கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரு.வி.க நகர், சென்னை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இதன் தொகுதி எண் 15. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
எழும்பூர், பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் இருந்த சில வார்டுகளும், நீக்கப்பட்ட புரசைவாக்கம் தொகுதியில் இருந்த சில வார்டுகளையும் உள்ளடக்கி, புதிதாக திரு.வி.க. நகர் தொகுதி உருவாக்கப்பட்டது.