செய்யாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருவத்திபுரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
திருவத்திபுரம்
—  இரண்டாம் நிலை நகராட்சி  —
திருவத்திபுரம்
இருப்பிடம்: திருவத்திபுரம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°40′00″N 79°32′24″E / 12.6667164°N 79.5399414°E / 12.6667164; 79.5399414ஆள்கூற்று: 12°40′00″N 79°32′24″E / 12.6667164°N 79.5399414°E / 12.6667164; 79.5399414
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் கே. எஸ். கந்தசாமி இ. ஆ. ப. [3]
நகராட்சித் தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

திருவத்திபுரம் (Thiruvathipuram) அல்லது செய்யாறு (Cheyyaru) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள் செய்யார் வட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை நகராட்சியாக திருவத்திபுரம் நகராட்சி உள்ளது. இது ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

இது திருவண்ணாமலை மாவட்டத்தின் வடமேற்கு மூலையில் செய்யாறு நதிக்கரையில் மற்றும் ஆற்காடு- செய்யாறு - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருவண்ணாமலை - ஆரணி - காஞ்சிபுரம் ஆகிய இணைக்கும் இடத்தில் அமைந்துள்ள ஓர் அழகிய நகரமாகும். இது திருவண்ணாமலை மாவட்டத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். இங்கு துணை மாவட்டாட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகங்கள் உள்ளன. இந்நகரம் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கும் மற்றும் பட்டு நகரான ஆரணிக்கும், மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் மிக அருகாமையில் உள்ளது.


செய்யாறு வருவாய் கோட்டம்

அமைவிடம்[தொகு]

செய்யாறு நகரம் திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை - ஆரணி - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையிலும் ஆற்காடு - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் இணைக்கும் இடத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. மாவட்ட தலைமையிடம் மற்றும் ஆண்மீக நகரான திருவண்ணாமலையிலிருந்து 94 கிமீ தொலைவிலும், பட்டு மற்றும் அரிசி நகரான ஆரணியிலிருந்து 33 கிமீ தொலைவிலும், ஆற்காடிலிருந்து 41 கிமீ தொலைவிலும், வேலூரிலிருந்து 65 கிமீ தொலைவிலும், பட்டு நகரான காஞ்சிபுரத்திலிருந்து 30 கிமீ தொலைவிலும், வந்தவாசியிலிருந்து 21 கிமீ தொலைவிலும் மற்றும் மாநில தலைமையிடமான சென்னையிலிருந்து 110 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

சாலை வசதிகள்[தொகு]

செய்யாறு நகரத்தை இணைக்கும் வகையில் சாலை வசதிகள் வலைப்பின்னலாக அமைக்கப்பட்டுள்ளது.

1. திண்டிவனம் - செய்யாறு - ஆற்காடு சாலை

2. ஆரணி - செய்யாறு - காஞ்சிபுரம் - தாம்பரம் சாலை

3. செய்யாறு - வாழைப்பந்தல் - ஆரணி சாலை

4. செய்யாறு - பெரணமல்லூர் சாலை

5. செய்யாறு - அனக்காவூர் - உத்திரமேரூர் சாலை

6. செய்யாறு - வெம்பாக்கம் - பிரம்மதேசம் சாலை

ஆகிய சாலைகள் செய்யாறு நகரத்தை இணைக்கிறது.

போக்குவரத்து வசதிகள்[தொகு]

செய்யாறு நகரத்தில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், வந்தவாசி, திருவண்ணாமலை, ஆரணி, ஆற்காடு, வேலூர், தாம்பரம், சேலம் ஆகிய நகரங்களுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் மேல்மருவத்தூர், சேத்துப்பட்டு, போளூர், பிரம்மதேசம், வெம்பாக்கம், திருத்தணி, திருப்பதி, உத்திரமேரூர், திண்டிவனம், புதுச்சேரி, செங்கம், பெங்களூரு,திருச்சி, ஓசூர், படவேடு ஆகிய நகரங்களுக்கு இரண்டு அல்லது மூன்று பேருந்து சேவைகள் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 37,802 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். திருவத்திபுரம் மக்களிள் கல்வியறிவு பெற்றோர் 76.59% ஆகும்.[4]

தொழில்வளம்:[தொகு]

2008 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை தொன்றுதொட்டு செய்யாறு மக்களுக்கு வேளாண்மை சார்ந்த தொழிலும் நெசவுத் தொழிலும் மட்டுமே முக்கிய தொழில்களாக இருந்தன. செழிப்பான கிராமங்களால் சூழப்பட்டதால், செய்யாறு முக்கிய வேளாண் நகரமாக விளங்குகிறது. நகருக்கு வெளியே செய்யாறு - வந்தவாசி சாலையில் 5 கி. மீ தொலைவில் தமிழ்நாட்டின் முக்கிய சர்க்கரை ஆலைகளுள் ஒன்றான செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையும், ஆவின் பால் பதனிடு நிலையமும் அமைந்துள்ளது. சுற்றுப்புற கிராமங்களிருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் பால் குளிரூட்டப்பட்டு சென்னைக்கு செல்கிறது. இவை தவிர தனியாருக்கு சொந்தமான பெரிய பால்கோவா தயாரிப்பகமும் உள்ளது. இங்கு நாள்தோறும் தயாராகும் பால்கோவா சென்னை, ஓசூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களுக்கு தினமும் அனுப்பப்படுகிறது. அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையமும் உழவர்சந்தையும் சுற்றுப்புற கிராமங்களிருந்து வரும் விவசாயிகளுக்கு பலன் அளிக்கின்றன. நெசவு இங்கு பாரம்பரிய தொழிலாக உள்ளது. கைத்தறி மற்றும் விசைத்தறிகளின் மூலம் பட்டு மற்றும் பருத்தி ஆடைகள் நெய்யப்படுகின்றன.

செய்யாறு ஐந்து கிலோ மிட்டர் அருகில் உள்ள ஜடேரி என்னும் கிராமத்தில் இருந்து வைணவர் நெற்றிகளில் இடும் திருமண் என்னும் நாம கட்டி இந்த கிராம மண்ணில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.

2008 ஆம் ஆண்டிற்குப் பின்னர் செய்யாறு மிக பெரிய தொழில் வளர்ச்சி கண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற கழகத்தின் சார்பில் செய்யாறுக்கு அருகில், செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் மாங்கால் கூட்டு சாலை அருகே செய்யாறு தொழிற்பேட்டை (Cheyyaru SIPCOT) மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலமும் (SEZ) அமைக்கப்பெற்று வருகின்றன. சென்னைக்கு அருகில் உள்ளதாலும் திருபெரும்புதூர் மற்றும் ஒரகடம் தொழிற்பேட்டைகளின் இடப்பற்றாக் குறையை நீக்க மாற்று இடம் தேவைப்படுவதாலும் செய்யாறு தேர்ந்தெடுக்கப்படுள்ளது. ஆரம்பிக்கப்பெற்று இரு ஆண்டுகளில் தைவான் நாட்டின் Nike & Lotus காலணி தயாரிப்பகம், அசோக் லே-லாண்டின் அலுமினிய வார்ப்பகம், Llyods ஆகிய நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கிவிட்டன. செய்யாறு sipcot ல் மஹேந்திரா & மஹேந்திரா மற்றும் ஸ்விங்ஷட்டர் ஆகிய பெருங் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை தொடங்கிவிட்டனர்.மற்றும் இருமந்தாங்கள் அருகே Voltas switch நிறுவனம் தங்களின் உற்பத்தியை தொடங்கிவிட்டனர்.

அருள்மிகு வேதபுரீஸ்வரர் ஆலய தல வரலாறு[தொகு]

ஆற்றங்கரை பலத்தின் மேலிருந்து பார்க்கும்போது வேதபுரீஸ்வரர் ஆலயம்

அருள்மிகு பாலகுஜாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் ஆலயம் தொண்டை மண்டலத்தின் 32 பாடல்பெற்ற தலங்களுள் எட்டாவது தலமாகும். இங்கு சிவன் வேதங்களை புரிபவனாக மேற்கு நோக்கி அமைந்துள்ளார். சிவனடியார் ஒருவர் நதிக்கரையில் பனை மரங்களை நட்டு சிவனை வணங்கி வந்தார். அப்பனை மரங்கள் அனைத்தும் கனி தராத ஆண் பனைகளாகின. இதனை கண்டு, சமணர், அச்சிவனடியாரை ஏளனம் செய்தனர். இதனைச் செவியுற்ற திருஞானசம்பந்தர் சமணர்களோடு சொற்போரில் ஈடுபட்டார். இருவரும் தத்தம் இறைவனை வேண்டி தமிழ் செய்யுள் ஏற்றி செய்யாற்றில் விட்டனர். திருஞானசம்பந்தரின் செய்யுள் எதிர் நீந்தி செய்யாறைவென்றான் என்னும் ஊரில் கரை ஒதுங்கியது. சமணர்களின் செய்யுள் ஆற்றின் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு அனகப்பதூர் எனுமிடத்தில் ஒதுங்கியது. திருஞானசம்பந்தர் சிவனை வேண்டி பத்து பதிகங்களைப் பாடி ஆண் பனைகளை பெண் பனைகளாக மாற்றினார். இன்றும் இத்தல விருட்சமான பனை மரங்கள் கார்த்திகை மாதத்தில் ஆண் பனைகளாக பனை பூக்களையும், சித்திரை மாதத்தில் பெண் பனைகளாக பனை கனிகளையும் ஒரே மரத்தில் விளைவிக்கின்றன. இது வேறு எங்கும் இல்லாத தாவரவியல் விந்தை ஆகும். சிவனை நோக்காது வாயிலை நோக்கி அமர்ந்துள்ள நந்தி இக்கோவிலின் இன்னொரு சிறப்பாகும். வேதங்களை புரியும் இறைவனுக்கு இடையூறுகள் வராமலிருக்க நந்தி சிவனை நோக்காமல் வாயிலை நோக்கி காவல்காப்பதாக நம்பப்படுகிறது. ஒரு சமயம் சிவபக்தரான தொண்டை மன்னனை எதிரிகளிடமிருந்து காப்பதற்காக வாயிலை நோக்கி நந்தி திரும்பியது எனும் செவி வழி கதையும் வழக்கில் உண்டு.

ஒரே இடத்தில ஐம்பூத(பஞ்ச)தலங்கள், ஆறடி உயரத்தில் தென்முகக் கடவுள் ஆகியவையும் இத்தலத்தின் சிறப்புகளாகும். தொண்டை மன்னர்கள், பல்லவர்கள், விஜய நகர மன்னர்கள் மற்றும் சோழர்கள் இத்தலத்திற்கு திருப்பணிகள் செய்தனர். கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ள கன்னட, தெலுங்கு மொழி கல்வெட்டுகள் விஜயநகர மன்னர்களின் பங்களிப்பையும், 11 ஆம் மற்றும் 13 ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த சோழர்களின் குறிப்புகளும் இக்கோவிலின் வரலாற்றை பறைசாற்றுகின்றன. சித்திரை மாதத்தில் நடைபெறும் ஆற்றுத்திருவிழா, தெப்பல்-தோப்பு திருவிழா மற்றும் பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவம் ஆகியவை சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறும் கோலாகலங்களாகும். தினமும் முக்கால பூஜைகள், பிரதோச சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. திருவத்திபுரம் நகராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்யாறு&oldid=2819295" இருந்து மீள்விக்கப்பட்டது