உள்ளடக்கத்துக்குச் செல்

பெரியகுளம்

ஆள்கூறுகள்: 10°07′N 77°33′E / 10.12°N 77.55°E / 10.12; 77.55
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரியகுளம்
பெரியகுளம்
இருப்பிடம்: பெரியகுளம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°07′N 77°33′E / 10.12°N 77.55°E / 10.12; 77.55
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
வட்டம் பெரியகுளம் வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜுவனா, இ. ஆ. ப [3]
நகர்மன்றத் தலைவர்
சட்டமன்றத் தொகுதி பெரியகுளம்
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். சரவண குமார் (திமுக)

மக்கள் தொகை 42,976 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


282 மீட்டர்கள் (925 அடி)

குறியீடுகள்

பெரியகுளம் (ஆங்கிலம்:Periyakulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இங்கு 100 ஆண்டு காலம் பழமையும் பெருமையும் வாய்ந்த விக்டோரியா நினைவு ஆண்கள் அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளது.[சான்று தேவை]

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 10°07′N 77°33′E / 10.12°N 77.55°E / 10.12; 77.55 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 282 மீட்டர் (925 அடி) உயரத்தில் இருக்கின்றது.

வரலாறு[தொகு]

பாண்டியர்களின் ஆட்சியில் இருந்த இப்பகுதி பின்பு நாயக்கர் ஆட்சி காலத்தில் தொட்டிய நாயக்கர் இனத்தை சேர்ந்த அப்பாச்சி கவுண்டர் என்பவரால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் கன்னடம், மற்றும் தெலுங்கு பேசும் தொட்டிய நாயக்கர்கள் அதிக அளவில் உள்ளனர் .[5]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 30 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 11,401 வீடுகளையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 42,976 ஆகும். அதில் 21,345 ஆண்களும், 21,631 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 88.2%மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4095 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 968 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 6,457 மற்றும் 6 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 78.57%, இசுலாமியர்கள் 16.01%, கிறித்தவர்கள் 5.25% மற்றும் பிறர் 0.16% ஆகவுள்ளனர்.[6]

கோயில்கள்[தொகு]

 • அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்: கி.பி. 10ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதலாம் இராஜேந்திர சோழனால் இந்த ஆலயம் கட்டப்பட்டது. [சான்று தேவை]
 • அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில்
 • வீச்சுகருப்பையா கோயில்
 • மீனாட்சி அம்மன் கோயில்
 • பெருமாள் கோயில்
 • காளஸ்திரி கோயில்
 • பகவதி அம்மன் கோயில்

போன்ற முக்கிய கோவில்கள் உள்ளது *அருள்மிகு ஶ்ரீ தொட்டிச்சி அம்மன் கோயில் உள்ளது

சோத்துப்பாறை அணை[தொகு]

பெரியகுளம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு கொடைக்கானல் மலை சிகரத்தில் இருந்து நீர் வருகிறது. இது பெரியகுளம் மக்களின் முக்கிய குடிநீர் தேவையை பூர்த்திச் செய்கிறது. இந்த மலையிலிருந்து சுமார் 7 கீ.மீ தூரத்தில் கன்னக்கரை என்ற ஊரும் அங்கிருந்து சுமார் 10 கீ.மீ தூரத்தில் அகமலை என்ற கிராமமும் உள்ளது. கன்னக்கரை வரை மட்டுமே வாகனங்களில் செல்ல முடியும் அதற்கு மேல் உள்ள அகமலையை அடைய நடந்துதான் செல்ல முடியும்.

வராக நதி[தொகு]

வராக நதி பெரியகுளம் நகரை, வடகரை மற்றும் தென்கரை என இரண்டாகப் பிரிக்கிறது. இந்த நதி சோத்துப்பாறையில் இருந்து உபரி நீராக வருகிறது. இங்கு எப்பொழுதும் நீர் வற்றாமல் ஓடிக்கொண்டே இருப்பதால் இதை வற்றாத நதி என்றும் காலப்போக்கில் வராக நதி என்றும் அழைக்கிறார்கள். இது பெரியகுளம் வழியாக சென்று வடுகபட்டி, மேல் மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் வழியாக சென்று வைகை ஆற்றில் கலக்கிறது.

தீர்த்த தொட்டி[தொகு]

ஊரின் மேற்கு பகுதியில் பாலசுப்புரமணி கோவிலின் பின்பகுதியில் இது உள்ளது. இந்த தொட்டியிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள கைலாசநாதர் மலைகோயிலில் இருந்து பூமியின் அடிப்பகுதி வழியாக நீர் வருவதாக கூறப்படுகிறது. ஆண்டிற்கு ஒருமுறை இங்கு திருவிழா நடைபெறுகிறது.[சான்று தேவை]

கும்பக்கரை நீர்வீழ்ச்சி[தொகு]

இங்கு கும்பக்கரை அருவி எனும் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. இது பெரியகுளம் பேருந்து நிலையத்திலிருந்து சரியாக 9 கி.மீ தூரத்தில் உள்ளது. கும்பக்கரையிலிருந்து சுமார் 18 கி.மீ தூரத்தில் கொடைக்கானல் மலைச் சிகரம் உள்ளது.[சான்று தேவை]

புகழ் பெற்றவர்கள்[தொகு]

 • இந்த ஊரைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம் சட்டமன்ற எதிர்கட்சித் துணை தலைவராக பணியாற்றி வருகிறார். இவர் 1996 - 2001 ஆம் ஆண்டுக் காலங்களில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
 4. "Periyakulam". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
 5. http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml
 6. பெரியகுளம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியகுளம்&oldid=3696872" இலிருந்து மீள்விக்கப்பட்டது