தேனி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேனி மாவட்டம்
மாவட்டம்
Location in Tamil Nadu, India
Location in Tamil Nadu, India
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
உருவாக்கம் ஜூலை 07, 1996
தலைமையகம் தேனி
வட்டங்கள் பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர்
அரசு
 • ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் இ.ஆ.ப[1]
பரப்பளவு
 • மாவட்டம் 2,889
மக்கள்தொகை (2011)[2]
 • மாவட்டம் 1
 • அடர்த்தி 430
 • பெருநகர் 5,91,841
மொழிகள்
 • அதிகாரபூர்வம் தமிழ்
நேர வலயம் இசீநே (ஒசநே+5:30)
PIN 625531
தொலைபேசிக் குறியீடு 04546
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு [[ISO 3166-2:IN|]]
வாகனப் பதிவு TN-60
Coastline 0 kilometres (0 mi)
Largest city Theni
Sex ratio M-50.5%/F-49.5% /
Literacy 71.58%%
Legislature type elected
Legislature Strength 5
Precipitation 833.5 millimetres (32.81 in)
Avg. summer temperature 40.5 °C (104.9 °F)
Avg. winter temperature 15 °C (59 °F)
இணையதளம் www.theni.nic.in

தேனி மாவட்டம் (English:Theni district) தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் தேனி ஆகும்.

தேனி மாவட்டம் தமிழக அரசின் வருவாய்த்துறை அரசு ஆணை எண் 679, நாள் ஜூலை 25, 1996 இன் மூலம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தேனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இந்த மாவட்ட உருவாக்கத்திற்காக இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான டாக்டர். கே. சத்யகோபால் தனி அதிகாரியாக முதலில் நியமிக்கப்பட்டார். பின்னர் அவரே முதல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். தேனி மாவட்டம் ஜனவரி 1, 1997 முதல் செயல்படத் துவங்கியது. தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு, இந்தியாவில் முதன் முறையாக சர்வதேசத் தரச்சான்று (ஐ.எஸ்.ஓ.,-9001) விருது வழங்கப்பட்டுள்ளது.[3]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி தேனி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 12,45,899 ஆகும். இவர்களில் 6,25,683 ஆண்கள். 6,20,216 பெண்கள் ஆவார்கள். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 991 பெண்கள், இது தேசிய சராசரியான 929-யை விட மிக அதிகம் ஆகும். மொத்த மக்கள் தொகையில் 1,19,661 பேர் ஆறு வயதிற்கும் கீழானவர்கள். மாவட்டத்தின் சராசரி கல்வியறிவு தேசிய சராசரியான 72.99% ஐ ஒப்பிடும் போது, அதை விட அதிகமாக 77.26% உள்ளது. இதில் ஆண்களில் கல்வியறிவு பெற்றோர் 85.03% ஆகவும், பெண்களில் கல்வியறிவு பெற்றோர் 69.46% ஆகவுமாக உள்ளனர்.

2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 11,48,990 (92.22%) ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 56,751 (4.56%), கிருஸ்துவர்கள் 37,574 (3.02%), மதம் குறிப்பிடாதோர் 2,251, சீக்கியர்கள் 152, புத்த மதத்தினர் 79, சமணர்கள் 28 மற்றவர்கள் 74 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றனர்.[4]

வருவாய்த்துறை அமைப்புகள்[தொகு]

தேனி மாவட்ட வருவாய்த்துறையில் பெரியகுளம், உத்தமபாளையம் இரண்டு வருவாய்க் கோட்டங்கள், இந்த வருவாய்க் கோட்டங்களின் கீழ் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர் என்று ஐந்து தாலுகா அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வருவாய்க் கிராமங்கள்[தொகு]

இம்மாவட்டத்தில், ஆண்டிபட்டி வட்டத்தில் 25 வருவாய்க் கிராமங்களும், போடிநாயக்கனூர் வட்டத்தில் 15 வருவாய்க் கிராமங்களும், தேனி வட்டத்தில் 12 வருவாய்க் கிராமங்களும், பெரியகுளம் வட்டத்தில் 22 வருவாய்க் கிராமங்களும், உத்தமபாளையம் வட்டத்தில் 39 வருவாய்க் கிராமங்களும், என வருவாய்த்துறை அமைப்பின் கீழ் 113 வருவாய்க் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிலுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாக கிராம உதவியாளர்கள் (முன்பு தலையாரி என்று அழைக்கப்பட்டனர்) உள்ளனர்.

காவல்துறை அமைப்புகள்[தொகு]

முதன்மைக் கட்டுரை: தேனி மாவட்டக் காவல்துறை

தேனி மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்கான காவல்துறையில் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் ஒன்றும், இதன் கீழ் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர் ஆகிய 5 இடங்களில் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்களும், இதன் கீழ் சட்டம்- ஒழுங்கிற்கான 30 காவல் நிலையங்களும், 4 மகளிர் காவல் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

உள்ளாட்சி அமைப்புகள்[தொகு]

தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகள்(முன்பு சிறப்பு கிராமப் பஞ்சாயத்துகள்), 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களும் , இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் கீழ் 130 கிராமப் பஞ்சாயத்துக்களும் என உள்ளாட்சி அமைப்புகள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சபைகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி உள்ளாட்சித்துறை அலுவலர்கள் நலத்திட்டப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

கல்வி நிறுவனங்கள்[தொகு]

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள்[தொகு]

உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்[தொகு]

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், உத்தமபாளையம் எனும் இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இரு கல்வி மாவட்டங்களும் இணைந்த தேனி முதன்மைக் கல்வி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் 46, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் 23, அரசு உயர்நிலைப்பள்ளிகள் 40 , அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள் 15 மற்றும் சுயநிதி ஆங்கிலவழிக்கல்வி அளிக்கும் பல மேல்நிலைப்பள்ளிகளும் உயர்நிலைப்பள்ளிகளும் உள்ளன.

கல்லூரிகள்[தொகு]

தேனி மாவட்டத்தில், தேனியில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி, பெரியகுளத்தில் ஒரு அரசு தோட்டக்கலைக் கல்லூரி, போடி, உத்தமபாளையம், பெரியகுளம் ஆகிய இடங்களில் அரசு உதவி பெறும் கலைக்கல்லூரிகள், ஆண்டிபட்டி, கோட்டூர் ஆகிய இடங்களில் மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரிகள் மற்றும் 5 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், கலைக்கல்லூரிகள், உடற்கல்வியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் உள்ளன.

தொழிற்பயிற்சி நிலையம்[தொகு]

தேனியில் ஒரு அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஆண்டிபட்டியில் ஒரு அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை உள்ளன. இவை தவிர சில சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அரசு மருத்துவமனைகள்[தொகு]

தேனி மாவட்டத்தில் சுகாதாரப் பணிகளுக்காக 1 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 6 அரசு மருத்துவமனைகள், 25 ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் 162 துணைச் சுகாதார மையங்கள் மற்றும் ஒரு மாவட்டக் காச நோய் மையம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

நூலகங்கள்[தொகு]

தேனி மாவட்டத்தில் ஒரு மாவட்ட மையப் பொது நூலகம், 58 கிளை நூலகங்கள், 13 கிராம நூலகங்கள் மற்றும் 17 பகுதி நேர நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

மக்களவைத் தொகுதி[தொகு]

தேனி மாவட்டத்தில் இந்திய நாடாளுமன்றத்திற்கான ஒரு மக்களவைத் தொகுதி இடம் பெற்றிருக்கிறது.

தேனி மாவட்டத்திலிருக்கும் தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுடன் மதுரை மாவட்டத்திலிருக்கும் சேடபட்டி சட்டமன்றத் தொகுதியும் சேர்த்து பெரியகுளம் மக்களவைத் தொகுதி அமைக்கப்பட்டிருந்தது.

2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் இந்த பெரியகுளம் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டுள்ளது

இந்தியத் தொகுதி மறு சீரமைப்பில் தேனி மாவட்டத்தில் இருந்த பெரியகுளம் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு தேனி மக்களவைத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் தேனி மாவட்டத்தில் இருக்கும் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி (தனி), போடி சட்டமன்றத் தொகுதி, கம்பம் சட்டமன்றத் தொகுதி ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளும், மதுரை மாவட்டத்தில் இருக்கும் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி, சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி (தனி) என்ற இரண்டு தொகுதிகளும் சேர்த்து மொத்தம் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருக்கின்றன.

2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் புதிதாக இந்த தேனி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜே. எம்.ஆரூண் ரஷீத் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்தியத் தொகுதி மறு சீரமைப்பில் தேனி மாவட்டத்தில் இருந்த தேனி சட்டமன்றத் தொகுதி நீக்கப்பட்டுவிட்டது. தற்போது தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 4 சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த நான்கு தொகுதிகளில் 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் குறித்த விவரம்:

 1. ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி) - தங்க தமிழ்ச்செல்வன் - அ.இ.அ.தி.மு.க
 2. போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)ஓ. பன்னீர்செல்வம்அ.இ.அ.தி.மு.க
 3. பெரியகுளம் (தனி)சட்டமன்றத் தொகுதி -கே.கதிர்காமு - அ.இ.அ.தி.மு.க
 4. கம்பம் (சட்டமன்றத் தொகுதி) - எஸ்.டி.கே.ஜக்கையன் - அ.இ.அதி.மு.க

பார்க்க முதன்மைக் கட்டுரை: தேனி மாவட்ட சட்டமன்றத் தொகுதிகள்

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

தேனி மாவட்டத்தில் முல்லை, வைகை, வராக நதிகள் பாய்ந்து வளம் சேர்க்கின்றன. இதனால் இம்மாவட்டத்தின் பெரும் பகுதிகள் பச்சைப்பசேல் என்று இயற்கை அழகுடன் உள்ளது. இம்மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்கள் என்று 8 இடங்கள்உள்ளது.

 1. வைகை அணை
 2. முல்லைப் பெரியாறு அணை
 3. சோத்துப்பாறை அணை
 4. சுருளி நீர் வீழ்ச்சி
 5. கும்பக்கரை அருவி
 6. மேகமலை
 7. வெள்ளிமலை
 8. போடி மெட்டு
 9. சின்ன சுருளி அருவி

கோயில்கள்[தொகு]

இம்மாவட்டத்தில் பிரபலமாக விளங்கும் சில கோயில்கள்.

 1. குச்சனூர் சனீஸ்வரன் கோயில்
 2. வீரபாண்டி கண்ணீசுவரமுடையார் கோயில்
 3. வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயில்
 4. பெரியகுளம் பாலசுப்பிரமணியசுவாமி கோயில்
 5. தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில்
 6. சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில்
 7. வீரப்ப அய்யனார் கோயில்
 8. போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில்
 9. தீர்த்தத்தொட்டி சித்திர புத்திர நாயனார் கோயில்
 10. வேலப்பர் கோயில்
 11. டொம்புச்சேரி ஸ்ரீ முத்தையா சாமி கோவில்
 12. கிழக்கு தெரு பெருமாள் கவுண்டன் பட்டி ஸ்ரீ வடகத்தி மாரியம்மன் கோவில்

மின் உற்பத்தி நிலையங்கள்[தொகு]

தேனி மாவட்டத்திலுள்ள ஆறுகளை ஆதாரமாகக் கொண்டு மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை

 1. பெரியார் நீர்மின்சக்தி உற்பத்தி நிலையம்
 2. சுருளியாறு நீர்மின்சக்தி உற்பத்தி நிலையம்
 3. வைகை நுண் புனல் மின் நிலையம்.

இவை தவிர தேனி மாவட்டத்தில் தேனி, ஆண்டிபட்டி-கண்டமனூர் , கம்பம் மற்றும் போடிநாயக்கனூர் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வரும் காற்றைப் பயன்படுத்தி காற்றாலைகள் கொண்டு மின் உற்பத்தி செய்யும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.[5]

அரசியல்வாதிகள்[தொகு]

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சில முக்கிய அரசியல்வாதிகள் மட்டும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

 • பி. டி. ராஜன் - நீதிக்கட்சித் தலைவர், சென்னை மாகாண முதலமைச்சர்.
 • பி. டி. ஆர். பழனிவேல்ராஜன் - முன்னாள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர், முன்னாள் தமிழ்நாடு அரசு அமைச்சர் (தி.மு.க)
 • பெ. செல்வேந்திரன் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி, (தி.மு.க)
 • ஓ. பன்னீர்செல்வம் - தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு அரசு நிதியமைச்சர் அமைச்சர் (அ.இ.அ.தி.மு.க)

(இங்கு அமைச்சராகவும், முக்கியக் கட்சிகளில் மாநில அளவில் பொறுப்புகளில் இருந்து பெயர் பெற்றவர்கள் மட்டும் குறிப்பிடலாம்)

திரைப்படத் துறையினர்[தொகு]

தேனி மாவட்டத்தில் பிறந்த திரைப்பட நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் (எஸ்.எஸ்.ஆர்), மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன், மறைந்த நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் தனுஷ் ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், பாரதிராஜா, கஸ்தூரி ராஜா, பாலா, டாக்டர் ராஜசேகர் மற்றும் செல்வராகவன் சிராஜ் ஆகியோர் இயக்குனர்களாகவும், இளையராஜா, கங்கை அமரன், யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா மற்றும் பவதாரிணி ஆகியோர் திரை இசைத் துறையிலும், கவிஞர் வைரமுத்து, கவிஞர் நா.காமராசன் மற்றும் கவிஞர் மு.மேத்தா ஆகியோர் கவிஞர்களாகவும் புகழ் பெற்றவர்களாக உள்ளனர்.

எழுத்தாளர்கள்[தொகு]

முதன்மைக் கட்டுரை: தேனி மாவட்ட எழுத்தாளர்கள்

தேனி மாவட்டத்தில் இருந்து அந்தோணிமுத்து புலவர், சி. சு. செல்லப்பா, வே. தில்லைநாயகம், க. அருணாசலம், கவிஞர் வைரமுத்து, கவிஞர் நா.காமராசன், கவிஞர் மு.மேத்தா, உமா மகேஸ்வரி, கவிஞர் சக்தி ஜோதி, தேனி மு. சுப்பிரமணி, தேனி.எஸ்.மாரியப்பன் அம்பை சுதர்சனன் என்று பல எழுத்தாளர்கள், கவிஞர்கள் உருவாகியிருக்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Theni District". Theni District (2014-12-28). பார்த்த நாள் 5 January 2015.
 2. "2011 Census of India" (Excel). Indian government (16 April 2011).
 3. சர்வதேசத் தரச்சான்று செய்தி
 4. Theni District : Census 2011 data
 5. தேனி மாவட்ட மின் உற்பத்தி நிலையங்கள் குறித்த ஆங்கிலச் செய்தி

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனி_மாவட்டம்&oldid=2518492" இருந்து மீள்விக்கப்பட்டது