வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இயக்கம்பொன்ராம்
தயாரிப்புபி. மதன்
கதைஎம். ராஜேஷ்(வசனம்)
திரைக்கதைபொன்ராம்
இசைஇமான்
நடிப்புசிவகார்த்திகேயன்
சத்யராஜ்
சூரி
ஒளிப்பதிவுபாலசுப்பிரமனியம்
படத்தொகுப்புவிவேக் ஹர்ஷன்
கலையகம்எசுக்கேப் ஆர்ட்டிஸ்டு மோசன் பிக்சர்சு
வெளியீடுசெப்டம்பர் 6, 2013 (2013-09-06)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு7 கோடி
(US$0.92 மில்லியன்)
[1]
மொத்த வருவாய்36.5 கோடி
(US$4.79 மில்லியன்)
[1]

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2013ல் வெளியான நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். இதை இயக்குனர் பொன்ராம் இயக்கினார். இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சத்யராஜ் மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்துள்ளனர்.[2][3] இத்திரைப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்சு நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். இதன் இசையமைப்பாளர் இமான் ஆவார். வசனங்கள் எழுதியவர் ராஜேஷ்.[4] இத்திரைப்படம் செப்டம்பர் 6, 2013ல் வெளியானது.[5]

திரைக்கதை சுருக்கம்[தொகு]

சிவனாண்டி மற்றும் பழனியாண்டி கூட்டங்களுக்கு இடையே உள்ள மோதலுடன் ஆரம்பிக்கிறது இத்திரைப்படம். சிவனாண்டி தன் மகளையே கொன்றதாக அவர் கூட்டத்தைச் சேர்ந்தவர் காவல் நிலையத்தில் பெருமைப்பட்டுக் கொள்கிறார். அங்கு இருக்கும் ஒரு காவலர் அதை பற்றி ஊரில் விசாரிக்க, கிணறு வெட்ட பூதம் கிளம்பியதுப் போல சிவனாண்டி மீது பழி விழுகிறது. காவல் துறையினர் சிவனாண்டியை கொலை நடந்ததாக கூறப்படும் இடத்திற்கு அழைத்து செல்ல, அங்கே பின்னோக்கி நகர்கிறது கதை. அதே ஊரில் போஸ்பாண்டி, கோடி இருவரும் வருத்தபடாத வாலிபர் சங்கம் எனும் சங்கத்தை நடத்தி வருகின்றவர்கள். சிவனாண்டியின் மகள் லதா பாண்டி படிக்கும் பள்ளியின் ஆசிரியை கல்யாணியை ஒருதலையாக போஸ்பாண்டி காதலிக்கிறார்.

கல்யாணிக்கு காதல் கடிதம் எடுத்து செல்லச்சொல்லி, லதா பாண்டியை போஸ்பாண்டி வற்புறுத்துகிறார். ஆனால், கல்யாணிக்கு வேறொருவருடன் நிச்சயம் ஆகிறது. இதற்கு நடுவே, சிவனாண்டி லதாபாண்டிக்கு, பதினெட்டு வயதுக்கு முன்னரே கல்யாணம் செய்து முடிக்க முற்படுகிறார். திருமணம் பற்றிய அறிவிப்பைக் கண்டு, காவல் துறைக்கு புகார் அளிக்கின்றனர் போஸ்பாண்டியும் கோடியும். இதனால் லதாபாண்டியின் கல்யாணம் நிற்கிறார். கல்யாணத்தை நிறுத்தியது போஸ்பாண்டி என்று தெரிந்தவுடன், லதாபாண்டிக்கு போஸ்பாண்டியின் மீது காதல் ஏற்படுகிறது.

ஊர் திருவிழாவில் போஸ்பாண்டிக்கும் லதாபாண்டிக்கு மேல் காதல் ஏற்படுகிறது. தன மகள் கல்யாணத்தை நிறுத்தியது போஸ்பாண்டிதான் என்று தெரிந்துக் கொண்ட சிவனாண்டி கூட்டம், போஸ்பாண்டியைத் தாக்குகிறது. உதவுவது போல வரும் சிவனாண்டி, சூசகமாக அவனை மிரட்டுகிறான். ஆத்திரம் அடைந்த போஸ்பாண்டி, சிவனாண்டி உயிருக்கும் மேலாக எண்ணும் துப்பாக்கியை கோடியுடன் சேர்ந்து திருட, சிவனாண்டியின் தூக்கத்தில் நடக்கும் வியாதி தான் அது காணமல் போக காரணம் என கூறி லதாபாண்டியின் உதவியுடன் அந்த துப்பாக்கி வீட்டுக்கு திரும்புகிறது. இதனிடையே போஸ்பாண்டிக்கும் தன் மகளுக்கும் காதல் இருப்பதை அறிந்த சிவனாண்டி, அவளுக்கு அவசரமாக திருமணம் நடத்த முனைகிறான். திருமணத்திற்கு முன் இரவு, லதாபாண்டி போஸ்பாண்டியுடன் ஊரை விட்டு ஓடிவிட, சிவனாண்டி அவர்களை கொன்றதாகக் கூறுகிறார். ஆனால், இரவோடு இரவாக ஓடிய இருவரையும் வாழ்த்தி திருமணம் செய்து வைக்கிறார்.

நடிகர்கள்[தொகு]

ஒலித் தடம்[தொகு]

Untitled

மனங்கொத்திப் பறவைக்குப் பின் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இரண்டாவது முறையாக இமான் இப்படத்திற்கு ஒலித்தடம் அமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் பாடியுள்ளார்.[6]. அனைத்துப் பாடல்களையும் யுகபாரதி எழுதியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு சூலை 14, 2013 அன்று நடைபெற்றது.[7] நடிகர் தனுஷ் வெளியிட இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் பெற்றுக்கொண்டார். "திரையின்பத்திற்காக வெளியிடப்பட்ட"தாக பிகைன்ட்வுட்சும்[8]" வெகுஜன மற்றும் வேடிக்கை காரணியாக" வெளியிடப்பட்டதாக இந்தியாகிளிட்சும் குறிப்பிட்டுள்ளன.[9]

ஒலித்தட பட்டியல்

எண் தலைப்புSinger(s) நீளம்
1. "ஊதா கலரு ரிப்பன்"  ஹரிஹரசுதன் 04:42
2. "இந்த பொண்ணுங்களே இப்படித்தான்"  ஜெயமூர்த்தி 04:32
3. "பாக்காதே பாக்காதே"  விஜய் யேசுதாஸ், பூஜா வித்யநாத் 04:35
4. "வருத்தப்படாத வாலிபர் சங்கம் உருவாக்கம்"  சிவகார்த்திகேயன், அந்தோனி தாசன் 04:00
5. "என்னடா என்னடா"  ஷ்ரேயா கோஷல், சுராஜ் சந்தோஷ், சுவேதா சுரேஷ் 04:18
6. "இந்த பொண்ணுங்களே (Dubstep mix)"  ஜெயமூர்த்தி 03:41
மொத்த நீளம்:
25:48

வெளியீடு[தொகு]

சிவகார்த்திகேயன் பாடிய பாடல் ஒளிக்கோப்பாக சூலை 13 அன்று வெளியிடப்பட்டது.[10] மறுநாள் படத்தின் முன்னோட்டம் சோனி மியூசிக் இந்தியாவால் யூடியூபில் வெளியிடப்பட்டது.[11] படம், உலகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[12]

வரவேற்பு[தொகு]

இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் குறிப்பாக போஸ்பாண்டி மற்றும் அவரது நண்பர் கோடி (சூரி)யுடனான காட்சிகளில் நல்ல பொழுதுபோக்காக உள்ளது. ஆனால் இதில் நகைச்சுவை யூடியூபில் உள்ள கிளிப் போலவே வேலை செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.[13]

பிகைன்ட்வுட்ஸ் விமர்சன வாரியம் இப்படத்திற்கு 5க்கு 2.5 என மதிப்பிட்டு எழுதியதாவது: "குறும்புக்கார சிவா கார்த்திகேயன், நகைப்புக்கிடமான சூரி மற்றும் கம்பீரமான சத்யராஜ் ஒரு நல்ல பொழுதுபோக்கு அம்சத்தைத் தந்துள்ளனர்." [14]

இந்தியாகிளிட்ஸ் இப்பட நடிகர்களைப் பாராட்டியதுடன், "இத் திரைப்படத்தின் வலிமையைக் காட்ட சத்யராஜின் நடிப்பே போதுமானது. இது சிவாவிற்கு ஆரோக்கியமான வேடிக்கைப் படமாக அமைந்துள்ளது" என்று விமர்சித்துள்ளது.[15]

இத்திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது.[16] முதள் நாளிலேயே 3.55 கோடி ரூபாயை இத்திரைப்படம் ஈட்டியுள்ளது[17] சிஃபியைப் பொறுத்தவரை இப்படம் 343 திரையரங்குகளில் முதல் மூன்று நாட்களில் திரையிடப்பட்டு 10.25 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. முதல் 17 நாட்களில் 16.5 கோடி ஈட்டியுள்ளது.[1][1]

மேற்கோள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 http://www.sify.com/movies/vvs-is-a-blockbuster-the-economics-news-tamil-njzj7ugafij.html
 2. "'Varuthapadatha Valibar Sangam' gets ready!". Sify. பார்த்த நாள் 2013-06-13.
 3. "Sivakarthikeyan and Sathyraj join hands!". TNN. The Times Of India. 2013-04-02. http://articles.timesofindia.indiatimes.com/2013-04-02/news-interviews/38216767_1_sivakarthikeyan-siva-karthikeyan-sathyaraj. பார்த்த நாள்: 2013-08-16. 
 4. "Imman composes for Siva Karthikeyan's next". The Times Of India (2012-12-28). பார்த்த நாள் 2013-06-13.
 5. Chennai Box-Office - Sep 13 to 15
 6. "Sivakarthikeyan's new avatar". Behindwoods (2013-06-26). பார்த்த நாள் 2013-08-16.
 7. "Varuthapadatha Valibar Sangam audio launch on July 14". Indiaglitz (2013-07-10). பார்த்த நாள் 2013-08-16.
 8. "Varuthapadatha Valibar Sangam Songs Review". Behindwoods (2013-07-14). பார்த்த நாள் 2013-08-16.
 9. "Varutha Padatha Valibar Sangam Music Review songs lyrics". Indiaglitz (2013-07-18). பார்த்த நாள் 2013-08-16.
 10. "YouTube". YouTube. பார்த்த நாள் 2013-08-16.
 11. "Varuthapadatha Vaalibar Sangam - Official Theatrical Trailer". YouTube (2013-07-14). பார்த்த நாள் 2013-08-16.
 12. "Varutha Padatha Valibar Sangam Tamil Movie". IndiaGlitz (2013-09-03). பார்த்த நாள் 2013-09-17.
 13. Baradwaj Rangan (2013-09-07). "Varuthapadatha Valibar Sangam: Jest cause". The Hindu. பார்த்த நாள் 2013-09-17.
 14. "Varuthapadatha Valibar Sangam Movie Review Sivakarthikeyan, Varutha Padadha Vaalibar Sangam". Behindwoods (2013-09-06). பார்த்த நாள் 2013-09-17.
 15. "Varutha Padatha Valibar Sangam Tamil Movie Review". IndiaGlitz (2013-09-06). பார்த்த நாள் 2013-09-17.
 16. http://www.sify.com/movies/varuthapadatha-valibar-sangam-opens-big-news-tamil-njimS5fbeee.html
 17. "IBTimes". IBTimes. பார்த்த நாள் 2013-09-08.