அரியலூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அரியலூர் மாவட்டம்
India Tamil Nadu districts Ariyalur.svg
அரியலூர் மாவட்டம்:அமைந்த இடம்
தலைநகரம் அரியலூர்
ஆட்சியர்
க.லட்சுமி பிாியா இஆப
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

அபினவ் குமாா் இகப
பரப்பளவு 1934.01 ச.கி.மீ
மக்கள் தொகை
752481 (2011)
வட்டங்கள் 4
ஊராட்சி ஒன்றியங்கள் 6
நகராட்சிகள் 2
பேரூராட்சிகள் 2
ஊராட்சிகள் 201
வருவாய் கோட்டங்கள் 2
வருவாய் கிராமங்கள் 195
இணையதளம் http://www.ariyalur.tn.nic.in/

அரியலூர் மாவட்டம் சனவரி 1, 2001-இல் பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் மார்ச் 31, 2002 ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பொருளாதாரத்தை காரணம் கூறி அரியலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007 ல் உருவாக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

அரியலூர் மாவட்டம் அரியலூர், உடையார்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிமடம் என நான்கு வருவாய் வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.

ஊராட்சி ஒன்றியங்கள்[தொகு]

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், த பழூர் ஊராட்சி ஒன்றியம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், செந்துறை ஊராட்சி ஒன்றியம் என ஆறு ஊராட்சி ஒன்றியங்கள் கொண்டுள்ளது.[1]

அரசியல்[தொகு]

இம்மாவட்டத்தில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் என இரண்டு சட்டமன்ற தொகுதிகளை கொண்டது.

பொருளாதாரம்[தொகு]

இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் இங்கு தமிழகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் சிமெண்ட் ஆலைகள் உள்ளன. இதனால் அரியலூர் சிமெண்ட் சிட்டி (Cement city) என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது.

சிமென்ட் தவிர நிலக்கரி அதிகளவில் கிடைக்கிறது. தமிழகத்தில் நெய்வேலிக்கு அடுத்தபடியாக ஜெயங்கொண்டம் பகுதியில் அதிகளவில் படிமங்களாக கிடைக்கிறது இதனையடுத்து தமிழக அரசும் ஜெயங்கொண்டம் அணல் மின்நிலைய திட்டம் என்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்து அதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இது தவிர இம்மாவட்டத்தில் செம்மண் மிகுந்து காணப்படுவதால் முந்திரி அதிகளவில் பயிரிடப்படுகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 1,940 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள அரியலூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 754,894 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 374,703 மற்றும் பெண்கள் 380,191 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1015 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 389 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 71.34 ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.23 ஆகவும், பெண்களின் படிப்பறிவு 61.74 ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 81,187 ஆக உள்ளது. மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 8.54% ஆக உள்ளது. [2]

சமயம்[தொகு]

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 708,397 (93.84 %) ஆகவும், இசுலாமிய மக்கள்தொகை 7,942 (1.05 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 37,403 (4.95 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 104 ஆகவும், சமண சமய மக்கள்தொகை 65 ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 88 ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 853 (0.11 %) ஆகவும் உள்ளது.

புவியியல்[தொகு]

1.இம்மாவட்டத்தின் மூன்று முக்கிய நதிகளாவன‌ : கொள்ளிடம், மருதையாறு, வெள்ளாறு.

2.இம்மாவட்டத்தின் மூன்று முக்கிய நகரங்கள் : அரியலூர், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம்.

போக்குவரத்து வசதிகள்[தொகு]

தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சாலை மூலம் சென்று வர அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய நகரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் தொடர் வண்டி மூலம் சென்று வர அரியலூர் தொடர் வண்டி நிலையம் முக்கிய சந்திப்பாக இருக்கிறது, மேலும் சில தொடர்வண்டி சந்திப்புகள் செந்துறை, ஒட்டக்கோவில், ஈச்சங்காடு, ஆர்.எஸ். மாத்தூர், வெல்லூர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ariyalur District
  2. http://www.census2011.co.in/census/district/38-ariyalur.html

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியலூர்_மாவட்டம்&oldid=2477338" இருந்து மீள்விக்கப்பட்டது