உள்ளடக்கத்துக்குச் செல்

மதுரவாயல்

ஆள்கூறுகள்: 13°03′56″N 80°09′39″E / 13.065600°N 80.160800°E / 13.065600; 80.160800
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுரவயல்
மதுரவயல்
இருப்பிடம்: மதுரவயல்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 13°03′56″N 80°09′39″E / 13.065600°N 80.160800°E / 13.065600; 80.160800
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
வட்டம் மதுரவாயல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். ஆல்பி ஜான் வர்கீஸ், இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி மதுரவாயல்
சட்டமன்ற உறுப்பினர்

க. கணபதி (திமுக)

மக்கள் தொகை 44,127 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


36 மீட்டர்கள் (118 அடி)

மதுரவாயல் (ஆங்கிலம்:Maduravoyal) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும், மதுரவாயல் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இது சென்னை மாநகராட்சி பகுதியாகவும் உள்ளது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இவ்வூர் அமைந்துள்ளது. சென்னை புறவழிச்சாலையின் இரண்டாம் கட்டத்தில் வெளி வளையச் சாலை, மதுரவாயலைக் கடந்து, சென்னையின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைப்பகுதிகளுக்குச் செல்கிறது. அண்மையில் உள்ள சுற்றுப் பகுதிகள்: கோயம்பேடு, நெற்குன்றம், அடையாளம்பட்டு, திருவேற்காடு, வளசரவாக்கம், ஆலப்பாக்கம் மற்றும் போரூர்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 44,127 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். மதுரவயல் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 78%; பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மதுரவயல் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கல்வி[தொகு]

  • டாக்டர் எம்ஜியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்
  • இராஜராஜேசுவரி பொறியியல் கல்லூரி
  • தாய் மூகாம்பிகை பல்தொழில்நுட்பக் கல்லூரி
  • மீனாட்சி பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
  • திரு செவன்இல்சு பல்தொழில்நுட்பக் கல்லூரி

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.{{cite web}}: CS1 maint: unfit URL (link)"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரவாயல்&oldid=3601971" இலிருந்து மீள்விக்கப்பட்டது