வீரப்பன்சத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வீரப்பன்சத்திரம் மண்டலம் (ஈரோடு)
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 72,607 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

வீரப்பன்சத்திரம் (ஆங்கிலம்:Veerappanchatram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

இது கடந்த 2007ஆம் ஆண்டு வரை தனி நகராட்சியாக செயல்பட்டு வந்தது. பின்னர் 2008 முதல் ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு மாநகரின் ஒரு மண்டலமாக செயல்பட்டு வந்தது. தற்போது இந்த மண்டலத்தின் தலைமையிடம் வீரப்பன்சத்திரம் பகுதியிலிருந்து சூரியம்பாளையம் பகுதிக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஈரோடு மாநகராட்சி வீரப்பன்சத்திரம் 1வது மண்டலம் சுமார் 34ச.கி.மீ பரப்பளவில் மொத்தம் 1,36,000 மக்கள் வசிக்கின்றனர்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 72,607 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். வீரப்பன்சத்திரம் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வீரப்பன்சத்திரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரப்பன்சத்திரம்&oldid=3166149" இருந்து மீள்விக்கப்பட்டது