தாமிரபரணி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆள்கூறுகள்: 8°38′29″N 78°07′38″E / 8.641316°N 78.127298°E / 8.641316; 78.127298
தாமிரபரணி
ஆறு
Thamirabarani River தாமிரபரணி பொருணை ஆறு.jpg
தாமிரபரணியின் ஒட்டம் திருநெல்வேலியில்
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டங்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி
கிளையாறுகள்
 - இடம் காரையாறு, சேர்வலாறு, கடனாநதி, சிற்றாறு
 - வலம் மணிமுத்தாறு, பச்சையாறு
நகரங்கள் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம்
உற்பத்தியாகும் இடம் பொதிகை மலை
 - ஆள்கூறு 8°36′07″N 77°15′51″E / 8.601962°N 77.264131°E / 8.601962; 77.264131
கழிமுகம்
 - அமைவிடம் மன்னார் வளைகுடா
 - ஆள்கூறு 8°38′29″N 78°07′38″E / 8.641316°N 78.127298°E / 8.641316; 78.127298
நீளம் 125 கிமீ (78 மைல்)
Discharge for சிறீவைகுண்டம்
 - சராசரி [1]


'தன்பொருனை' என அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கிறது. இவ்வாறு நெல்லை-தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைத் தீர்த்து , வேளாண்மைக்கும் பயன்பட்டு வருகிறது.[2]

பாணதீர்த்தம் அருவி

பொருனையின் போக்கு[தொகு]

பொதிகை மலையிலிருந்து உருவாகி பாண தீர்த்தம், கலியாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்களைக் கடந்து பாபநாசம் என்ற சிவ ஸ்தலத்தின் வழியாக வருகிறது தாமிரபரணி.

வரலாறு[தொகு]

கல்யாண தீர்த்தம்[தொகு]

முன்னொரு காலத்தில் கைலாயத்தில் சிவபெருமானுடைய திருக்கல்யாணத்தைத் தரிசிக்கச் சென்ற தேவர்கள் முனிவர்கள் முதலியோர் கூட்டத்தைத் தாங்கமாட்டாது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர அதைச்சமன் செய்யுமாறு திருவுளங்கொண்டு அகத்திய முனிவரை அழைத்து தென் திசைக்கு ஏகும்படிச் சிவபெருமான் கட்டளையிட, அவ்வாணையின்படி பொதிய மலைக்கு எழுந்தருளீய அகத்தியருக்கு கையிலையிலிருந்த தம்முடைய திருக்கல்யாணக் கோலத்தைக் காட்சி கொடுத்தருளியது பாபநாசம் என்னும் இத்தலத்தில் என கூறப்படுகிறது. பாபநாசத்திற்கு மேற்கே ஒரு மைல் தூரத்தில் உள்ள அருவி இதனால் 'கல்யாண தீர்த்தம்' என்று பெயர் பெற்றது.

மகாபாரதத்தில் தாமிரபரணி[தொகு]

பொதிகை மலையில் தோன்றி வங்கக்கடலில் கலக்கும் இந்த ஆறு 70 மைல் நீளமுடையது. வடமொழியில் உள்ள மகாபாரதத்தில்,

குந்தியின் மகனே! மோட்சத்தை அடையக் கடுந்தவம் புரிந்த முனிவர்களின் ஆசிரமத்தில் இருந்த தாமிரபரணியின் பெருமையை உனக்கு நினைவுபடுத்துகிறேன்

என்று ஒரு முனிவர் தர்மனைப் பார்த்துச் சொல்வதாக ஒரு பாடல் உண்டு. காளிதாசனின் ரகு வம்சத்திலும் தாமிரபரணி கடலில் கலக்கும் இடத்தில் விளைந்த உயர்தர முத்துக்களைக் கொண்டு வந்து ரகுவின் காலடியில் பணிந்ததாக ஒரு பாடல் உண்டு.

பிற நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பார்வையில் தாமிரபரணி[தொகு]

இதன் ஒரு துணையாறு சிற்றாறு குற்றால அருவியாக விழுகிறது. "உலகத்திலேயே மிக அருமையானதும், தூய்மையானதுமான நீராடுதுறை குற்றாலமே என்று துணிந்து கூறுதல் சற்றும் மிகையாகாது"என்று கால்டுவெல் எழுதுகிறார். தாமிரபரணி ஒரு காலத்தில் இலங்கை வரை பாய்ந்து கொண்டிருந்ததாக கிரேக்க பயணக்குறிப்புகள் சொல்கின்றன. அக்காலத்தில் கிரேக்க ஆராய்ச்சியாளர் ஒருவர் இலங்கையை ‘தாம்ரபர்ணே’ என்று குறிப்பிட்டுள்ளார். ஈழத்தமிழர்களின் பேச்சு வழக்கில் பெருவாரியான சொற்கள் திருநெல்வேலி வட்டார வழக்கு போன்றே இருக்கும்.

இராமாயணத்தில் தாமிரபரணி[தொகு]

தாமிரபரணி தமிழகத்தின் ஒரே, வற்றாத ஆண்டு முழுவதும் நீரோடும் ஆறாகும் . இது பொதிகை மலையில் உள்ள மூலிகைகளின் நற்குணங்களையும் கொண்டுள்ளது. வால்மீகி இராமாயணத்தில் கிட் கிந்தா காண்டம் 41 ஆம் சருக்கத்தில் சில சுலோகங்கள் உள்ளன. அதில் ஒன்று

அதஸ்யாஸ்னம் நகல்யாக்ரே மலயங்ய தாம்ரபரணம் க்ராஹ ஜிஷ்டாம்த்ரச்யத்

அதாவது மலை சிகரத்தில் (பொதிகை) அமர்ந்தவர் அகத்திய முனிவர். தாமிரபரணி ஆறு முதலைகள் நிறைந்தது என்று பொருளாகும்.

தாமிரபரணியும் தமிழர் நாகரிகமும்[தொகு]

திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த வருட துவக்கத்தில் மிகப் பழமை வாய்ந்த புதைந்து போயிருந்த நாகரிகத்தின் அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டன; அவை, அந்த இடம் மக்கள் கூடி வாழ்ந்த நாகரிகம் செறிந்த ஊரின் எல்லா அடையாளங்களையும் கொண்டிருந்ததாக அறியப்பட்டது. பண்டைக்காலத்தில், 'பொருநை' ஆறு (தாமிரபரணி) தமிழர்களின் நாகரீகப் படிநிலைகளில் முக்கிய இடத்தைக் கொண்டிருந்ததை நமது பண்டை இலக்கியங்கள் வாயிலாகவும், வரலாற்றுக் குறிப்புகள் வாயிலாகவும் அறிய முடியும். குமரிக்கண்டம் கொடுங்கடல் கொள்ளப்பட்ட பிறகு 'பொருநை'வெளிதான் தமிழர்களின் தாயகமாக இருந்திருக்க வேண்டும்.

துணையாறுகள்[தொகு]

துணையாறு தொலைவு உற்பத்தி சேருமிடம் தாமிரபரணி அதுவரை கடந்திருந்த தொலைவு
காரையாறு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் காரையாறு அணை 6 கிலோமீட்டர்கள் (4 mi)
சேர்வலாறு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் பாபநசம் சரணாலயம் 22 கிலோமீட்டர்கள் (14 mi)
மணிமுத்தாறு 9 கிலோமீட்டர்கள் (6 mi) மாஞ்சோலை மலை ஆலடியூர் 36 கிலோமீட்டர்கள் (22 mi)
கடனாநதி அகத்தியமலை உயிரிக்கோளம் திருப்புடைமருதூர் 43 கிலோமீட்டர்கள் (27 mi)
பச்சையாறு 32 கிலோமீட்டர்கள் (20 mi) களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் தருவை 61 கிலோமீட்டர்கள் (38 mi)
சிற்றாறு 80 கிலோமீட்டர்கள் (50 mi) குற்றாலம் அருவிகள் சீவலப்பேரி 73 கிலோமீட்டர்கள் (45 mi)

தாமிரபரணி பாசனமும், அணைக்கட்டுகளும்[தொகு]

தாமிரபரணியின் இருபுறமும் பாசனம் செழிக்க முதல் ஏழு அணைக்கட்டுகளும் கால்வாய்களும் பண்டைய கால அரசர்களினால் அமைக்கப்பட்டிருந்தன. கடைசியாக 1869ல் ஆங்கிலேயர் காலத்தில் சிறீவைகுண்டம் அணைக்கட்டு கட்டப்பட்டது.[3]

எண் அணைக்கட்டின் பெயர் பதிவுசெய்யப்பட்ட
ஆயக்கட்டு
(ஹெக்டரில்)
கால்வாயின் பெயிர்
1. கோடைமேழளகியான் அணைக்கட்டு 1281.67 1. தெற்கு கோடைமேழளகியான் கால்வாய்

2. வடக்கு கோடைமேழளகியான் கால்வாய்

2. நதியூன்னி அணைக்கட்டு 1049.37 நதியூன்னி கால்வாய்
3. கனடியன் அணைக்கட்டு 2266.69 கனடியன் கால்வாய்
4. அரியநாயகிபுரம் அணைக்கட்டு 4767.30 கோடகன் கால்வாய்
5. பழவூர் அணைக்கட்டு 3557.26 பாளையம் கால்வாய்
6. சுத்தமல்லி அணைக்கட்டு 2559.69 திருநெல்வேலி கால்வாய்
7. மருதூர் அணைக்கட்டு 7175.64 1. மருதூர் மேலக்கால்

2. மருதூர் கீழக்கால்

8. சிறீவைகுண்டம் அணைக்கட்டு 1. தெற்கு முதன்மை அணைக்கட்டு

2. வடக்கு முதன்மை அணைக்கட்டு

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிரபரணி_ஆறு&oldid=2782294" இருந்து மீள்விக்கப்பட்டது