ஆத்தூர் - சேலம் சட்டமன்றத் தொகுதி
ஆத்தூர் (சேலம்) | |
---|---|
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 82 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் |
மக்களவைத் தொகுதி | கள்ளக்குறிச்சி |
நிறுவப்பட்டது | 1951 |
மொத்த வாக்காளர்கள் | 2,54,705 (2021)[1] |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | அஇஅதிமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி (Attur Assembly constituency) என்பது சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இதே பெயரில் திண்டுக்கல் மாவட்டத்திலும் ஒரு சட்டமன்றத் தொகுதி உண்டு. சேலம் மாவட்டத்திலுள்ள முக்கிய நகராட்சிகளின் ஒன்றான ஆத்துரை தலைமையிடமாக கொண்டு ஆத்தூர் தனி தொகுதி அமைந்துள்ளது. இத்தொகுதியில் ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகள், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், கீரிப்பட்டி பேரூராட்சிகள் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் மற்றும் ஆத்தூர் வருவாய் வட்டத்திற்குட்பட்ட பெரும்பாலான கிராமங்களும் இடம் பெற்றுள்ளன.
இத்தொகுதியில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புமே முக்கிய தொழில்களாக உள்ளன. இங்கு வாழை, மரவள்ளி, மஞ்சள், பருத்தி, நெல், வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. இதுதவிர, பாக்கு மரம் வளர்ப்பிலும் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்கள்.இப்பகுதி கிராமப்புற மக்களுக்கு மரவள்ளி அரவை ஆலைகள், நூற்பாலைகள் மற்றும் நெல் அறுவடை எந்திரங்களும் வேலைவாய்ப்பு வழங்குகின்றன. இத்தொகுதி ஜவ்வரிசி உற்பத்தியில் மாவட்ட அளவில் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கதாகும். இருப்பினும் மரவள்ளி அரவை ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
இந்த தொகுதியில் ஆண்கள்: 1,22,440. பெண்கள்: 1,31,348 மற்றும் திருநங்கைகள் 12 என மொத்தம்: 2,53,800 வாக்காளர்கள் உள்ளனர்.[2]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]ஆத்தூர் தாலுக்கா (பகுதி) இடையப்பட்டி, பனைமடல், செக்கடிப்பட்டி,குமாரபாளையம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, மன்னூர் (ஆர்.எப்), மன்னூர், கோவில்புதூர், கரியகோயில்வளவு, குன்னூர், சூலாங்குறிச்சி, அடியனூர், ராமநாயக்கன்பாளையம்,கொட்டவாடி, பேளூர்கரடிப்பட்டி, மேட்டுடையாம் பாளையம், பெரிய கிருஷ்ணாபுரம், சின்னகிருஷ்ணாபுரம், வடகூத்தம்பட்டி, புத்திரகவுண்டன்பாளையம், வீரக்கவுண்டனூர், ஓலப்பாடி, கல்பகனூர், மேட்டுப்பாளையம், ஜாரிகொத்தம்பாடி, அழகாபுரம், அப்பமசமுத்திரம், கீழாவாரை, பட்டிமேடு விரிவாக்கம் (ஆர்.எப்),முட்டல், அம்மம்பாளையம், கல்லாநத்தம், தென்னங்குடிபாளையம், அக்கிசெட்டிபாளையம், முத்தாக்கவுண்டனூர், ஆரியபாளையம், உமையாள்புரம், ஏத்தாப்பூர், கரடிப்பட்டி, தமையனூர், மேற்கு ராஜபாளையம், களரம்பட்டி, ரங்கப்பநாயக்கன்பாளையம், கோபாலபுரம், மல்லியகரை, ஈச்சம்பட்டி, சொக்கநாதபுரம், தாண்டவராயபுரம், துலுக்கனூர், மஞ்சினி, புங்கவாடி, பைத்தூர்,சீலியம்பட்டி, அரசநத்தம் மற்றும் வளையமாதேவி கிராமங்கள்.
கீரிப்பட்டி (பேரூராட்சி), ஏத்தாப்பூர் (பேரூராட்சி), பெத்தநாயக்கன்பாளையம் (பேரூராட்சி), ஆத்தூர் (நகராட்சி) மற்றும் நரசிங்கபுரம் (பேரூராட்சி)[3].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | எம். பி. சுப்பிரமணியம் | சுயேச்சை | 12394 | 39.94 | பி. செல்லமுத்து படையாச்சி | காங்கிரசு | 6872 | 22.15 |
1957 | இருசப்பன் | சுயேச்சை | 30984 | 21.50 | எம். பி. சுப்ரமணியம் | சுயேச்சை | 29153 | 20.23 |
1962 | எஸ். அங்கமுத்து நாயக்கர் | காங்கிரசு | 23542 | 39.28 | கே. என். சிவபெருமாள் | திமுக | 19811 | 33.05 |
1967 | கே. என். சிவபெருமாள் | திமுக | 40456 | 57.22 | எம். பி. சுப்ரமணியம் | காங்கிரசு | 30252 | 42.78 |
1971 | வி. பழனிவேல் கவுண்டர் | திமுக | 39828 | 52.79 | சி. பழனிமுத்து | காங்கிரசு (ஸ்தாபன) | 35617 | 47.21 |
1977 | சி. பழனிமுத்து | காங்கிரசு | 19040 | 29.80 | பி. கந்தசாமி | அதிமுக | 18693 | 26.25 |
1980 | சி. பழனிமுத்து | காங்கிரசு | 38416 | 53.44 | பி. கந்தசாமி | அதிமுக | 31525 | 43.85 |
1984 | சி. பழனிமுத்து | காங்கிரசு | 55927 | 66.53 | எ. எம். இராமசாமி | திமுக | 24804 | 29.51 |
1989 | அ. ம. ராமசாமி | திமுக | 33620 | 38.22 | எம். பி. சுப்ரமணியம் | அதிமுக (ஜெயலலிதா) | 27795 | 31.60 |
1991 | வி. தமிழரசு | அதிமுக | 61060 | 64.49 | எ. எம். இராமசாமி | திமுக | 24475 | 25.85 |
1996 | அ. ம. ராமசாமி | திமுக | 59353 | 57.17 | எ. கே . முருகேசன் | அதிமுக | 37057 | 35.69 |
2001 | எ. கே . முருகேசன் | அதிமுக | 64936 | 57.85 | மு. ரா. கருணாநிதி | திமுக | 40191 | 35.81 |
2006 | எம். ஆர். சுந்தரம் | காங்கிரசு | 53617 | -- | எ. கே . முருகேசன் | அதிமுக | 43185 | -- |
2011 | சு. மதேஸ்வரன் | அதிமுக | 88036 | -- | எஸ். க. அர்த்தநாரி | காங்கிரசு | 58180 | -- |
2016 | இரா. ம. சின்னத்தம்பி | அதிமுக | 82827 | -- | எஸ். க. அர்த்தநாரி | காங்கிரசு | 65493 | -- |
2021 | அ. ப. ஜெயசங்கரன் | அதிமுக | 95308 | 47.72 | கு. சின்னதுரை | திமுக | 87051 | 43.58 |
1957 இல் நடைபெற்ற தேர்தலில் இத்தொகுதிக்கு இரண்டு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டார்கள் (ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்தவராகவும், மற்றொருவர் எந்த இனமாகவும் இருக்கலாம்) எனவே இருசப்பன் & எம். பி. சுப்ரமணியம் இருவரும் வெற்றி பெற்றார்கள்.
1977இல் ஜனதா கட்சியின் எ. எஸ். சின்னசாமி 16860 (26.39%) & திமுகவின் டி. பெருமாள் 10645 (15.67%) வாக்குகளும் பெற்றனர்.
1989இல் காங்கிரசின் சி. பழனிமுத்து 15559 (17.69%) வாக்குகள் பெற்றார்.
2006 தேமுதிகவின் எ. ஆர். இளங்கோவன் 15654 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]வாக்காளர் எண்ணிக்கை
[தொகு], 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
[தொகு]ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
[தொகு]2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
2742 | % |
முடிவுகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 23 December 2021. Retrieved 28 Jan 2022.
- ↑ ஆத்தூர் தொகுதி 2021 தேர்தல் கண்ணோட்டம்
- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-30.