உள்ளடக்கத்துக்குச் செல்

தாம்பரம் மாநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாம்பரம் மாநகராட்சி
வகை
வகை
தலைமை
மேயர்
க. வசந்தகுமாரி, திமுக
2022-
துணை மேயர்
கோ. காமராஜ், திமுக
2022-
மாநகராட்சி ஆணையர்
அழகுமீனா இ.ஆ.ப
ராகுல் நாத் இ.ஆ.ப, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
2022
வலைத்தளம்
தாம்பரம் மாநகராட்சி

தாம்பரம் மாநகராட்சி (Tambaram City Municipal Corporation) தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தின் தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், மற்றும் அனகாபுத்தூர் ஆகிய 5 நகராட்சிப் பகுதிகளையும், சிட்லப்பாக்கம், மாதம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை மற்றும் திருநீர்மலை ஆகிய 5 பேரூராட்சிகளையும் இணைத்து புதிய தாம்பரம் மாநகராட்சியை நிறுவ 3 நவம்பர் 2021 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.[1][2][3][4][5] இதன் நிர்வாகத் தலைமையிடம் தாம்பரம் ஆகும்.[6][7]

தாம்பரம் மாநகராட்சி நிறுவுவதற்கான தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டத்திற்கு 5 நவம்பர் 2021 அன்று தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.[8] தற்போதைய மாநகராட்சித் தலைவராக (மேயர்) திராவிட முன்னேற்றக் கழகத்தின் க. வசந்தகுமாரி உள்ளார்.[9]

தாம்பரம் மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகள்

[தொகு]
  1. தாம்பரம்
  2. பல்லாவரம்
  3. பம்மல்
  4. அனகாபுத்தூர்
  5. செம்பாக்கம்

பேரூராட்சிகள்

  1. சிட்லப்பாக்கம்
  2. மாதம்பாக்கம்
  3. பெருங்களத்தூர்
  4. பீர்க்கன்கரணை
  5. திருநீர்மலை

தாம்பரம் மாநகராட்சி தேர்தல், 2022

[தொகு]

2022-ஆம் ஆண்டில் முதன் முதலாக தாம்பரம் மாநகராட்சியின் 70 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 54 வார்டுகளையும், அதிமுக 9 வார்டுகளையும், சுயேச்சைகள் 7 வார்டுகளையும் கைப்பற்றினர். திமுகவின் க. வசந்தகுமாரி மேயராகவும்; கோ. காமராஜ் துணை மேயராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.[10]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ordinance issued for formation of Tambaram Corporation". Archived from the original on 2021-12-02. பார்க்கப்பட்ட நாள் 2021-12-02.
  2. Chennai's southern gateway Tambaram now a municipal corporation
  3. "Tambaram now a municipal corporation". Archived from the original on 2021-11-04. பார்க்கப்பட்ட நாள் 2021-11-04.
  4. தாம்பரம் மாநகராட்சி உதயமானது: அரசிதழில் வெளியீடு
  5. தழிழ்நாட்டின் 20-வது மாநகராட்சியாக தாம்பரம் மாநகராட்சி நிறுவ அரசானை வெளியிடப்பட்டது.
  6. "Tambaram, Kancheepuram to become Municipal Corporations" (in en-IN). The Hindu. 2021-08-24. https://www.thehindu.com/news/national/tamil-nadu/tambaram-kancheepuram-to-become-municipal-corporations/article36077265.ece. 
  7. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  8. TN Governor promulgates ordinance to establish Tambaram Municipal Corporation
  9. "எனது முடிவுகளில் குடும்பத் தலையீடு இருக்காது - தாம்பரம் மேயர் க.வசந்தகுமாரி சிறப்புப் பேட்டி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-03-11.
  10. தாம்பரம் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் 2022

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாம்பரம்_மாநகராட்சி&oldid=3931241" இலிருந்து மீள்விக்கப்பட்டது