உள்ளடக்கத்துக்குச் செல்

குமரகிரி ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமரகிரி ஏரி
அமைவிடம்சேலம், சேலம் மாவட்டம், தமிழ்நாடு
வகைநீர்த்தேக்கம்
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு45 ஏக்கர்கள் (0.18 km2)

குமரகிரி ஏரி (kumaragiri lake) என்பது, தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஏரியாகும்.

ஏரியில் மண் திட்டுக்கள்

[தொகு]

சேலத்தின் அம்மாபேட்டை பகுதியில் அமைந்துள்ள குமரகிரி ஏரி நீர்நிலை ஆதார பசுமை இயக்க குழுவின் பொருளாளர் இராஜகோபால் மற்றும் "சேலம் குடிமக்கள் குழு"வைச் சார்ந்த பியூசு மானுசு போன்ற சுற்றுச்சூழல் ஆர்வாளர்களால் இந்த ஏரியின் நடுவே பல தனித் தீவுகள் ஏற்படுத்தப்பட்டு வேம்பு, மூங்கில் என சுமார் 6000 மரங்கள் நடப்பட்டன[1].[2] அந்த மரங்கள் நன்கு வளர்ந்து பறவைகளுக்கு வாழ்விடமாக இருக்கிறது. நீர்காகம், புள்ளி மூக்கு வாத்து, அரிவாள் மூக்கன், ஆசியக் குயில், சிறு வெண் கொக்கு, உண்ணிக்கொக்கு , மடையான், வெள்ளை மார்பு காணான்கோழி, செந்நீலக் கொக்கு, கருங்கரிச்சான், முக்குளிப்பான், நீலத் தாழைக்கோழி, நாமக்கோழி, பொரி உள்ளான், செம்மூக்கு ஆள்காட்டி போன்ற பல்வேறு பறவைகள் வந்து செல்கின்றன.[3] தற்போது இந்த இடம் குட்டி பறவைகள் சரணாலயமாக விளங்குகிறது.

ஏரிப்பூங்கா

[தொகு]

இங்கு அமைக்கப்பட்டுள்ள ஏரிப்பூங்கா ஓர் சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு வசிப்போர் காலை, மாலை வேளைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Work to give facelift to Kumaragiri Lake begins". Retrieved 18 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழக ஏரி காக்க கரண்டியை கையில் எடுத்த அட்லாண்டா தமிழ்ப் பெண்கள்..! - பாரம்பரிய உணவுத் திருவிழா". Retrieved 18 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "குமரகிரி ஏரியில் தூய்மை பணி". Retrieved 18 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமரகிரி_ஏரி&oldid=3661428" இலிருந்து மீள்விக்கப்பட்டது