காடையாம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காடையாம்பட்டி
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் ஓமலூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ரா.பாஜிபாகரே இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை

அடர்த்தி

11 (2011)

[convert: invalid number]

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 13.61 square kilometres (5.25 சது மை)
இணையதளம் www.townpanchayat.in/kadayampatty

காடையாம்பட்டி (ஆங்கிலம்:Kadayampatti) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் ஓமலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

சேலம் - தர்மபுரி செல்லும் சாலையில், தீவட்டிப்பட்டி ஊராட்சி -டேனிஷ்பேட்டை ஊராட்சிக்கு செல்லும் பாதையில் 2 கிமீ தொலைவில் காடையம்பட்டி உள்ளது. காடையம்பட்டி பேரூராட்சிக்கு தெற்கில் சேலம் 31 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 5 கிமீ தொலைவில் உள்ள டேனிஷ்பேட்டையில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

13.61 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 38 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஓமலூர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,857 குடும்பங்களும், 11,390 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 69.74% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 924 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. காடையம்பட்டி பேரூராட்சியின் இணையதளம்
  5. Kadayampatti Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=காடையாம்பட்டி&oldid=2692219" இருந்து மீள்விக்கப்பட்டது