ம. வரலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ம. வரலட்சுமி (M. Varalakshmi) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் 15 ஆவது சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட செங்கற்பட்டு சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 2016 ஆண்டைய தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் காஞ்சிபுரம் மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள ஆப்பூரில் வசித்து வருகிறார். இவரது கணவர் ப. மதுசூதனன் ஆவார். இவர் முன்னதாக கிராம சுகாதார செவிலியராகப் பணியாற்றியுள்ளார். 2016 சட்டமன்றத் தேர்தலில் இவரை எதிர்த்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கமலக்கண்ணன் போட்டியிட்டார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "15th Assembly members". TN Goverrnment. பார்த்த நாள் 9 ஏப்ரல் 2019.
  2. "திராவிட முன்னேற்றக் கழகம் - மக்கள் பிரதிநிதிகள்". திராவிட முன்னேற்றக் கழகம். பார்த்த நாள் 9 ஏப்ரல் 2019.
  3. "காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் 2016 - சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு". விகடன். பார்த்த நாள் 9 ஏப்ரல் 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._வரலட்சுமி&oldid=2689926" இருந்து மீள்விக்கப்பட்டது