மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாக உள்ளது.[1] இவ்வூராட்சி ஒன்றியத்தில் 12 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.[2] சங்ககிரி வட்டத்தில் உள்ள மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மகுடஞ்சாவடியில் உள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 70,169 ஆகும். அதில் ஆண்கள் 36,749; பெண்கள் 33,420 உள்ளனர். பட்டியல் சாதி மக்களின் மொத்த மக்கள் தொகை 5,992 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 3,097; பெண்கள் 2,895. பட்டியல் பழங்குடி மக்களின் மொத்த மக்கள் தொகை 351 ஆக உள்ளது. அதில் ஆண்கள்; 188; பெண்கள் 163.[3]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த 12 கிராம ஊராட்சி மன்றங்கள்:[4]

  1. மெக்னாடோனால்டு சாவடி (மகுடஞ்சாவடி)
  2. கூடலூர்
  3. கண்டர்குலமாணிக்கம்
  4. நடுவனேரி
  5. அ.தாளையூர்
  6. காளிகவுண்டம்பாளையம்
  7. கன்னந்தேரி
  8. தப்பக்குட்டை
  9. ஏகாபுரம்
  10. கனககிரி
  11. அ.புதூர்
  12. வைகுந்தம்

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-25.
  3. Salem District Census-2011
  4. மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்