பெரம்பலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெரம்பலூர்
—  நகராட்சி  —
பெரம்பலூர்
இருப்பிடம்: பெரம்பலூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°14′N 78°53′E / 11.23°N 78.88°E / 11.23; 78.88ஆள்கூற்று: 11°14′N 78°53′E / 11.23°N 78.88°E / 11.23; 78.88
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் பெரம்பலூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் வி சாந்தா இ. ஆ. ப. [3]
நகராட்சிதலைவர் சி.ரமேஷ்
மக்களவைத் தொகுதி பெரம்பலூர்
மக்களவை உறுப்பினர்

ஆர் பி. மருதராஜா(அஇஅதிமுக)

மக்கள் தொகை 49,648 (2011)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


150 metres (490 ft)

இணையதளம் www.municipality.tn.gov.in/perambalur

பெரம்பலூர் (ஆங்கிலம்:Perambalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

பெயர் விளக்கம்[தொகு]

பெரும் புலியூர் என்று ஒரு தலம். அது மருவி இன்று பெரம்பலூர் என்று ஆகிவிட்டது.[4] பெரும்பல்லூர் என்னும் பெயர் மருவிப் பெரம்பலூர் என்று ஆகியுள்ளது என்று சொல்பவர்களும் உண்டு. இம்மாவட்டத்திலுள்ள வேறு சில ஊரின் பெயர்களை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த உண்மை விளங்கும். பெரும்பல்லூர் < பெரம்பலூர். குறும்பல்லூர் < குரும்பலூர். இளம்பல்லூர் < இளம்பலூர். இருவூர் < இரூர் (இரு = பெரிய). குறுவூர் < குரூர். (சங்ககாலத்தில் இளம்புல்லூர்க் காவிதி என்னும் புலவர் ஒருவர் இருந்தார்).

பெரம்பலூர் நகராட்சி பகுதி[தொகு]

பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் அரணாரை,சங்குபேட்டை,நான்கு ரோடு, துறை மங்கலம், புதியபேருந்து நிலையம், தீரன் நகர், மின்நகர், ரோஸ் நகர் ஆகியவை அடங்கும்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11°14′N 78°53′E / 11.23°N 78.88°E / 11.23; 78.88 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 மீட்டர் (469 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 29,698 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பெரம்பலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெரம்பலூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. கிருபானந்த வாரியார் எழுதிய “செஞ்சொல் உரைக்கோவை நூல் பக்:127
  5. "Perambalur". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
  6. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரம்பலூர்&oldid=2619484" இருந்து மீள்விக்கப்பட்டது