கொங்கணாபுரம்
| கொங்கணாபுரம் | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | 11°35′N 77°55′E / 11.58°N 77.92°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சேலம் |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | விஜய்[2] |
| மாவட்ட ஆட்சியர் | இளம் பகவத், இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை | 8,086 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 305 மீட்டர்கள் (1,001 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/konganapuram |
கொங்கணாபுரம் (ஆங்கிலம்: Konganapuram) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் எடப்பாடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கொங்கணாபுரம் பேரூராட்சியில் உள்ளது.
அமைவிடம்
[தொகு]கொங்கணாபுரம் பேரூராட்சிக்கு தெற்கே சேலம் 36 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 12 கி.மீ. தொலைவில் உள்ள மகுடஞ்சாவடியில் உள்ளது. இதன் மேற்கில் எடப்பாடி 10 கி.மீ.; வடக்கில் ஓமலூர் 34 கி.மீ., தெற்கில் ஈரோடு 36 கி.மீ. தொலைவிலும் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]9.60 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கும், சேலம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,614 வீடுகளும், 9,286 மக்கள்தொகையும், கொண்டது.[5]
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 11°35′N 77°55′E / 11.58°N 77.92°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 305 மீட்டர் (1000 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ கொங்கணபுரம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Konganapuram Population Census 2011
- ↑ "Konganapuram". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)