மங்கலேரி
மங்கலேரி (Mangal aeri அல்லது Mangal lake) என்பது தமிழ்நாட்டின், சென்னை, முகப்பேரில் மழை நீரை தேக்கிவைக்கும் ஒரு ஏரியாகும்.
வரலாறு
[தொகு]இந்த ஏரி பல நூற்றாண்டுகள் முகப்பூர் கிராமத்தின் தண்ணீர் ஆதாரமாக விளங்கியது. இவ்வாறான நிலையில் அம்பத்தூரில் உருவாக்கப்பட்ட தொழிற்பேட்டையில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீர் ஏரியில் கலந்ததால் ஏரி நீர் மாசடைந்தது.[1] 2005 ஆம் ஆண்டில் ஏரியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும், 30 ஏக்கருக்கு சுற்றுச்சுவர் கட்டவும் இருபது இலட்சம் தொகையில் தொடங்கியது.[2] 2009 சூலை மாதம், ரூபாய் ஆறுபது லட்சம் செலவில் முடிக்கப்பட்ட முதல் பகுதி சீரமைப்பு, வளர்சிப்பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்காக திறந்துவிடப்பட்டது.[3]
கட்டமைப்புகள்
[தொகு]ஏரியின் நீர்தேங்கு பரப்பு 5.36 ஏக்கராகும். சீரமைப்பு ஏரியில் நடந்த முதல் கட்டப் பணியில் ஏரியைச்சுற்றி 4.5 மீட்டர் அகலத்திலும் 520 மீட்டர் நீளத்தில் நடைபாதை, மின்விளக்கு வசதியுடன் ஏற்படுத்தப்பட்டது. மற்றும் குழந்தைகள் விளையாட இடவசதி ஏற்படுத்தப்பட்டது. மேலும் இரண்டாவது திட்டமாக ஒரு புதிய பூங்காவை 20,000 சதுர அடியில் 25 இலட்சம் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.[3]
ஏரியின் பின்புறத்தில் அச்சாலத்தம்மன் கோயில் உள்ளது.[2]
இரண்டாவதாக ஏரியில் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட பணிகள் துவக்கப்படவில்லை.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dinakaran.com". dinakaran30.rssing.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
- ↑ 2.0 2.1 Swahilya (18 May 2005).
- ↑ 3.0 3.1 Lakshmi, K. (5 July 2009).
- ↑ "Mangal Eri Park, a long way to go".