உள்ளடக்கத்துக்குச் செல்

போ. மீனாட்சிபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போ.மீனாட்சிபுரம் (B.Meenakshipuram, பி. மீனாட்சிபுரம்), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டத்தில், தேனி - போடிநாயக்கனூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பேரூராட்சியாகும். போ.மீனாட்சிபுரம் பேரூராட்சி ஒரு வயலும் வயல் சார்ந்த நகரமாகும். இப்பேராட்சியில் பருத்தி, நெல் மற்றும் பணப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன. மேலும் இப்பேராட்சி பால்வளம் மற்றும் மீனவளம் நிறைந்த பேரூராட்சி ஆகும்.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 8,091 மக்கள்தொகை கொண்ட பேரூராட்சி, 12 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இப்பேரூராட்சியானது போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. போ.மீனாட்சிபுரம் பேரூராட்சியின் இணையதளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=போ._மீனாட்சிபுரம்&oldid=2672965" இலிருந்து மீள்விக்கப்பட்டது