உள்ளடக்கத்துக்குச் செல்

சிட்லப்பாக்கம் ஏரி

ஆள்கூறுகள்: 12°56′2″N 80°8′10″E / 12.93389°N 80.13611°E / 12.93389; 80.13611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிட்லப்பாக்கம் ஏரி
அமைவிடம்இந்தியா, சென்னை, சிட்லப்பாக்கம்
ஆள்கூறுகள்12°56′2″N 80°8′10″E / 12.93389°N 80.13611°E / 12.93389; 80.13611
வகைஏரி
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு86.86 ஏக்கர் (இருந்தது)
46.88 ஏக்கர் (தற்போது இருப்பது)
குடியேற்றங்கள்சென்னை

சிட்லப்பாக்கம் ஏரி (ஆங்கிலம்: Chitlapakkam lake) என்பது சென்னை, சிட்லப்பாக்கம் நகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஏரியாகும். இதுதான் இப்பகுதியில் உள்ள முதன்மை நீர்நிலையாகும்.[1]

இந்த ஏரியின் தற்போதைய பரப்பளவு 46.88 ஏக்கர் ஆகும்.[2]

வரலாறு

[தொகு]

சிட்லப்பாக்கம் நகரமாவதற்கு முன் விவசாயம் சார்ந்த இடமாக இருந்தது. அப்போது இந்த ஏரியின் நீர் நீர்ப்பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. அருகில் உள்ள பச்சைமலை ஏரியின் முதன்மை நீராதாரமாக இருந்தது.

1980 வரை, இந்த ஏரிக்கரை ஒரு பொழுதுபோக்கு இடமாக இருந்தது. ஏரி அருகே உள்ள பகுதிகளான செம்பாக்கம், அஸ்தினாபுரம் ஆகிய பகுதிகளின் தண்ணீர் தேவைக்கு இந்த ஏரி பயன்பட்டது. 1980 களின் துவக்கம் வரை, இந்தப் பகுதியின் நிலத்தடி நீர் வெறும் 5 அடி ஆழத்தில் காணப்பட்டது. கோடைக்கால உச்சத்தில்கூட நிலத்தடி நீர் 10 அடிக்கு கீழே சென்றதில்லை. இவ்வாறான தண்ணீர் வசதி காரணமாக இப்பகுதியில் குடியிருப்புகள் உருவாயின. ஏரியின் சூழல் இடம் பெயரும் பறவைகள் ஈர்த்தது மற்றும் பறவை நோக்கர்களுக்கு ஒரு பிடித்தமான இடமாக இருந்தது.[3]

1990 ஆம் ஆண்டு இந்த ஏரியைச் சேர்ந்த இடத்தில் அரசாங்கத்தால் பொதுப்பயன்பாட்டுக்கு மாவட்ட நீதிமன்றம், பேருந்து நிலையம், தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டது. ஏரிக்கு வந்த ஆபத்தை உணர்ந்த உள்ளூர்வாசிகள் அரசின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து பரப்புரை செய்து ஏரியைக் காத்தனர்.[3] சமூக அழுத்தத்தினால் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் ஏரியைக் காத்து, இந்த ஏரியின் சேமிப்பு திறன் அதிகரித்துள்ளது. ஏரிக்கரையை வலுப்படுத்தும் நடவடிக்கையாக 2003 இல் இதன் கரைகள் 10 அடி உயரம்வரை உயர்த்தப்பட்டது. எனினும், இந்த ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சரியான வடிகால் வசதி இல்லாததால் ஏரியில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் பல கேலன்கள் கலந்து மாசு ஏற்படுகிறது. பொதுப்பணித் துறையின் மதிப்பீடுகளின்படி, ஏரிக்குச் சொந்தமான இடத்தில் 175 ஆக்கிரமிப்புகள் பல்வேறு இடங்களில் செய்யப்பட்டுள்ளது.[3]

ஏரி

[தொகு]
சிட்லப்பாக்கம் ஏரி

ஏரியின் மொத்த நீர் தேங்கும் பரப்பளவு 86.86 ஏக்கர் ஆகும்.[2] என்றாலும் ஆக்கிரமிப்புகள் காரணமாக ஏரியின் பரப்பு 47 ஏக்கராக சுருங்கிவிட்டது.[3]

ஏரிப் பாசனத்தில் விவசாயம் செய்யப்ப்பட்ட நிலப்பகுதிகள் குடியிருப்புகளாக மாறிவிட்டதால் இங்கு விவசாயம் இல்லாமல் போனது. இந்த ஏரிக்கு மலைப்பகுதியில் இருந்து நீர் வரக்கூடிய வகையில் மூன்று வாய்க்கால்கள் கட்டப்பட்டுள்ளன.[4]

இதனால் சென்னையின் பிற பகுதிகளை ஒப்பிடும்போது ஏரியின் நீர்மட்டம் இங்கு மேலேயே உள்ளது. இப்பகுதியில் நீர் மட்டம் 2.50 முதல் 8 மீட்டர்வரை உள்ளது. நீரில் உள்ள உப்பின் அளவு 400 முதல் 900 பிபிஎம் ஆகும்.[5] ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலத்தில் கூழைக்கடாக்களை பார்க்க இயலும். மேலும் ஆண்டு முழுவதும் சாம்பல் நாரை போன்ற பறவைகளைக் காணலாம்.

சூழல்

[தொகு]

ஏரிக்கு அருகில் உள்ள குடியிருப்புகளின் கழிவுநீரால் ஏரி மாசடைகிறது.[3] மேலும் ஏரிப்பகுதியில் உள்ள 15,000 வீடுகளின் குப்பைகளும், ஜிஎஸ்டி சாலையில் உள்ள வணிக மையங்களின் கழிவுநீரும் சேர்ந்து ஏரிநீரை மாசுக்கு உள்ளாக்குகின்றன.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Manikandan, K. (8 October 2012). "From the people to panchayat: Rs. 10 lakh to improve their lake". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/news/cities/chennai/from-the-people-to-panchayat-rs-10-lakh-to-improve-their-lake/article3975241.ece. பார்த்த நாள்: 11 Oct 2012. 
  2. 2.0 2.1 Bhattacharya, Saptarshi (9 June 2003). "'Clean' Chitlapakkam lake project launched". The Hindu (Chennai: The Hindu) இம் மூலத்தில் இருந்து 27 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130827175111/http://hindu.com/2003/06/09/stories/2003060906970300.htm. பார்த்த நாள்: 27 Aug 2013. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Chitlapakkam Lake now a cess pit". The Times of India (Chennai: The Times Group). 25 October 2012 இம் மூலத்தில் இருந்து 27 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130827175148/http://articles.timesofindia.indiatimes.com/2012-10-25/chennai/34729183_1_water-body-water-tanks-lake-bunds. பார்த்த நாள்: 27 Aug 2013. 
  4. Chella, Devatha; Arun Kumar Thalla (May 2009). "Analysis of flow pattern between hill and lake". ARPN Journal of Engineering and Applied Sciences (Asian Research Publishing Network) 4 (3): 64–68. பன்னாட்டுத் தர தொடர் எண்:1819-6608. http://www.arpnjournals.com/jeas/research_papers/rp_2009/jeas_0509_186.pdf. பார்த்த நாள்: 30 Jun 2012. 
  5. "INFRASTRUCTURE: Water Supply" (PDF). CMDA. பார்க்கப்பட்ட நாள் 6 July 2012.
  6. Venkat, Vaishali R. (4 May 2013). "Chitlapakkam lake is now a dump yard". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/news/cities/chennai/chen-downtown/chitlapakkam-lake-is-now-a-dump-yard/article4681608.ece. பார்த்த நாள்: 27 Aug 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்லப்பாக்கம்_ஏரி&oldid=3613647" இலிருந்து மீள்விக்கப்பட்டது