செங்கல்பட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செங்கல்பட்டு
—  முதல் நிலை நகராட்சி  —
செங்கல்பட்டு
இருப்பிடம்: செங்கல்பட்டு
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°42′N 79°59′E / 12.7°N 79.98°E / 12.7; 79.98ஆள்கூற்று: 12°42′N 79°59′E / 12.7°N 79.98°E / 12.7; 79.98
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் செங்கல்பட்டு
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
நகராட்சிதலைவர் அன்புச்செல்வன்
மக்கள் தொகை 65,695 (2015)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


36 மீட்டர்கள் (118 ft)

செங்கல்பட்டு (Chengalpattu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைநகராகும். சென்னையின் புறநகர் பகுதியாகும். 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.

பெயர் மூலம்[தொகு]

முன்பு இங்குள்ள நீர்நிலைகளில், செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்திருந்தன என்பர். எனவே, செங்கழுநீர்ப்பட்டு என்றழைக்கப்பட்டது. அது மருவி செங்கல்பட்டு என அழைக்கப்படலாயிற்று.

வரலாறு[தொகு]

விஜயநகரப் பேரரசு வழி அரசர் கட்டிய கோட்டை இங்குள்ளது. அவர்களின் தலைநகராக குறிப்பிட்ட காலத்திற்கு இருந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 12°42′N 79°59′E / 12.7°N 79.98°E / 12.7; 79.98 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 36 மீட்டர் (118 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 62,579 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 30,982 ஆண்கள், 31,597 பெண்கள். செங்கல்பட்டு மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். செங்கல்பட்டு மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கல்வி[தொகு]

இந்நகரில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிலையங்கள் உள்ளன. உதாரணமாக இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசினர் கலைக்கல்லூரியை கூறலாம். இன்னும் பல கல்வி நிலையங்கள் உள்ளன.

போக்குவரத்து[தொகு]

தமிழ்நாட்டின் பல பகுதிகளை இணைக்கும் வகையில் செங்கல்பட்டின் வழியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

செங்கல்பட்டு ஒரு தொடருந்து சந்திப்பாகும். முக்கிய அகலப் பாதையைக் கொண்டுள்ள இவ்வூரில் தமிழ்நாட்டின் தெற்கு நோக்கிச் செல்லும் தொடருந்துகள் நின்றுசெல்லும்.

சான்றுகள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "செங்கல்பட்டு". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  4. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை".
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கல்பட்டு&oldid=2782695" இருந்து மீள்விக்கப்பட்டது