முகப்பேர்
Jump to navigation
Jump to search
முகப்பேர் வடமேற்கு சென்னையின் வளர்ந்துவரும் குடியிருப்புப் பகுதியாகும். இது சென்னை மாநகரின் அம்பத்தூர் பகுதிக்கு உட்பட்டது ஆகும். முகப்பேரைச் சுற்றி பாடி, அம்பத்தூர் மற்றும் மன்னூர்பேட்டை ஆகிய தொழிற்பேட்டைகள் உள்ளன. உயர்தர பள்ளிகள் மற்றூம் சிறப்பு வாய்ந்த மருத்துவமனைகளின் இருப்பிடமாகவும் புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களாலும் இப்பகுதி பிரபலமடைந்து வருகிறது. சில காலத்திற்கு முன் சிற்றூராய் இருந்த முகப்பேர் அண்மையில் சென்னை மாநகராட்சியின் வசம் வந்தது.