தாம்பரம்

ஆள்கூறுகள்: 12°55′30″N 80°06′00″E / 12.924900°N 80.100000°E / 12.924900; 80.100000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாம்பரம்
—  மாநகராட்சி  —
தாம்பரம்
இருப்பிடம்: தாம்பரம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°55′30″N 80°06′00″E / 12.924900°N 80.100000°E / 12.924900; 80.100000
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் செங்கல்பட்டு
வட்டம் தாம்பரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆ. ர. ராகுல் நாத், இ. ஆ. ப
நகராட்சி தலைவர்
சட்டமன்றத் தொகுதி தாம்பரம்
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். ஆர். இராஜா (திமுக)

மக்கள் தொகை 1,74,787 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


43 மீட்டர்கள் (141 அடி)


தாம்பரம் தொடருந்து நிலையம்

தாம்பரம் (ஆங்கிலம்: Tambaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும். இது சென்னை புறநகர் பகுதி ஆகும். இது சென்னையின் நுழைவாயில் என அழைக்கப்படுகிறது.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 12°55′30″N 80°06′00″E / 12.924900°N 80.100000°E / 12.924900; 80.100000 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 43 மீட்டர் (141 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 39 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 44,432 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள் தொகை 1,74,787 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 92.2% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 963 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 17,535 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 977 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 26,496 மற்றும் 1,611 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 80.41%, இசுலாமியர்கள் 6.54%, கிறித்தவர்கள் 12.25%, தமிழ்ச் சமணர்கள் 0%, மற்றும் பிறர் 0.45% ஆகவுள்ளனர்.[4]

நுரையீரல் நோய் மருத்துவமனை[தொகு]

தாம்பரம் சானடோரியம் பகுதியில் நுரையீரல் நோய்களுக்கான அரசு சிறப்பு மருத்துவமனை இயங்குகிறது. [5][6]

சிறப்புகள்[தொகு]

சென்னைக் கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை முதலில் மின்சார தொடர்வண்டி இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னையின் நன்கறியப்பட்ட கல்லூரிகளில் ஒன்றான சென்னை கிறித்துவ கல்லூரி இங்கு உள்ளது. இந்திய வான்படையின் தளமும் இங்கு உள்ளது.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  3. "Tambaram". Falling Rain Genomics, Inc. http://www.fallingrain.com/world/IN/25/Tambaram.html. பார்த்த நாள்: ஜனவரி 30, 2007. 
  4. தாம்பரம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
  5. [1]
  6. The Story of Tambaram Sanotarium

வெளியிணைப்புகள்[தொகு]

அமைவிடம்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தாம்பரம்&oldid=3596709" இருந்து மீள்விக்கப்பட்டது