இடைக்கழிநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இடைக்கழிநாடு பேரூராட்சி தமிழ்நாட்டிலுள்ள செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்தில் அமைந்துள்ளது .[1] இதனை இடைக்கழி நாடு என்றும் கூறுவர்.

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இடைக்கழிநாட்டின் மக்கள் தொகை 28,172 25,769 ஆகும்.[2]

அமைவிடம்[தொகு]

இடைக்கழிநாடு செங்கல்பட்டுக்கு கிழக்கே 98 கிலோ மீட்டர் தொலைவிலும், மேல்மருத்தூரிலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவிலும், கல்பாக்கத்திலிருந்து 36 கிமீ தொலைவிலும், வகாள விரிகுடா 5 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இடைகழிநாடு என்பது ஒரு சிறியநாடு ஆகும்,தற்போதுள்ள முதலியார்குப்பம் கழிமுகப்பகுதிக்கும் , வெண்ணாங்குப்பட்டு கழிமுகப்பகுதிக்கும் , இடைப்பட்டதால் இது இடை-கழி-நாடு எனப்பெயர் பெற்றது. இது 24 கிராமங்களை உள்ளடக்கிய கடற்கரை பகுதி. சிறுபாணாற்றுப்படை இயற்றிய நல்லூர் நத்தத்தனார் பிறந்த நல்லூர் இடைகழிநாட்டில்தான் அமைந்துள்ளது. நல்லூர் நத்தத்தனாருக்கு தமிழக அரசு சார்பில் கிழக்கு கடற்கரை சாலை அருகே நினைவுத்தூண் அமைத்து சிறப்பித்துள்ளது.

முக்கனியான மா , பலா , வாழை இங்கு அதிகமாக காணப்படுகின்றது, இப்பகுதியில் பனைமரங்கள் அதிகமாக பரவிக்காணப்படுகிறது, மரங்கள், கடற்கரை, கழிமுகங்கள் என இயற்கை எழில் மிகுந்துள்ளது.

ஆலம்பரை கோட்டை[தொகு]

கி.பி 18-ம் நூற்றாண்டில் முகமதியர்களால் கட்டப்பட்ட கோட்டை ஆலம்பரை குப்பம் பகுதியில் அமைந்துள்ளது, இது ஒரு துறைமுகபட்டினமாகவும் திகழ்ந்துள்ளது, இக்கோட்டை சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கி.பி 1735 நவாப் தோஸ்த் அலிகான் இக்கோட்டையை ஆண்டார், கி.பி 1750 ல் ஆங்கிலேயர்களை எதிர்க்க உதவிய பிரெஞ்சு தளபதிக்கு சுஃபதார் முசார்பர்ஜங் இக்கோட்டையை பரிசளித்தார். கி.பி 1760 பிரெஞ்சு படையை வெற்றி கொண்ட ஆங்கிலேயப்படை இக்கோட்டையை கைப்பற்றி சிதைத்துள்ளது, நாம் தற்போது காண்பது அதன் எஞ்சிய பகுதிகளே... இக்கோட்டையின் கீழ்புறம் படகுத்துறை ஒன்று கப்பலில் பொருட்களை ஏற்றி இறக்க அமைக்கப்பட்டுள்ளது.படகுத்துறையின் நீளம் சுமார் 100 மீட்டராகும் அவற்றின் பகுதிகள் இன்றளவும் காணப்படுகின்றன.இன்று இக்கோட்டை தமிழக தொல்லியல்துறையால் பெயரளவில் பராமரிக்கிறது. இன்று இப்பகுதிகளில் படப்பிடிப்பு அதிகமாக நடைபெறுகிறது,முகதியர் காலத்தில் படப்பிடிப்பை மிஞ்சும் சாகசங்களும் நிகழ்ந்துள்ளன.

இடைக்கழிநாட்டின் சிறப்பு[தொகு]

இடைக்கழிநாடு பல விஷயங்களுக்கு பிரபலமானது. முக்கனியான மா , பலா , வாழை இங்கு அதிகமாக காணப்படுகின்றது . கடப்பாக்கம், ஆலம்பரைக்கோட்டை மற்றும் பனையூர் ஆகிய இடங்களில் இது அற்புதமான கடற்கரைகளைக் கொண்டுள்ளது. கடப்பாக்கத்திற்கு அருகே உள்ள சுற்றுலா தலமான ஆலம்பரைக்கோட்டை அரசு அங்கீகாரம் பெற்றது. இப்பகுதியில் உள்ள மக்கள் நிலத்தடி நீரை உபயோகிப்பார்கள், இடைக்கழிநாடு தண்ணீர் பற்றி பிரபலமான மேற்கோள் உள்ளது. அவர்கள் தண்ணீரை இளநீர் என்றே கூறுவர். கடப்பாக்கம் திரௌபதி அம்மன் கோயில், பராசக்தி அம்மன் கோயில் மற்றும் மீன் சந்தை அருகே உள்ள காசி விஸ்வநாதர் கோயில் பிரபலமானது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடைக்கழிநாடு&oldid=3605648" இருந்து மீள்விக்கப்பட்டது