உமா மகேஸ்வரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உமா மகேஸ்வரி (மஹி) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் எழுத்தாளர் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். இவர் தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். கவிதைகளில் தொடங்கி சிறுகதைகள், நாவல் என்று விரிவாகப் பயணம் செய்பவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்பொழுது, கணவர், குழந்தைகளுடன் ஆண்டிபட்டியில் வசிக்கிறார்.[1]

வெளிவந்த நூல்கள்[தொகு]

 • நட்சத்திரங்களின் நடுவே (1990) கவிதைத் தொகுதி
 • வெறும் பொழுது (2002) - கவிதைத் தொகுதி
 • மரப்பாச்சி (2002)- சிறுகதைத் தொகுதி
 • யாரும் யாருடனும் இல்லை (2003) - நாவல்
 • கற்பாவை (2004) - கவிதைத் தொகுதி
 • தொலைகடல் (2004) - சிறுகதைத் தொகுதி
 • அரளி வனம் (2008) - சிறுகதைத் தொகுதி
 • "இறுதிப் பூ" (2008) - கவிதைத்தொகுதி

பரிசுகள்/விருதுகள்[தொகு]

 • கதா தேசிய விருது
 • திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
 • இந்தியா டுடேயின் சிகரம் விருது
 • ஏலாதி இலக்கியப் பரிசு
 • இலக்கிய சிந்தனை இலக்கியப் பரிசு
 • கவிஞர் சிற்பி இலக்கியப் பரிசு
 • "நஞ்சன் கூடு திருமலாம்பாள் விருது"

மேற்கோள்கள்[தொகு]

 1. "உமா மகேஸ்வரி". கீற்று (15 சூலை 2012). பார்த்த நாள் 30 சூலை 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமா_மகேஸ்வரி&oldid=2782687" இருந்து மீள்விக்கப்பட்டது