உள்ளடக்கத்துக்குச் செல்

மங்களம் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மங்களம் அருவி (Mangalam Water Falls) பெரம்பலூர் மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான பச்சைமலை உள்ளது. துறையூரை அடுத்த பச்சைமலை கிராமத்தின் மலை அடிவாரத்தில் இந்த அருவி உள்ளது. [1][2]

அமைவிடம்

[தொகு]

துறையூரிலிருந்து, பச்சைமலை அடிவாரத்தில் மங்களம் அருவி அமைந்துள்ளது. சற்றே கரடு முரடான பாதையில் இதற்கு செல்ல வேண்டும்.[3] திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட எல்லையில் இது அமைந்துள்ளது.

பருவம்

[தொகு]

ஆண்டின் பெரும்பகுதியில் வறண்டிருப்பினும் செப்டம்பர் - நவம்பர் மாதங்க‌ளில் பொழியும் மழையால் இந்த அருவி செழிப்புற்றுச் சுற்றுலா ஈர்ப்புப் பகுதியாக விளங்குகின்றது.

சான்றுகள்

[தொகு]
  1. வலைப்பூ: பெரம்பலூரைச் சுற்றியுள்ள அருவிகள்
  2. கூகுள் வரைபடத்தில் மங்களம் அருவி அமைவிடம்[11.34342820449199, 78.60652812577479]
  3. Mangala Water Falls[1]மங்களம் அருவி செல்லும் வழி

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்களம்_அருவி&oldid=3629432" இலிருந்து மீள்விக்கப்பட்டது