கல்லாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கல்லாறு வேலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம் போன்ற வட தமிழகத்தில் ஓடும் ஒரு சிறு ஆறாகும். கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றான பச்சைமலையில் உற்பத்தியாகி, சுவேதா ஆற்றில் கலக்கிறது.[1] பெரிய ஏரிகளில் ஒன்றான வெங்கலம் பகுதியில் உள்ள ஏரியில் கலந்து அங்கிருந்து கிழக்கு திசை நோக்கி பாய்ந்து, கொல்லிமலையில் உற்பத்தியாகிவரும் சுவேதா ஆற்றில் சேர்கிறது. கல்லாற்றின் நீளம் சுமார் 20 கிலோமீட்டர். வருடத்தின் ஆறுமாதங்களுக்கும் அதிகமாக பாயும் இந்த நதியின் மூலம் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. மேலும் 15-க்கு மேற்ப்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கு இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது கல்லாறு.

இந்த நதியில் சிறிதும் பெரிதுமாக கற்கள் நிறைந்து காணப்படுவதால் கல்லாறு என பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. கல்லாறு என்ற பெயரில் தென்கேரளத்திலும் ஆறு ஒன்று ஓடுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மை
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லாறு&oldid=2469207" இருந்து மீள்விக்கப்பட்டது