தஞ்சாவூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தஞ்சாவூர்
Thanjavur

தஞ்சை
மாநகராட்சி
A montage image showing temple complex with temple tower in the centre, Maratha palace, paddy field, Rajarajachola Mandapam and Tamil University
தஞ்சை பெரிய கோயில், தஞ்சை அரண்மனை, வேளாண் விளைநிலம், இராசராசன் மணிமண்டபம், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தோற்றம்.
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பகுதிசோழ நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
பரப்பளவு
 • மொத்தம்36.33
ஏற்றம்88
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்222
 • அடர்த்தி6
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN613 xxx
தொலைபேசி குறியீடு04362, 0435
வாகனப் பதிவுTN 49,TN68
இணையதளம்thanjavur.nic.in/municipal-corporation-thanjavur/

தஞ்சாவூர் (Thanjavur) மாநகரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தமிழ் பாரம்பரிய மிக்க தொன்மையான நகரமாகும். தஞ்சாவூர் மாவட்டத் தலைநகரமாகும். இதை தஞ்சை என்றும் அழைக்கப்படுகிறது. சிறப்பு நிலை நகராட்சியாக இருந்த தஞ்சாவூர் நகராட்சி 10 ஏப்ரல் 2014 அன்று தமிழ்நாட்டின் 12-வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[1]

பிற்கால சோழர்களின் தலைநகரான விளங்கியது. புகழ் பெற்ற தமிழ் மாமன்னர் முதலாம் இராஜராஜ சோழன் தலைநகராக கொண்டு ஆட்சி செய்த நகரமாகும். தஞ்சை என்பது குளிர்ந்த அழகிய வயல்கள் மற்றும் அழகிய பனை மரங்கள் நிறைந்த பகுதி என பொருள். தஞ்சை மாவட்டத்தில் முக்கிய தொழில் விவசாயம் என்பதால் நெல் பயிர் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த தஞ்சையில் தான் அதிக அளவில் நெல் பயிர் விளைகிறது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் திகழ்கிறது. உலக பாரம்பரிய சின்னமாகவும், உலக புகழ் பெற்றதாகவும் தஞ்சை பெரிய கோவில் விளங்குகிறது.

மக்கள்தொகை[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,22,619 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 1,09,291 ஆண்கள், 1,13,328 பெண்கள் ஆவார்கள்.தஞ்சாவூர் மக்களின் சராசரி கல்வியறிவு 91.48% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.97%, பெண்களின் கல்வியறிவு 88.14% ஆகும். தஞ்சாவூர் மக்கள் தொகையில் 18,584 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[2]

பெயர்க் காரணம்[தொகு]

தஞ்சை என்பதற்கு "குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி" என்று பொருள் .

தஞ்சாவூர் எட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நகராகும். அப்போது இப்பகுதியினை வளமையோடு ஆண்டு வந்த தனஞ்சய முத்தரையர் பெயரையே இந்நகரம் பெயராகப் பெற்றது. தனஞ்சய ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்று நிலைபெற்றது என்றும் கூறப்படுகிறது.[3]

பெயர் வரக் காரணமாகச் சொல்லப்படும் புராணக்கதை. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அரக்கன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்திவந்தான். மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்ற பெயரும், சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீசுவரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பள்ளியக்கிரகாரத்திற்கு அருகில் இருக்கிறது. வைணவச் சம்பிரதாயத்தில் இதே புராணம் சிறிது மாற்றப்பட்டு மகாவிஷ்ணுவே தஞ்சனை அழித்தார் என்றும், அதனால் தஞ்சை மாமணி நீலமேகப்பெருமாளாய் கோயில் கொண்டு இருக்கிறார் என்றும் நம்பப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க செய்தி, மேற்கூறிய நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சபுரீசுவரரின் கோயிலுக்கு நேரெதிரில் உள்ளது.

சிறப்புகள்[தொகு]

 • தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.
 • சோழர்களின் தலைநகரமாய் விளங்கியது.
 • உலக புகழ் பெற்ற பாரம்பரிய சின்னமான பெரிய கோவில் உள்ளது.
 • உலகப் புகழ் பெற்ற தஞ்சை சரசுவதிமகால் நூலகத்தை

தன்னகத்தே கொண்டது. இந்நூலகத்தில் காணக்கிடைக்காத மிக அரிய ஓலைச் சுவடிகள் நூற்றுக் கணக்கில் திரட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கலை மற்றும் பண்பாட்டினை வளர்ப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் நடுவண் அரசால் அமைக்கப்பட்டுள்ள தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சாவூரில் தான் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளம், மற்றும் கர்நாடகம் ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்தியாவின் தலைமை மையமாகும்.[சான்று தேவை]

மெல்லிசைக் கருவிகளான வீணை, மிருதங்கம், தபேலா, தம்புரா போன்றவை இங்கு தான் செய்யப்படுகின்றன. தஞ்சாவூர் வீணை புவிசார் குறியீடு பெற்றதாகும்.[4]

தஞ்சை வரலாறு[தொகு]

கி.பி. 655-ஆம் ஆண்டு முதல் கி.பி. சுமார் 850 வரை முத்தரையர்கள் என்ற குறுநில மன்னர்கள் தஞ்சைப் பகுதியை ஆட்சி புரிந்துள்ளனர். கி.பி. 850இல் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து விஜயாலய சோழன் கைப்பற்றித் தஞ்சை சோழர் ஆட்சியைத் தோற்றுவித்தார். பிற்காலச் சோழர்களின் தலைநகராகத் தஞ்சாவூர் திகழ்ந்தது. இராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் (985-1014) தஞ்சாவூர் நகர் மிக்க புகழ் எய்தியது. இராஜராஜ சோழனின் மகனரான இராசேந்திர சோழன் கி.பி. சுமார் 1025இல் தனது கலைநகரைத் தஞ்சாவூரிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார். கி.பி. 13ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மதுரைப் பாண்டிய மன்னர்களின் எழுச்சியால் தஞ்சைப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. பாண்டியரின் வீழ்ச்சிக்குப்பின் தஞ்சாவூர் விஜயநகர அரசின் ஆட்சிக்குட்பட்டது.கி.பி. 1532இல் தஞ்சையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி தொடங்கிற்று. திருச்சியைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்த மதுரை நாயக்க மன்னர் சொக்கநாதர் கி.பி. 1673இல் தஞ்சாவூர்மீது படையெடுத்தார். இப்போரில் விஜயராகவன் தோல்வியுற்று போர்க்களத்தில் வீரமரணமடைந்தார். தஞ்சை அரசு மதுரை நாயக்க அரசுடன் இணைக்கப்பட்டது.[5]

கி.பி 1676-ல் மராட்டிய சிவாஜியின் சகோதரர் வெங்காஜி தஞ்சையில் தஞ்சாவூர் மராத்தியர் ஆட்சியை நிறுவினார். இரண்டாம் சரபோஜி (1798–1832) ஆங்கில கவர்னர் ஜெனரல் வெல்வெஸ்லி பிரபுவுடன் கி.பி. 1799இல் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தஞ்சைக் கோட்டையைத் தவிற மற்ற தஞ்சை பகுதிகள் ஆங்கிலேயர் வசம் கொடுக்கப்பட்டன. இரண்டாம் சிவாஜி (1832–1855) மன்னனுக்குப் பிறகு ஆண்வாரிசு இல்லாமையினால், ஆங்கிலேயர்கள் வசம் கி.பி. 1856ல் தஞ்சைக் கோட்டையும் வந்தது. தஞ்சாவூர் 1866ஆம் ஆண்டுமுதல் நகராட்சியாக இருந்து வந்த தஞ்சை 2014ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[6][7]

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

 • தஞ்சை பெரிய கோயில்
 • தஞ்சை சரசுவதிமகால் நூலகம்
 • கல்லணை
 • தர்பார் மண்டபம்.
 • தஞ்சாவூர் அரண்மனை.
 • தமிழ் பல்கலைக்கழகம்.
 • ஆறு படை வீடுகளும் ஒன்றான சுவாமிமலை முருகன் கோயில்.
 • தஞ்சாவூர் அருகே திட்டை என்ற கோவில் உள்ளது . இந்த கோவிலின் கற்பகத்தின் மேல் ஒரு கல் உள்ளது .அந்த கல்லீலிருந்து 24 நிமிடத்திர்கு ஒரு துளி என சிவலிங்கத்தின் மேல் தண்ணீர் விழும்.இந்த கல் உலகில் அரிய வகையான எங்கும் கிடைக்காத கல்லாகும்.
 • தென்னிந்தியாவின் தென்னக பண்பாடு மையம் இங்குதான் உள்ளது.
 • திருநாகேஸ்வரம் கோவில்.
 • பூண்டி மாதா கோவில்.
 • சிவகங்கை பூங்கா.
 • தாராசுரம் கோவில்(சிற்பிகளின் கனவு)
 • தஞ்சபுரீஸ்வரர் கோவில்.
 • பட்டுகோட்டை நாடியம்மன் கோவில் பிரபலமான கோவிலாகும்.
 • பருத்தியப்பர் கோயில் உள்ளது.
 • இந்தியாவிலே இந்த கோவிலில் மட்டுமே சூரிய பகவான் சிவனின் எதிரில் இருப்பார்.
 • மல்லிப்பட்டிணம் மனோரா கோட்டை உள்ளது.ஆங்கிலேயர்கள் நெப்போலியனை வீழ்த்தியததன் நினைவாக கட்டியதாகும்.
 • கும்பகோணம் மகாமகம் குளம்.
 • அதிராம்பட்டிணம் கடல் ஆத்தி அலை காடு.
 • கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில்.
 • திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில்(பிரம்மகத்தி தோஷம் நிவர்த்தி).
 • திருவையாறு ஐயாரப்பர் கோயில்.
 • தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்.
 • திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில்.
 • நவகிரக கோயில் - குரியனார் கோயில் சிவசூரியர் கோயில் (சூரிய பகவான் தலம்)
 • நவகிரக கோயில் - திங்களூர் கைலாசநாதர் கோயில்(சந்திர பகவான் தலம்)
 • நவகிரக கோயில் - திருகஞ்சனூர் அக்னிஸ்வரர் கோயில்(சுக்கிர பகவான் தலம்)
 • நவகிரக கோயில் - திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில்(இராகு பகவான் தலம்)
 • திருச்சோறை சாரபரமேஸ்வரர் கோயில் (கடன் நிவர்த்தி தலம்)
 • திருகருகாவூர் முல்லைவனநாதர் கோயில் (குழந்தை வரம்)
 • புன்னைநல்லுர் முத்து மாரியம்மன் கோயில்.
 • கும்பகோணம் சாரங்கபாணி கோயில்.
 • கும்பகோணம் சக்கரபாணி கோயில்.
 • கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில்.
 • கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில்.
 • திருவலஞ்சுழி வெள்ளை பிள்ளையார் கோயில்.
 • முள்ளி வாய்க்கால்.
 • திருநாகேஸ்வரம் ஓப்பியப்பன் கோயில்(தென் திருப்பதி).
 • திருப்பனந்தாள் அருணஜடஸ்வரர் கோயில்.
 • அனைக்கரை கீழணை.
 • திருகண்டியூர் பிரம்மசிரகண்டிஸ்வரர் கோயில்(பிரம்மன் கோயில்).
 • திருச்சோறை சாரநாதபெருமாள் கோயில்.
 • பட்டீஸ்வரம் தேனுபுரிஸ்வரர் கோயில் (துர்க்கை அம்மன் சன்னதி).
 • நாச்சியார் கோயில் கல்கருடன் சேவை.
 • அய்யவாடி பிரத்தியங்கிரி தேவி கோயில்(பில்லி சுனியம் நிங்குதல்).
 • கதிராமங்கலம் வனதுர்கை கோயில்(இராகு கால பூஜை).

கல்லூரிகள்[தொகு]

விழாக்கள்[தொகு]

அருகில் உள்ள கோவில்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

 1. "Thanjavur and Dindigul to be upgraded as City Municipal Corporations". Chennaionline.com. பார்த்த நாள் 10 April 2013.
 2. தஞ்சாவூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
 3. "தஞ்சாவூர் மாவட்டத்தின் வரலாறு". தினகரன் தமிழ் நாளிதழ் (2012-01-21). பார்த்த நாள் 03 12 2017.
 4. "தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு சான்று கிடைத்தது". தீக்கதிர் தமிழ் நாளிதழ் (25 மே 2014). பார்த்த நாள் 25 மே 2014.
 5. தமிழாய்வு - தஞ்சாவூர்
 6. தமிழாய்வு - தஞ்சாவூர் பண்பாட்டுச் சின்னங்களும்
 7. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=248307

உசாத்துணை[தொகு]

குடவாயில் பாலசுப்ரமணியன், தஞ்சாவூர், அஞ்சனா பதிப்பகம், தஞ்சாவூர், 1997, 362+18 பக்கங்கள்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சாவூர்&oldid=2801370" இருந்து மீள்விக்கப்பட்டது