கொலவை ஏரி
கொலவை ஏரி | |
---|---|
செங்கல்பட்டு கொலவை ஏரி | |
அமைவிடம் | செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
ஆள்கூறுகள் | 12°42′29″N 12°42′29″E / 12.708°N 12.708°E |
செங்கல்பட்டு கொலவை ஏரி (Kolavai Lake) செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு நகரில் அமைந்துள்ளது. இது இம்மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும்.[1] மதுராந்தகம் ஏரி முதலிடத்தில் இருக்கிறது. இந்த ஏரியானது செங்கல்பட்டு இரயில் நிலையத்தின் அருகிலேயே உள்ளது.
அமைவிடம்
[தொகு]இந்த ஏரியானது சென்னையில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. சென்னையிலிருந்து தென் தமிழகத்திற்கு செல்லும் அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் சாலையில் அருகிலேயே அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 1 மணி நேரத்தில் பேருந்தில் செல்லலாம்.
போக்குவரத்து
[தொகு]இதன் அருகில் பரனூர் மற்றும் செங்கல்பட்டு தொடர் வண்டி நிலையங்கள் அமைந்துள்ளன. இதன் வழியாக தென்தமிழகத்திற்கு செல்லும் தொடருந்துகள் அனைத்தும் இயக்கப்படுகின்றன.
நிலை
[தொகு]எப்போதும் நீர் நிறைந்து காணப்படும் இவ்வேரி தற்போது தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. இதற்குக் காரணம் ஏரியை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டி வருவதாலும், பலர் இதன் அருகில் தொழிற்சாலைகளைக் கட்டுவதாலும் ஆகும்.
பயன்பாடு
[தொகு]சென்னையில் கோடைக் காலத்தில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கவும், தொழிற்சாலைகளின் தேவையை பூர்த்தி செய்யவும் இந்த ஏரியிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.
சுற்றுலாத்தலம்
[தொகு]ஒரு சுற்றுலாத் தலமாக இந்த ஏரி விளங்குகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "செங்கல்பட்டு கொலவை ஏரி". தினமணி (செப்டம்பர் 24, 2013)