Douglas E., Islamic Gunpowder Empires: Ottomans, Safavids, and Mughals (Boulder, Col : Westview Press, 2011) ("Streusand"), p. 135.
  7. ↑ RM Savory. Ebn Bazzaz. Encyclopædia Iranica
  8. ↑ "Peoples of Iran" Encyclopædia Iranica. RN Frye.
  9. ↑ Aptin Khanbaghi (2006) The Fire, the Star and the Cross: Minority Religions in Medieval and Early. London & New York. IB Tauris. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84511-056-0, pp. 130-1

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Safavid dynasty
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபாவித்து_வம்சம்&oldid=4659601" இலிருந்து மீள்விக்கப்பட்டது