எடப்பாடி

ஆள்கூறுகள்: 11°34′57″N 77°50′06″E / 11.5824°N 77.83504°E / 11.5824; 77.83504
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எடப்பாடி
—  நகராட்சி்  —
அமைவிடம் 11°34′57″N 77°50′06″E / 11.5824°N 77.83504°E / 11.5824; 77.83504
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் செ . கார்மேகம், இ. ஆ. ப [3]
நகராட்சித் தலைவர் -
ஆணையர்
சட்டமன்றத் தொகுதி எடப்பாடி
சட்டமன்ற உறுப்பினர்

எடப்பாடி க. பழனிசாமி (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

1,05,804 (2011)

3,749/km2 (9,710/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 28.22 சதுர கிலோமீட்டர்கள் (10.90 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.municipality.tn.gov.in/Idappadi/

எடப்பாடி (ஆங்கிலம்:Edappadi) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்[4]. ஒரு காலத்தில் அதன் விசைத்தறி தொழிலால் அறியப்பட்ட ஊர் ஆகும். சேலத்திலிருந்து மேற்குத் திசையில் முப்பது கிலோமீட்டர் தொலைவில் எடப்பாடி என்ற ஊர் அமைந்துள்ளது. எடப்பாடிக்குக் கிழக்கே மேட்டூரும், மேற்கே ஈரோடும், தெற்கே பவானியும் எல்லைகளாக அமைந்துள்ளன. இடைப்பாடி என்ற இவ்வூரின் பெயரை எடப்பாடி என்று அழைத்தும் எழுதியும் வருகின்றனர்.[5]

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,05,804 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். எடப்பாடி மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. எடப்பாடி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

தொழில்[தொகு]

எடப்பாடியில் அதிக அளவில் நெசவுத் தொழில் (துண்டு தயாரித்தல்) நடைபெறுகிறது. மேலும் விவசாயம் மற்றும் இதர தொழில்கள் சார்ந்த வேலைகள் நடைபெறுகின்றது.

அரசியல்[தொகு]

சட்டசபை தொகுதியில் 2004 வரை திருச்செங்கோடு (மக்களவை தொகுதியில்) ஒரு பகுதியாக இருந்தது.

இவ்வூரைச் சேர்ந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எடப்பாடி க. பழனிசாமி என்பவர் 21வது தமிழக முதலமைச்சராக 14 பிப்ரவரி 2017 முதல் பதவி வகித்து வருகிறார்.

அருகில் பார்க்கக்கூடிய ஊர்கள்[தொகு]

கோவில்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/collectors. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305022918/http://tnmaps.tn.nic.in/municipalitynew.php?dcode=08. 
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-09-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160909203332/https://thoguppukal.wordpress.com/2011/07/23/%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf/. 
  6. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு" இம் மூலத்தில் இருந்து 2004-06-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999. பார்த்த நாள்: அக்டோபர் 20, 2006. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எடப்பாடி&oldid=3748931" இருந்து மீள்விக்கப்பட்டது