கும்பக்கரை அருவி

ஆள்கூறுகள்: 10°10′48″N 77°31′50″E / 10.18000°N 77.53056°E / 10.18000; 77.53056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கும்பக்கரை அருவி
Map
அமைவிடம்தேனி மாவட்டம்
ஆள்கூறு10°10′48″N 77°31′50″E / 10.18000°N 77.53056°E / 10.18000; 77.53056
ஏற்றம்400 மீட்டர்கள் (1,300 அடி)
வீழ்ச்சி எண்ணிக்கை2
நீர்வழிபம்பர் ஆறு (Pambar river)

கும்பக்கரை அருவி, இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில், பெரியகுளத்துக்கு அண்மையில் அமைந்துள்ளது. பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதி, இயற்கைச் சூழலிலுள்ள இந்தியாவில் சுற்றுலாத்துறைகளில் ஒன்றாக இப்பகுதி திகழ்கின்றது. கோடைக்கானல் மலையில் இருந்து உருவாகும் நீரூற்று மலையடிவாரத்தை அடைகிறது. இவ்விடம் கும்பக்கரை எனப்படுகின்றது.

பெயர்க் காரணம்[தொகு]

இப்பகுதியிலுள்ள மாட்சிநாயக்கன், வீரபுத்திரன், வைரவன், பூதநாட்சி, செழும்புநாட்சி, சோத்துமாயன், சின்ன அண்ணன், கருப்பணசாமி ஆகிய வன தெய்வங்கள் இங்குள்ள கரையில் கும்பலாகக் கூடுமாம். அதனால் இது கும்பல்கரை என்று முன்னர் அழைக்கப்பட்டதாம். இந்த கும்பல்கரையே இன்று கும்பக்கரை என்று மருவியதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நீர்வீழ்ச்சியின் பகுதிகள்[தொகு]

கும்பக்கரை நீர்வீழ்ச்சிப் பகுதியில் இந்த நீர்வீழ்ச்சி தவிர தண்ணீர் செல்லும் தடங்களிலுள்ள வழுக்குப் பாறை, யானைக் கெஜம், உரல் கெஜம், பாம்பு கெஜம் என்று அழைக்கப்படும் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நீராடி மகிழ்கின்றனர். இந்த தண்ணீர் தடப்பகுதிகளில் சில இடங்களில் குளிப்பது ஆபத்தானது என்று தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

பயண வசதி[தொகு]

தேனி மாவட்டம் பெரியகுளம் நகரிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இந்த நீர்வீழ்ச்சிக்கு குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை இயக்குகிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்பக்கரை_அருவி&oldid=3629602" இலிருந்து மீள்விக்கப்பட்டது