பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி
| பாப்பிரெட்டிப்பட்டி | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 60 | |
தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தருமபுரி |
| மக்களவைத் தொகுதி | தருமபுரி |
| நிறுவப்பட்டது | 2011 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | அதிமுக |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
பாப்பிரெட்டிப்பட்டி தர்மபுரி மாவட்டத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி 1977-ஆம் ஆண்டு முதல் மொரப்பூர் சட்டமன்ற தொகுதியாக இருந்து வந்தது. பின்பு தொகுதி சீரமைப்பு நடவடிக்கையில் 2011-ஆம் ஆண்டு முதல் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியாக மாறியது.
இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 59 ஆயிரத்து 417 பேர். இதில் ஆண் வாக்காளர்கள் 1,30,573 பேர் மற்றும் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 1,28,814 ஆகும். அதிமுக சார்பில் ஏ. கோவிந்தசாமி. திமுக சார்பில் டாக்டர் எம். பிரபு ராஜசேகர், மக்கள் நீதி மய்யம் சார்பில் வி. ஸ்ரீனிவாசன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரமேஷ், அமமுக சார்பில் பி. பழனியப்பன் நிறுத்தப்பட்டனர்.[1]
இந்த தொகுதியில் தருமபுரி வட்டம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தின் பகுதிகள் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, பி. மல்லாபுரம், கடத்தூர் என 3 பேரூராட்சிகள் உள்ளது.
இந்த சட்டமன்ற தொகுதியின் பிரதான தொழில் விவசாயம், சிறு தானியங்கள், நெல், கரும்பு, வாழை, பாக்கு, மர வள்ளிக் கிழங்கு, கடலை, வெற்றிலை, பூ போன்றவை பயிரிடப்படுகின்றது. நீர் பாசனத்திற்கு சேர்வராயன் மலையில் இருந்து வரும் வாணியாறு நீர் தேக்க தண்ணீர் மட்டுமே. மீதி தேவையை நிலத்தடியில் கிணறு, ஆழ்துளை மூலம் தண்ணீர் பாசனம் பெறுகிறது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- தருமபுரி வட்டம் (பகுதி)
கே.நடுஅள்ளி, நல்லன்அள்ளி, கோணங்கிநாய்க்கன்அள்ளி, வெள்ளானபட்டி, ஆண்டிஅள்ளி, கிருஷ்ணாபுரம், புழுதிக்கரை, கொண்டம்பட்டி, குப்பூர், அனேதர்மபுரி, செட்டிக்கரை, நாய்க்கனஅள்ளி, அக்கமனஅள்ளி, மூக்கனூர், வெள்ளோலை, உங்கரானஅள்ளி, நூலஅள்ளி, முக்கல்நாய்க்கனஅள்ளி, வத்தலமலை, திப்பிரெட்டிஅள்ளி, வேப்பிலைமுத்தம்பட்டி, கொண்டகரஅள்ளி மற்றும் குக்கல்மலை கிராமங்கள்,
- பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் (பகுதி)
மணியம்பாடி, சிங்கிரிஅள்ளி, கெரகோடஅள்ளி, சிந்தல்பாடி, லிங்கிநாயக்கனஅள்ளி, போசிநாய்க்கனஅள்ளி, நல்லசூட்லஅள்ளி, கெடகாரஅள்ளி, கடத்தூர், மடதஅள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, பசவபுரம், குருபரஅள்ளி, தின்னஅள்ளி, பாலசமுத்திரம், பெத்தூர், சிக்கம்பட்டி, கோபிசெட்டிப்பாளையம், பாப்பிசெட்டிப்பட்டி, அண்ணாமலைப்பட்டி, அல்லாலபட்டி, தென்கரைக்கோட்டை, துரிஞ்சிஅள்ளி, ராமேயனஅள்ளி, பெத்தசமுத்திரம், தாதனூர், பபுனிநாய்க்காஅள்ளி, உனிசேனஅள்ளி, பத்தலமலை, ரேகடஅள்ளி, மேக்கலநாய்க்கனஅள்ளி, பாப்பம்பாடி, புதுப்பட்டி, ஆலாபுரம், மெணசி, பூதிநத்தம், குண்டமடுவு, கதிரிபுரம், கும்பாரஅள்ளி, பொம்மிடி, வெள்ளாளப்பட்டி, பி.பள்ளிப்பட்டி, ஜங்கலஅள்ளி, பைரநத்தம், தேவராஜபாளையம், மோளையானூர், வெங்கடசமுத்திரம், கோழிமேக்கனூர், அதிகாரப்பட்டி, தாதம்பட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, இருளப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, நாரணாபுரம், கோபாலபுரம், மாங்கடை, போதக்காடு, சேம்பியானூர், அஜ்ஜம்பட்டி மற்றும் கதரணம்பட்டி கிராமங்கள்.
- கடத்தூர் (பேரூராட்சி), பொ.மல்லாபுரம் (பேரூராட்சி) மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி (பேரூராட்சி).[2]
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 2011[3] | பெ. பழனியப்பன் | அதிமுக | 76582 | 45.39 | வ. முல்லைவேந்தன் | திமுக | 66093 | 39.17 |
| 2016[4] | பெ. பழனியப்பன் | அதிமுக | 74234 | 35.56 | அ. சத்தியமூர்த்தி | பாமக | 61521 | 29.47 |
| 2019 இடைத்தேர்தல் | ஆ. கோவிந்தசாமி | அதிமுக | 100947 | ஆ. மணி | திமுக | 83165 | ||
| 2021 | ஆ. கோவிந்தசாமி | அதிமுக[5] | 114,507 | 51.81 | எம். பிரபு ராஜசேகர் | திமுக | 77,564 | 35.10 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | ஆ. கோவிந்தசாமி | 114,507 | 51.81% | +16.25 | |
| திமுக | எம். பிரபு இராஜசேகர் | 77,564 | 35.10% | +8.22 | |
| அமமுக | பெ. பழனியப்பன் | 15,863 | 7.18% | ‘‘புதியவர்’’ | |
| நாம் தமிழர் கட்சி | ஆர். இரமேசு | 7,573 | 3.43% | ‘‘புதியவர்’’ | |
| மநீம | சிறீனிவாசன் | 1,729 | 0.78% | ‘‘புதியவர்’’ | |
| நோட்டா | நோட்டா | 1,338 | 0.61% | -0.1 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 36,943 | 16.72% | 10.63% | ||
| பதிவான வாக்குகள் | 220,994 | 83.24% | -2.54% | ||
| நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 282 | 0.13% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 265,487 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 16.25% | |||
2019 இடைத்தேர்தல்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | ஆ. கோவிந்தசாமி | 1,03,981 | 48.25 | ||
| திமுக | அ. மணி | 85,488 | 39.67 | ||
| அமமுக | டி. கே. இராஜேந்திரன் | 15,283 | 7.09 | ||
| நாம் தமிழர் கட்சி | எசு. சதீசு | 3,783 | 1.76 | ||
| மநீம | மு. நல்லதம்பி | 2,374 | 1.10 | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 18,493 | 8.58 | |||
| பதிவான வாக்குகள் | 2,15,406 | 84.84 | |||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | ||||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | பெ. பழனியப்பன் | 74,234 | 35.56% | -9.83 | |
| பாமக | எ. சத்தியமூர்த்தி | 61,521 | 29.47% | ‘‘புதியவர்’’ | |
| திமுக | எம். பிரபு இராஜசேகர் | 56,109 | 26.88% | -12.29 | |
| தேமுதிக | எ. பாசுகர் | 9,441 | 4.52% | ‘‘புதியவர்’’ | |
| கொ.ம.தே.க. | ஜி. அசோகன் | 1,760 | 0.84% | ‘‘புதியவர்’’ | |
| நோட்டா | நோட்டா | 1,467 | 0.70% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 12,713 | 6.09% | -0.13% | ||
| பதிவான வாக்குகள் | 208,754 | 85.78% | 4.87% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 243,367 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | -9.83% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | பெ. பழனியப்பன் | 76,582 | 45.39% | ‘‘புதியவர்’’ | |
| திமுக | வ. முல்லைவேந்தன் | 66,093 | 39.17% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | எம். வேலு | 18,710 | 11.09% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | பி. சங்கர் | 2,130 | 1.26% | ‘‘புதியவர்’’ | |
| சுயேச்சை | பி. மூர்த்தி | 1,270 | 0.75% | ‘‘புதியவர்’’ | |
| பசக | பி. வைகுண்டன் | 1,037 | 0.61% | ‘‘புதியவர்’’ | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,489 | 6.22% | |||
| பதிவான வாக்குகள் | 168,731 | 80.91% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 208,543 | ||||
| அஇஅதிமுக வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 2021 பொதுத்தேர்தல், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி, கண்ணோட்டம்
- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-29.
- ↑ 2011 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ "2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் - தொகுதிவாரியாக வாக்களித்தவர் விவரம்" (PDF). தமிழ்நாடு தேர்தல் ஆணையம். Retrieved 18 நவம்பர் 2016.
- ↑ பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தேர்தல் 2021 ஒன் இந்தியா
- ↑ "பாப்பிரெட்டிப்பட்டி Election Result". Retrieved 12 Jun 2022.
- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 16 February 2022. Retrieved 12 Feb 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.