சின்னாறு அணை - பெரம்பலூர் மாவட்டம்
சின்னாறு நீர்த்தேக்கம், தமிழ்நாடு, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டாரத்தைச் சேர்ந்த எறையூரில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை NH45 ஒட்டி அமைந்துள்ளது. இது சின்னாற்றின் குறுக்கேக் கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கமாகும்.
வரலாறு[தொகு]
இந்நீர்த்தேக்கம் 1958 இல் அப்போதைய முதலமைச்சர் காமராஜர், மற்றும் கக்கன் ஆகியோரின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்டதாகும்.
பாசன வசதி[தொகு]
இதன் மூலம் ஏறத்தாழ 716 ஏக்கர் நிலங்காள் பாசன வசதி பெறுகின்றன. இதையொட்டி அரசு பயனியர் மாளிகையும் உள்ளது.[1][2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ சின்னாறு நீர்த்தேக்கத்தை சீரமைக்க வலியுறுத்தல், தினமணி, நாள்: நவம்பர் 22, 2015.
- ↑ "தமிழ்நாட்டில் நீர்த் தேக்கங்களின் மொத்த கொள்ளளவு". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-11-23 அன்று பார்க்கப்பட்டது.