சர்தார் பட்டேல் சாலை, சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சர்தார் பட்டேல் சாலை
பராமரிப்பு :தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள்
சென்னை மாநகராட்சி
நீளம்:1.99 mi (3.20 km)
கிழக்கு முனை:அடையாறு போர்ட்டிசு மலர் மருத்துவமனை அருகே உள்ள அடையாறு மேம்பாலம்
மேற்கு முனை:அண்ணா சாலை, கிண்டி, சென்னை
சர்தார் பட்டேல் சாலையிலுள்ள மேம்பாலம்

சர்தார் பட்டேல் சாலை சென்னையின் அடையாறுக்கும் கிண்டி வழியாக அண்ணா சாலைக்கும் இடையே உள்ள முதன்மைச் சாலையாகும். கிழக்கு மேற்காக செல்லும் இச்சாலையின் நீளம் 3.2-கிலோமீட்டர் (2.0 mi) ஆகும். கிழக்கு முனையில் இது வடக்குப்புறமாகத் திரும்பி அடையாறு ஆற்றைக் கடந்து இராசா அண்ணாமலைபுரத்தை எட்டுகின்றது.

மேற்கில் கிண்டி தொடருந்து நிலையத்திற்கும் சின்னமலை சந்திப்பிற்கும் இடையேயான அசோக் லேலண்ட் நிறுவனத் தலைமையகச் சந்திப்பில் அலெக்சாண்டர் சதுக்கமருகே துவங்குகின்றது. இச்சாலையில் ஆளுநர் வசிக்கும் இராசபவன் அமைந்துள்ளது. தவிரவும் முதன்மை கல்விக்கூடங்களான இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் போன்றவையும் இச்சாலையில் உள்ளன. கிண்டி தேசியப் பூங்கா, கிண்டி பாம்புப் பூங்கா, காந்தி மண்டபம், புற்றுநோய் ஆய்வுக்கழகம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், மத்திய கைலாசு கோவில் ஆகியன இச்சாலையில் அமைந்துள்ளன. மத்திய கைலாசத்துச் சந்திப்பில் ராஜீவ் காந்தி சாலை துவங்குகின்றது. இந்தச் சந்திப்பில் சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான பறக்கும் தொடருந்துத் தடத்தின் கசுத்தூரிபாய் நகர் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. தற்போது 24 மீ அகலமுள்ள இச்சாலையை 30.5மீ அகலமுள்ளதாக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு 2014இல் பணியைத் தொடங்கியது.[1]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "40 main roads in city to be widened". The Hindu (Chennai: The Hindu). 31 May 2014. http://www.thehindu.com/news/cities/chennai/40-main-roads-in-city-to-be-widened/article6067317.ece?homepage=true. பார்த்த நாள்: 10 Aug 2014.