சேலம்-வடக்கு சட்டமன்றத் தொகுதி (Salem North Assembly constituency) சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது சேலம் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது. 2021-இல் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.75 இலட்சம் ஆகும். சேலம் மாநகராட்சியின் வார்டு எண் 6 முதல் 16 வரை மற்றும் வார்டு எண் 26 முதல் 36 வரை. (மொத்தம் 22 வார்டுகள்) மற்றும் கன்னங்குறிச்சிபேரூராட்சியும் இத்தொகுதியில் உள்ளது. இத்தொகுதியில் வன்னியர், தேவாங்க செட்டியார், நாயக்கர், நாயுடு,செங்குந்த முதலியார், நாடார் மற்றும் ஆதி திராவிடர்களும், செவ்வாய்ப்பேட்டைப் பகுதியில் சௌராட்டிரர், இசுலாமியர் மற்றும் கிறித்துவர்களும் உள்ளனர்.[3]
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.