மருதையாறு
மருதையாறு பெரம்பலூர் மாவட்டத்தில்உற்பத்தியாகி, ஓடி அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் கலந்திடும் ஒரு நடுத்தர ஆறாகும்.
பெரம்பலூர் மாவட்டம் உள்ள பச்சைமலை தொடர்ச்சியில் கீழ்க்கணவாய், செல்லியம் பாளையம் உள்ளிட்ட கிராம பகுதியில் உற்பத்தியாகி பல கிளை ஓடைகளை தன்னகத்தே இணைத்து கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் கொட்டரை ஊராட்சியில் மருதையாற்றின் குறுக்கே கொட்டரை தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.(பெரம்பலூர் மாவட்டத்தில் 45 கிமீ தூரமும், அரியலூர் மாவட்டத்தில் 30 கிமீ தூரமும் என 75 கிமீ தூரம்) பயணித்து அரியலூர் மாவட்டம் முத்துவாஞ்சேரிஅருகே கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது.
நீர் ஆதாரம்
[தொகு]வரகுபாடி ஶ்ரீ நல்லேந்திர அய்யனார் கோவில் நல்லேரீலிருந்து வரும் உபரி நீரிலிருந்து உருவாகும் உப்போடை மற்றும் மூங்கில்பாடி ஓடை ஆகிய இரண்டும் மருதையாற்றின் கிளை ஓடைகளாகும். அணைக்கு பெரம்பலூரிலிருந்து மருதையாறு வழியாகவும்,பேரளி சித்தளியில் இருந்து மருவத்தூர் வழியாக வன ஓடையும்(உப்பு ஓடை),குன்னம் மூங்கில்பாடியில் இருந்து ஆதனூர் வழியாக மற்றொரு ஓடையும் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. மூன்று ஆறுகளின் வழியாக அதிகளவில் நீர் கொட்டரை எல்லைப்பகுதியில் கூடுகிறது.இதனால் தமிழக அரசு அணை கட்டியுள்ளது.
மருதையாறு தடுப்பணை
[தொகு]ஆலத்தூர் தாலுக்கா, கொட்டரை மற்றும் ஆதனூரில் இவ்வாற்றின் குறுக்கே கொட்டரை தடுப்பணை கட்டப்பட்டு வருகின்றது. [1]
கொட்டரை மருதையாறு அணை மதிப்பீடு
[தொகு]கொட்டரை தடுப்பணை சுமார் 56.7 கோடி ரூபாய் மதிப்பிற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, 67.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் , மொத்தத்தில் ரூ124.2 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அணைக்கட்டு மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வருகின்றது.70% நிலங்கள் கொட்டரை கிராமத்திலும் மற்றும் 30% ஆதனூர் கிராமத்திலும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.அணையின் முழு கொள்ளளவு-212 மி.கன அடி,மொத்த பரப்பளவு 815 ஏக்கர் [2], [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ புதர்களால் மண்டி கிடக்கும் மருதையாறு பரணிடப்பட்டது 2019-05-15 at the வந்தவழி இயந்திரம், தினகரன், நாள்: மே 15, 2019.
- ↑ புதர்களால் மண்டி கிடக்கும் மருதையாறு பரணிடப்பட்டது 2019-05-15 at the வந்தவழி இயந்திரம், தினகரன், நாள்: மே 15, 2019.
- ↑ [1]
4. https://www.facebook.com/NammaMarudhayaru/
5.https://www.facebook.com/kottarai/
- ↑ "Kottarai Marudaiyar Reservoir - கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கம்". www.facebook.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-16.
- ↑ "மருதையாறு". www.facebook.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-16.