திருப்போரூர்
| திருப்போரூர் | |
| ஆள்கூறு | 12°43′33″N 80°11′22″E / 12.725957°N 80.189323°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | செங்கல்பட்டு |
| வட்டம் | திருப்போரூர் |
| ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| மாவட்ட ஆட்சியர் | தி. சினேகா, இ. ஆ. ப |
| சட்டமன்றத் தொகுதி | திருப்போரூர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
13,666 (2011[update]) • 1,730/km2 (4,481/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi) |
திருப்போரூர் (ஆங்கிலம்: Thiruporur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் வட்டத்தின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இங்கு திருப்போரூர் கந்தசாமி கோயில் உள்ளது. இங்கு திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது. திருப்போரூர் நகரம் முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. திருப்போரூர் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[3]
அமைவிடம்
[தொகு]திருப்போரூர் பேரூராட்சியிலிருந்து காஞ்சிபுரம் 65 கி.மீ.; செங்கல்பட்டு 25 கி.மீ.; சென்னை 45 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]8 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3256 வீடுகளும், 13,666 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 84.52% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 945 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]
புகைப்பட காட்சியகங்கள்
[தொகு]-
திருப்போரூர் இ-6 காவல் நிலையம்
-
திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1225897-kanchipuram-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 22 August 2025.
- ↑ Thiruporur Town Panchayat
- ↑ Thiruporur Population Census 2011