சென்னைத் துறைமுகம் – மதுரவாயல் விரைவுச்சாலை

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search
சென்னைத் துறைமுகம் – மதுரவாயல் உயர்மட்ட விரைவுச்சாலை
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்
நீளம்:19 km (12 mi)
பயன்பாட்டில்
இருந்த காலம்:
நவம்பர் 2009 – present
வரலாறு:2013இல் நிறைவுறும் எனத் திட்டம்
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:சென்னைத் துறைமுகம்
To:மதுரவாயல்
Location
Major cities:நுங்கம்பாக்கம்
Highway system

சென்னைத் துறைமுகம் – மதுரவாயல் விரைவுச்சாலை சென்னையில் 19 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவிற்கு உயரத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் ஒரு விரைவுவழிச் சாலையாகும். இது சென்னைத் துறைமுகத்தின் 10ம் எண் வாயிலில் துவங்கி கோயம்பேடு வரை கூவம் ஆற்றின் கரையோரமாகவும் பின்னர் தேசிய நெடுஞ்சாலை 4இன் நடுமத்தியிலும் மதுரவாயல் வரை உயர்ந்த தூண்களின் மேல் கட்டமைக்கப்பட்டு வருவதாகும்.

துவக்கம்[edit]

இச்சாலைத் திட்டம் 1815 கோடி மதிப்பீட்டில் 2009 ஆண்டு துவக்கப்பட்டது. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் மு. கருணாநிதி ஆகோயோரால் அடிக்கல் நாட்டப்பட்டு திட்டப்பணிகள் துவக்கப்பட்டது. இத்திட்டத்தால் சென்னையையில் போக்குவரத்து குறையும், துறை முகத்தில் இருந்து மதுரவாயல் செல்ல தற்போதைய நிலையில் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் ஆகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் 15 முதல் 20 நிமிடங்களில் இந்த இடத்தைக் கடக்க போதுமானதாகும். கனரக வாகனங்கள் இந்த உயர்மட்ட சாலையில் செல்வதால் போக்குவரத்து குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சாலை கட்டுமானப்பணிகள் 15 விழுக்காடு முடிந்திருந்த நிலையில் 2011 ஆண்டு புதியதாக பொறுப்பேற்ற அ.தி.மு.க அரசு இச்சாலை திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டதால் பணிகள் நின்றன.

மறுபரிசீலனை[edit]

2016 ஆம் ஆண்டு திசம்பரில் ஜெயலலிதாவின் மறைவையடுத்து புதிய முதல்வராக பொறுப்பேற்ற ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான புதிய அரசு திட்டத்தை சில மாற்றங்களுடன் செயல்படுத்த குழு அமைத்து பரிசீலிப்பதாக அறிவித்தது.[1]

கட்டமைப்புப் பணிகள்[edit]

மேற்கோள்கள்[edit]