ஒட்டன்சத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒட்டன்சத்திரம்
—  நகராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
நகராட்சி தலைவர் பழனியம்மாள் (பாலசுப்பிரமணியன்)
சட்டமன்றத் தொகுதி ஒட்டன்சத்திரம்
சட்டமன்ற உறுப்பினர்

சக்கரபாணி (திமுக)

மக்கள் தொகை 24,135 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

ஒட்டன்சத்திரம் (ஆங்கிலம்:ODDANCHATRAM), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி. ஒட்டன்சத்திரம் வட்டத்தின் தலைமையிடம் ஆகும். தமிழகத்திலேயே கோயம்பேடுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப் பெரிய காய்கறி சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகிறது. மேலும் காய்கறி சந்தையைப் போன்றே தயிர், வெண்ணெய்க்கு (பாலில் இருந்து பிரித்தெடுக்கும் வெண்ணெய்,இவைகளுக்காக சுமார் 600 கடைகள் உள்ள மிகப்பெரிய சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து கேரளா, கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தயிர்,வெண்ணெய் அனுப்பப்படுகிறது.

பழம்பெயர்[தொகு]

ராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் உப்பிலியபுரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டதாக அறியமுடிகிறது. முந்தைய வருவாய் ஆவணங்கள், நிலம் வர்த்தக ஆவணங்கள் (கிரைய பத்திரம்) போன்றவற்றில் உப்பிலியபுரம் என்ற பெயரை காணமுடிகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,135 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஒட்டன்சத்திரம் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. ஒட்டன்சத்திரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

விவசாயம்[தொகு]

இங்கு முக்கிய தொழில் விவசாயம் ஆகும். மக்காச்சோளம், புகையிலை,காய்கறிகள் மிளகாய், வெங்காயம், நிலக்கடலை, முருங்கை, பருத்தி, சூர்யகாந்தி, கரும்பு, உள்ளிட்ட பயிர்கள் பயிர் செய்யப்படுகின்றன.

நல்காசி (நங்காஞ்சி) ஆறு அணை[தொகு]

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கொடைக்கானலுக்கு இங்கிருந்து வடகாடு, பாச்சலூர் ,தாண்டிக்குடி ,பண்ணைக்காடு வழியாக மலைப்பாதையில் பேருந்து உள்ளது. இம்மலையில் 15 கி.மீ தொலைவில் வடகாடு (ஒட்டன்சத்திரம் வட்டம்)ஊரின் அடர்ந்த வனப் பகுதியில் உருவாகும் சிற்றாறுகள் பரப்பலாறு அணையில் தேங்கி, உபரி நீர் சிறு ஆறாக நல்காசி (நங்காஞ்சி ஆறு)பெயரில் விருப்பாட்சி என்ற கிராமத்திற்கு அருகில் தலையூத்து என்ற இடத்தில் 60 அடி உயரத்திலிருந்து [[|அருவி|அருவியாக]] விழுந்து, வடகிழக்காக ஓடி இடையகோட்டை என்ற ஊருக்கு அருகில் நல்காசி (நங்காஞ்சி) ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நங்காஞ்சியாறு நல்காசி ஆறு அணையில் தேக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

விருப்பாச்சி (விருப்பாட்சி)[தொகு]

விருப்பாட்சி ஒட்டன்சத்திரத்திற்குட்பட்ட ஒரு ஊராட்சியாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் மலைகள் சூழ்ந்த நல்காசி (நங்காஞ்சி) ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகான சிற்றூராகும். தமிழக அரசால் மணிமண்டபம் எழுப்பியுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரர் கோபால் நாயக்கர் பிறந்த ஊராகும். சுதந்திர இந்தியாவிற்கு முன்பு இந்த ஊரில் ஜமீன்தார் ஆட்சி இருந்தது. ஒட்டன்சத்திரம் வட்டத்திற்குட்பட்ட விருப்பாச்சி ஜமீனுடன்வேலூர்,இடையகோட்டை,சத்திரப்பட்டி போன்ற ஜமீன்கள் நெறுங்கிய தொடர்புகள் இருந்துள்ளது. வடகாடு, பாச்சலூர், தாண்டிக்குடி, பண்ணைக்காடுஆகிய மலைப்பகுதியில் விளையும் மலை வாழைக்கு பெரிய சந்தை இங்கு இருந்துள்ளது. இன்றைய வாகனப் போக்குவரத்தால் தற்போது சந்தைக் கட்டிடங்கள் இடிந்து சிதைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டன்சத்திரம்&oldid=2468443" இருந்து மீள்விக்கப்பட்டது