திருவைகுண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்ரீவைகுண்டம்
ஸ்ரீவைகுண்டம்
இருப்பிடம்: ஸ்ரீவைகுண்டம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°37′N 77°56′E / 8.62°N 77.93°E / 8.62; 77.93ஆள்கூற்று: 8°37′N 77°56′E / 8.62°N 77.93°E / 8.62; 77.93
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இ. ஆ. ப. [3]
பேரூராட்சி தலைவர் காந்தாசிவசுப்பு
மக்கள் தொகை 16,214 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


17 metres (56 ft)

ஸ்ரீவைகுண்டம் (ஆங்கிலம்:Srivaikuntam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 8°37′N 77°56′E / 8.62°N 77.93°E / 8.62; 77.93 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 17 மீட்டர் (55 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,214 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். ஸ்ரீவைகுண்டம் மக்களின் சராசரி கல்வியறிவு 87% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 91%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஸ்ரீவைகுண்டம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

இவ்வூரின்சிறப்பு[தொகு]

இங்கு அமைந்துள்ள வைகுண்டநாதர் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் ஒன்றாகும். மூலவர் வைகுண்டபதி. உற்சவர் கள்ளபிரான். தாயார்களின் நாமம் சோரநாத நாயகி மற்றும் வைகுண்டநாத நாயகி ஆகும்.நவதிருப்பதி தலங்களில் முதலாவதான இத்தலம் சூரியனுக்குரியது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் ஸ்ரீவைகுண்டத்தை வைப்புத் தலமாகப் பாடியுள்ளார். இக்கோவிலில் உள்ள திருவேங்கடமுடையான் சந்நிதியில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த அற்புதமான சிற்பங்கள் உள்ளன.

ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள சிவகாமி அம்மை உடனுறை திருவைகுண்டம் கைலாசநாதர் கோயில், தூத்துக்குடி நவகைலாயங்களில் ஒன்றாகும். இந்த லிங்கம் அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவரால் வழிபடப்பட்டது. சனீசுவரர் இறைவனை வழிபட்ட தலமாதலால் நவகைலாயங்களில் இது சனீசுவரத் தலம் ஆகும். சிவன் கோவிலிலும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த சிற்பங்கள் உள்ளன. இறைவனுக்கு எதிரே உள்ள கோபுரம் திருமலை நாயக்கரால் துவங்கப்பட்டுக் கைவிடப்பட்டு அரைகுறையாக நிற்கிறது. இங்குள்ள யாளியின் சிற்பங்கள் குறிப்பிடத் தக்கவை. யாளியின் வாயில் உள்ள உருளும் பந்து நாயக்கர் கால சிற்பங்களின் சிறப்பு அம்சம்.

ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் என்ற மகானின் அவதாரத் தலமும் ஆகும். இவர் தமது ஐந்தாவது வயது வரை வாய் பேசாதிருந்தார். இவரது பெற்றோர் அருகிலுள்ள திருச்செந்தூர்ப் பதியில் தங்கி விரதம் இருந்தனர். முருகன் இவர் முன் தோன்றி ஒரு மலரைக் காட்ட உடன் பூமேவு செங்கமல என்று துவங்கும் கந்தர் கலிவெண்பா பாடினார் என்பது வரலாறு. பின்னர் இவர் மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ், மீனாட்சி அம்மை குறம், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களையும் அருளினார். காசி சென்று அங்கு சைவ மடத்தை நிறுவ விரும்பினார். அதற்கு நிலம் தந்து உதவி செய்ய வேண்டி தில்லி சுல்தானை அணுகினார். அவரிடம் பேச இந்தி மொழி அறிவு தேவைப்பட்டது. கலைவாணியைக் குறித்துப் பத்துப் பாடல்கள் அடங்கிய சகலகலா வல்லி மாலை என்ற நூலை இயற்ற, கலைவாணியின் அருளால் இந்தி மொழியில் அப்போதே வல்லமை பெற்று சுல்தானிடம் வேண்டிய உதவியைப் பெற்றார் என்பதும் வரலாறுஆகும்.

பார்க்க வேண்டிய இடங்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "Srivaikuntam". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவைகுண்டம்&oldid=2470657" இருந்து மீள்விக்கப்பட்டது