மணிமுத்தாறு (தாமிரபரணியின் துணை ஆறு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணிமுத்தாறு தென்னிந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குச் சாரலில் உருவாகிறது. இது தாமிரபரணி நதியின் முக்கிய துணை நதி ஆகும்.

சிங்கம்பட்டி ஜமீந்தாருக்கு முன்னாளில் சொந்தமாக இருந்ததும், தற்சமயம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ளதும் 1300 மீ உயரம் கொண்டதுமான ஒரு மலைச்சிகரத்தில் அடர்ந்த காட்டின் இடையே உருவாகி 9 கி.மீ மட்டுமே ஓடி கல்லிடைக்குறிச்சிக்கு அருகே தாமிரபரணி நதியைச் சென்றடைகிறது.

இந்நதி எப்பொழும் நீர் நிறைந்து இருப்பதால் தாமிரபரணிக்கு இது கணிசமான அளவு நீரைச் சேர்க்கிறது.

இந்நதி தாமிரபரணியுடன் சேருவதற்கு 3 கி.மீ முன்பு இதன் குறுக்கே அணைக்கட்டு 1957ல் கட்டப்பட்டது.[1]

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rivers". 2006-09-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2006-09-24 அன்று பார்க்கப்பட்டது.