ஆண்டிபட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆண்டிபட்டி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் என். வெங்கடாசலம் இ. ஆ. ப. [3]
பேரூராட்சிமன்றத் தலைவர் க. பால்பாண்டியன்
மக்கள் தொகை

அடர்த்தி

22,992 (2001)

3,904/km2 (10,111/sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 5.89 square kilometres (2.27 sq mi)

ஆண்டிபட்டி (ஆங்கிலம்:Andipatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது ஆண்டிபட்டி, சக்கம்பட்டி எனும் இரு ஊர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட பேரூராட்சியாகும். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஓர் அழகிய கிராமம் ஆண்டிபட்டி .

வரலாறு[தொகு]

ரெட்டியாம்பட்டி பாளையத்தின் பாளையத்தை ஆட்சி செய்த 9 வது பட்டம் ஏற்ற ராஜகம்பளம் வகையாரா நீலகிரி தொப்ப நாயக்கர் மற்றும் 10 வது பட்டமேற்ற அவரது மகன் காட்டாரித் தொப்ப நாயக்கர் காலத்தில் இக்கிராமம் உருவாக்கப்பட்டது . இந்த கிராமம் பிரண்டைக்காடுக்கு மேற்காகவும் , சக்கிலிச்சி மலைக்கு கிழக்காகவும் உருவாக்கப்பட்டு குடிகளும் குடியமர்த்தப்பட்டனர் . இது திண்டுக்கல் தொல்லியியல் கையேட்டில் பதிந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,992 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஆண்டிபட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆண்டிப்பட்டி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கைத்தறி நெசவுத் தொழில்[தொகு]

ஆண்டிபட்டியின் ஒரு பகுதியாகிவிட்ட சக்கம்பட்டியில் கைத்தறி நெசவுத் தொழில் அதிக அளவில் நடைபெற்று வந்தது. தற்போது கைத்தறித் தொழில் விசைத்தறித் தொழிலாக மாற்றமடைந்து விட்டாலும் சிலர் கைத்தறிகளைக் கொண்டு நெசவு செய்து வருகின்றனர். இங்கு நெசவுத் தொழில், இங்குள்ள சாலியர் சாதியைச் சேர்ந்தவர்களால் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. சக்கம்பட்டியில் நெசவு செய்யப்பட்ட சேலைக்குச் சிறப்புப் பெயர் உண்டு. முதல் மரியாதை படத்தில் வரும் "அந்த நிலாவைத்தான் கையிலே பிடித்தேன்..." என்று தொடங்கும் கவிஞர் வைரமுத்துவின் பாடலில் "சக்கம்பட்டி சேலை கட்டி..." என்கிற வாசகமும் இடம் பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்கள்[தொகு]

சுற்றிலும் மலைப் பகுதியாக இயற்கை எழில் சூழ இருப்பதால் நிறைய தமிழ்த் திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. வாஞ்சிநாதன் (திரைப்படம்), அழகர்சாமியின் குதிரை, தர்மதுரை, பருத்திவீரன், கருத்தம்மா (திரைப்படம்), வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்), சுந்தர பாண்டியன் (திரைப்படம்), மதயானைக் கூட்டம் (திரைப்படம்) போன்ற படங்களின் பெரும்பாலான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டவையே.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.

தமிழ்நாடு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டிபட்டி&oldid=2208618" இருந்து மீள்விக்கப்பட்டது