நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு வட்டத்தில் அமைந்த நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியானது 12 செப்டம்பர் 2021 அன்று நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[1] இந்த நகராட்சி செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்குட்பட்டது.

அமைவிடம்[தொகு]

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி, காஞ்சிபுரத்திலிருந்து 57 கி.மீ. தொலைவில் உள்ளது. கூடுவாஞ்சேரியில் தொடருந்து நிலையம் உள்ளது. இதன் கிழக்கே திருப்போரூர் 23 கி.மீ.; மேற்கில் திருப்பெரும்புதூர் 28 கி.மீ.; வடக்கில் பீர்க்கன்கரணை 5 கி.மீ.; தெற்கில் மறைமலைநகர் 7 கி.மீ. தொலைவில் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]