சேலம் மேற்கு வட்டம்
Appearance
சேலம் மேற்கு வட்டம், தமிழ்நாட்டின், சேலம் மாவட்டத்தில் அமைந்த 13 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டம் சேலம் வட்டத்தின் மேற்கு பல பகுதிகளைக் கொண்டு 12 பிப்ரவரி 2014 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1] இதன் நிர்வாகத் தலைமையிட வட்டாட்சியர் அலுவலகம் சேலம் நகரத்தில் இயங்குகிறது.
சேலம் மேற்கு வட்டம் 40 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது. [2]