உள்ளடக்கத்துக்குச் செல்

பெருங்குடி ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருங்குடி ஏரி
அமைவிடம்பெருங்குடி, காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு - 600096
ஆள்கூறுகள்12°58′00″N 80°14′21″E / 12.9668°N 80.2391°E / 12.9668; 80.2391
வகைஏரி
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு57 ஏக்கர்
கடல்மட்டத்திலிருந்து உயரம்44 மீட்டர்
குடியேற்றங்கள்பெருங்குடி
பெருங்குடி ஏரி
பெருங்குடி ஏரியை பாதுகாகத் திரண்ட பகுதி மக்கள்

பெருங்குடி ஏரி (Perungudi Lake) என்பது 57 ஏக்கர் பரப்பளவிலான ஓர் ஏரியாகும்.[1] இது தமிழ்நாட்டின் சென்னையின் தகவல் தொழில்நுட்ப நடைபாதையான, ராஜீவ் காந்தி சாலை அருகே அமைந்துள்ளது. இது சென்னையின் பாதுகாக்கப்பட்ட ஏரிகளில் ஒன்றாகும். முழுமையாக சுற்றுச் சுவர் கொண்டும் கிழக்கு மற்றும் தெற்குப்பக்கங்களில் நடை பாதைகள் அமைக்கப்பட்டும் உள்ளன.

ஒரு காலத்தில், ஏரி அதன் அருகில் இருந்த விவசாய நிலங்களுக்கான பாசன நீர் ஆதாரமாக இருந்தது. தற்போதும் இந்த ஏரி சுற்றியுள்ள சில குடியிருப்புகளின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதில், மற்றும் நிலத்தடி நீர் வளத்தை பாதுகாப்பதில் உதவுகிறது. அதிக மழைக்குப் பின்னர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து மழைநீர் வாய்க்கால்கள் வழியாக ஏரிக்குச் செல்கிறது.

பெருங்குடி ஏரி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துடன் பெருங்குடி, வேளச்சேரி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளின் வழியாக இணைக்கப்பட்டுள்ளது.

அருகில் முதன்மையான சில குடியிருப்புகளின் பெயர்கள் குறிஞ்சி நகர், காமராஜ் நகர், ரமணா கட்டிடம், கிரீன் ஏக்கர்ஸ் போன்றவை ஆகும்.

2015 வெள்ளமும் சுயபரிசோதனையும்

[தொகு]

இந்த ஏரியில் அபகரிப்புகள் மற்றும் மோசமான பராமரிப்பின் காரணமாக 2015 திசம்பரில் ஏற்பட்ட பெருமழையின்போது 25% விழுக்காடு அளவுக்கே ஏரியால் மழை நீரை தக்க வைக்க இயன்றது. இந்த ஏரியின் அழகு அதன் அருகிலுள்ள குடியிருப்பாளர்களின் கவனத்தை ஈர்த்தது. மாசு, துஷ்பிரயோகம், அபகரிப்புகள், சாக்கடை நீர் கலத்தல், கழிப்பிடக் கழிவுகளை கலத்தல், நீர் திருட்டு ஆகியவற்றில் இருந்து ஏரியைப் பாதுகாக்க மக்கள் மன்றம் தொடங்க அப்பகுதி மக்கள் முடிவெடுத்தனர். 2016 ஜனவரி 26 ஆம் திகதி அருகிலுள்ள 15 குடியிருப்பு சங்கங்களில் இருந்து மக்கள் ஏரியில் கூடி ஏரியைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஒன்றாக கைகோர்த்தனர்.[2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "பெருங்குடி ஏரி சுற்றுச்சூழல் பூங்காவாகுமா? - Dinamalar Tamil News". Dinamalar. 2020-07-30. பார்க்கப்பட்ட நாள் 2023-08-24.
  2. http://www.thehindu.com/features/downtown/perungudi-residents-have-big-plans-for-their-lake/article8085648.ece
  3. http://www.thehindu.com/news/national/tamil-nadu/perungudi-lake-to-get-a-facelift/article7748604.ece
  4. http://www.thehindu.com/news/cities/chennai/article3449018.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருங்குடி_ஏரி&oldid=4129508" இலிருந்து மீள்விக்கப்பட்டது