யுகபாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுகபாரதி
பிறப்புபிரேம் குமார்
2 திசம்பர் 1976 (1976-12-02) (அகவை 47)
தஞ்சாவூர்
இருப்பிடம்சென்னை, தமிழ் நாடு, இந்தியா
தேசியம்இந்தியா
குடியுரிமைஇந்தியன்
பணிபாடலாசிரியர், கவிஞர், வசனகர்த்தா
வாழ்க்கைத்
துணை
அன்புச்செல்வி[1]

யுகபாரதி (Yugabharathi) ஒரு தமிழ்க் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். இவரின் இயற்பெயர் பிரேம்குமாராகும்.[1] இவர் 1990 களின் முற்பகுதியில் பத்திரிகைகளில் கவிதைகள் எழுதத் தொடங்கியபோது, ​​சிறந்த தமிழ்க் கவிஞரான சுப்பிரமணிய பாரதியின் நினைவாக "யுகபாரதி" என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தத் தொடங்கினார். கணையாழி இதழில் பொறுப்பாசிரியராகவும், ராஜரிஷி இதழில் உதவியாசிரியராகவும் இருந்துள்ளார்.

ஆனந்தம்  திரைப்படத்தில் "பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்" என்ற பாடலை எழுதியதில் பாடலாசிரியராக அறிமுகமானார். இவர் ஏறத்தாழ இரண்டாயிரம் திரைப் பாடல்களை எழுதியுள்ளார்.

கல்வி[தொகு]

இவர் 1976 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் பிரேம் குமாராகும். இவர் தஞ்சாவூரில் உள்ள மேக்ஸ்வெல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியைப் பயின்றார். அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் பட்டயப் படிப்பு படித்தார்.[2]

குறிப்பிடத்தக்க பாடல்கள்[தொகு]

ஆனந்தம் திரைப்படத்தின் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடல், காதல் பிசாசே, மன்மத ராசா, கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம் ஆகிய இவரது பாடல்கள் புகழ் பெற்றவை. இவர் மைனா, ராஜபாட்டை, நீலம், கும்கி ஆகியத் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

பாடல்கள்[தொகு]

2002-2009[தொகு]

Year Film Songs
2001 ஆனந்தம் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்
நரசிம்மா காதல் ஆராரோ
2002 கார்மேகம் காச படி அளந்த
ரன் காதல் பிசாசே
2003 அன்பு சுட்டி பயலே
பார்த்திபன் கனவு கனாக் கண்டேனடி
புதிய கீதை வசியக்காரி
ஐஸ் அப்பப்பா உன் பார்வை, ஹே பெண்ணே & சிலையா சிலையா
ஆஹா எத்தனை அழகு நிலவிலே
அலாவுதீன் யாரோ யாரவன், ஜீபூம்பா
திருடா திருடி மன்மதராசா மன்மதராசா
அலை நீ ஒரு தேசம்
திருமலை நீயா பேசியது
ஜூட் என்ன என்ன
இன்று கார்த்திகை ஆனவளே
சிந்தாமல் சிதறாமல் சற்றுமுன் கிடைத்த தகவல்படி
2004 தென்றல் வானவில்லின் வண்ணம்
கில்லி கொக்கரக் கொக்கரக்கோ
ஜனா தித்தி திடவே
சுள்ளான் கவிதை இரவு
மதுர கண்டேன் கண்டேன் & பம்பர கண்ணு பச்ச
எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி ஐயோ ஐயோ உன் கண்கள்
ஜனனம் ஸுஷ்மிதா கிஸ் தந்த
மீசை மாதவன் கருவாகி கட்டு & புடவை வாங்கி
இவன் யாரே ஹாலிவுட் ஹான்சம், மனசே & வயசா வயசா
காதல் திருடா மோதி கொண்டது கண்கள் & ஒரு வார்த்தை பாடல்கள்
2005 ஜி எத்தனை எத்தனை
மாயாவி ஒரு தேவலோக ராணி மண்
லண்டன் அழகிய விழிகளில் & யாரோ ஒருத்தி
கிச்சா வயசு 16 ஆண்களை எனக்கு & பூனை முடி மீசை வச்சு
சந்திரமுகி கொஞ்சநேரம் கொஞ்சநேரம்
காற்றுள்ளவரை மழையில் நனைந்த மல்லிகை
தாஸ் நீ எந்தன்
அம்புட்டு இம்புட்டு எம்புட்டு வாராய் நீ வாராய்
மஜா போதுமடா சாமி
வெற்றிவேல் சக்திவேல் கொள்ளைக்கார
சண்டக்கோழி தாவணி போட்ட தீபாவளி
வணக்கம் தலைவா சுட்ட பழம்
உன்னை எனக்கு பிடிச்சுருக்கு ரெட்டைசடை வானவில்லை & உன்னைக் கொஞ்சம் தருவாயா
2006 பரமசிவன் ஒரு கிளி
ஆதி என்னை கொஞ்ச கொஞ்ச
கொக்கி ஆ சொன்னா அயனாவரம்
திமிரு ஒப்புரானே ஒப்புரானே
நீ வேண்டும் செல்லம் கள்ளத்தோணி
எம் மகன் கோலிக்குண்டுக் கண்ணு
சிவப்பதிகாரம் அற்றைத் திங்கள் வானிடம், சித்திரையில் என்ன & அடி சந்திர சூரிய
2007 தீபாவளி கண்ணன் வரும் வேளை
பொறி அனைத்துப் பாடல்கள்
லீ ஜெலினா ஒ ஜெலினா
நண்பனின் காதலி அனைத்துப் பாடல்கள்
கருப்பசாமி குத்தகைதாரர் கருப்பன் வருவான், நாலு கோபுர, ஊரெல்லாம், சங்கம் வைத்து & உப்பு கல்லு தண்ணீருக்கு
துள்ளல் கொக்கரிக்கும் & செய்கூலி உண்டு
ஒரு பொண்ணு ஒரு பையன் நெஞ்சில் & ஒரு பொண்ணு ஒரு பையன்
சீனாதானா 001 உன்னைப் பார்த்தா
மலைக்கோட்டை தேவதைவே வா வா, ஹோ பேபி & உயிரே உயிரே
நாளைய பொழுது உன்னோடு கருவ காடு, ஒரு கொடம் & யாருகிட்ட
பொல்லாதவன் நான் அலிபாபா தங்கம்
2008 பீமா ரகசிய கனவுகள், எனதுயிரே எனதுயிரே
பிரிவோம் சந்திப்போம் கண்டும் காணாமல், சொல் சொல் என், கண்டும் காணாமல், நெஞ்சத்திலே நெஞ்சத்திலே
தங்கம் அனைத்துப் பாடல்கள்
வெள்ளித்திரை சூரியனே
வேதா ரசிக்கும் சீமானே
நேபாளி அணைக்கின்ற தாகம் & கனவிலே கனவிலே
அறை எண் 305ல் கடவுள் தென்றலுக்கு நீ
குருவி தேன் தேன் தேன்
குசேலன் பேரின்ப பேச்சுக்காரன்
சத்யம் செல்லமே செல்லமே & என் அன்பே
ஜெயம் கொண்டான் நான் வரைந்து வைத்த
அலிபாபா நீண்ட மௌனம்
ராமன் தேடிய சீதை வானத்தை விட்டு விட்டு
கோடைக்கானல் மெட்டு மெட்டு
மகேஷ், சரண்யா மற்றும் பலர் வைகரை பனியே & என் பாடல்
2009 கஜா முன்ன முன்ன
தீ காலை நேர, நீ இல்லாமல் & ராகவா ரானையா
பசங்க நான்தான் & அன்பாலே அழகாகும்
நாடோடிகள் சம்போ சிவ சம்போ
வெடிகுண்டு முருகேசன் அனைத்துப் பாடல்கள்
அந்தோனி யார்? காட்டு மரத்தில, மலைக்கோட்ட கண்ணு & எம்மா எம்மா
சிந்தனை செய் எல்லாமே எல்லாமே, தப்பும் இல்லை & நான் காக்கிநாடா
திரு திரு துறு துறு திரு திரு விழியே
கண்டேன் காதலை வெண்பஞ்சு, நான் மொழி அறிந்தேன் & காற்று புதிதாய்
நான் அவனில்லை 2 சொல்லாமலே
கந்தகோட்டை காதல் பாம்பு & கலகலகல கந்தகோட்டை
ரேனிகுண்டா விழிகளிலே விழிகளிலே
பொக்கிசம் நிலா நீ வானம் காற்று

2010-2015[தொகு]

Year Film Songs
2010 நாணயம் கூட கூட
அழகான பொண்ணுதான் வானத்து நிலவு, சாம கோடாங்கி & எனக்குள்ளே
தம்பி அர்ஜுனா புலிகள் கொஞ்சம், நல்ல மழை & புலிகள் கொஞ்சம்
நான் மகான் அல்ல இறகைப்போலே அலைகிறேனே & தெய்வம் இல்ல
மைனா மைனா மைனா நெஞ்சுக்குள்ள, கிச்சு கிச்சு தாம்பலம், ஏ ஜிங்கி ஜிங்கி & கையா புடி கண்ணா பாரு
மந்திரப் புன்னகை (2010) அன்பில்லாம கரைஞ்சது
விருதகிரி மன்னவனே மந்திரனே
2011 ஆடுகளம் வாழ்க்கை ஒருபோர்க்களம்
காவலன் யாரது யாரது யாரது & சட சட சட
ஆடு புலி தொடுகிறாய்
சீடன் எனது உயிரை
பவானி ஐ. பி. எஸ். அனைத்துப் பாடல்கள்
அழகர்சாமியின் குதிரை பூவகேளு
மார்கண்டேயன் சிறு சிறுவென விறு விறு
முதல் இடம் அய்த்தானே அய்த்தானே
மதிக்கெட்டான் சாலை அழகழகாய் தெரிகிறதே
வந்தான் வென்றான் அஞ்சனா அஞ்சனா
சதுரங்கம் அம்புலியம்மா, எங்கே எங்கே
ராரா மயக்கிபுட்டாளே
போராளி (திரைப்படம்)போராளி விதியே போற்றி
ஒஸ்தி உன்னாலே உன்னாலே & நெடுவாலி
மௌனகுரு (திரைப்படம்) லவ்
ராஜபாட்டை அனைத்துப் பாடல்கள்
மகாராஜா ராஜா ராஜா மகாராஜா
2012 மேதை உங்ககிட்ட ரெண்டுகண்ணும்
Soozhnilai இளந்தாரி இளந்தாரி
மாசி உனக்காக உனக்காக
மனம் கொத்திப் பறவை அனைத்துப் பாடல்கள்
18 வயசு ஆணும் இல்ல பொண்ணு, எனக்கெனவே நீ & போடி போடி பெண்ணே
சாட்டை அனைத்துப் பாடல்கள்
ராம்சரன் (ஆரஞ்சு படத்தின் தமிழ்வடிவம்) நூற்றாண்டு காதலே
கும்கி அனைத்துப் பாடல்கள்
வெயிலோடு விளையாடு கட்டுக்கடங்கா புயலென
2013 டேவிட் இரவினில் உலவாவா
வத்திக்குச்சி அறி உன்னை
கேடி பில்லா கில்லாடி ரங்கா கொஞ்சுங்கிளி பாடவெச்சா, சுடச்சுட தூரல் & உள்ளத நான்
ஆதலால் காதல் செய்வீர் மெல்ல சிரித்தால் காதல் & அலை பாயும் நெஞ்சிலே
தேசிங்கு ராஜா அனைத்துப் பாடல்கள்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் அனைத்துப் பாடல்கள்
ஆப்பிள் பெண்ணே பாடு பாடு தவிர அனைத்துப் பாடல்கள்
ஜன்னல் ஓரம் என்னடி என்னடி, ஆசை வச்ச மனசுல, ஏலே மலைதோப்பு, உன்னை பார்க்காம, அதிலி பதலி & அத்தோ அப்பத்தோ
தேரோடும் வீதியிலே அனைத்துப் பாடல்கள்
2014 ஜில்லா பாட்டு ஒன்னு
ரம்மி அனைத்துப் பாடல்கள்
சந்திரா ராஜ ராஜன், ஓம்காரமினுமோர் & நீ அருகே இருக்கும்
இது கதிர்வேலன் காதல் சரசர சரவென & பல்லாக்கு தேவதையே
பிரம்மன் ஓடு ஓடு ஓடு
குக்கூ மனசுல சூறக்காத்து, பொட்ட புள்ள, ஆகாசத்த நான், கல்யாணமாம் கல்யாணம் & கோடையில
மான் கராத்தே டார்லிங்கு டம்ப‌க்கு
மஞ்சப்பை ஆகாச நிலவுதான், அன்பு தான், அய்யோ அய்யோ, பாத்து பாத்து & சட்டென தூறலும்
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி ஒன்னுனா ரெண்டு வரும், கண்டாங்கி சேலை & என் அன்பே
சிகரம் தொடு அன்புள்ள அப்பா அப்பா & பிடிக்குதே
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா மழைக் காத்தா நீ, ஓடும் ரயில், ஒரு ஊருல & சுந்தரி பெண்ணே
வன்மம் அனைத்துப் பாடல்கள்
கத்தி ஆத்தி எனைநீ
காடு (2014 திரைப்படம் ) ஒன்ன பத்தி நினைச்சாலே, உச்சி மலைக் காடு, ஊரோரம், உயிரே, எட்டுத் திக்கும்
நாய்கள் ஜாக்கிரதை ஓயாதே
கயல் அனைத்துப் பாடல்கள்
வெள்ளக்கார துரை அம்மாடி உன் அழகு, காக்கா முட்டை & நடிகர் திலகம் இல்லேன்னு
2015 தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் சட்டுன்னு என்ன
காக்கி சட்டை காதல் கண் கட்டுதே
ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை உயிரே உயிரே
இவனுக்கு தண்ணில கண்டம் மாப்பிள்ள மாப்பிள்ள & லவ் வந்தா
மகாபலிபுரம் ஆத்தாடி என்ன சொல்ல, உசுரே நீ, ஆனந்த தென்றல் & குடிய வீடு
கடவுள் பாதி மிருகம் பாதி எனது உலகில்
இஞ்சி முறப்பா அனைத்துப் பாடல்கள்
ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை உயிரே உயிரே
நண்பர்கள் நற்பணி மன்றம் ஆசை வெச்சேன்
அச்சாரம் அனைத்துப் பாடல்கள்
49-ஓ அம்மா போல, அருவாவா கண்ணு, இன்னும் எத்தனை & ஓட்டு போடுங்க

2016 - 2021[தொகு]

Year Film Songs
2016 ரஜினி முருகன் அனைத்துப் பாடல்கள்
அஞ்சல கண்ஜாடை
வெற்றிவேல் அடியே… உன்ன பார்த்திட, நாட்டுச் சாலையிலே, ஒன்னப்போல ஒருத்தர
மருது சூறாவளிடா, ஒத்தசட ரோசா, அக்கா பெத்த ஜக்காவண்டி
ஜோக்கர் என்னங்க சார் உங்க சட்டம், ஓல ஓலக் குடிசையில, ஜாஸ்‌மின் -யு
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் அனைத்துப் பாடல்கள்
தொடரி அனைத்துப் பாடல்கள்
றெக்க அனைத்துப் பாடல்கள்
மாவீரன் கிட்டு அனைத்துப் பாடல்கள்
வீர சிவாஜி அடடா அடடா உனைப்போல்
2017 முப்பரிமாணம் உயிரிலே உயிரிலே
கடம்பன் அனைத்துப் பாடல்கள்
லென்ஸ் மூங்கில் நிலா
சரவணன் இருக்க பயமேன் அனைத்துப் பாடல்கள்
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் அனைத்துப் பாடல்கள்
ரூபாய் அனைத்துப் பாடல்கள்
பொதுவாக எம்மனசு தங்கம் அனைத்துப் பாடல்கள்
கருப்பன் அனைத்துப் பாடல்கள்
நெஞ்சில் துணிவிருந்தால் ரயில் ஆராரோ, Aei Arakka
2018 செம சண்டாளி உன் அசத்துற & நெஞ்சே நெஞ்சே
பஞ்சுமிட்டாய் அனைத்துப் பாடல்கள்
கடைக்குட்டி சிங்கம் அனைத்துப் பாடல்கள்
மேற்குத் தொடர்ச்சி மலை கேட்காத வாத்தியம் கேட்குது
சீமராஜா அனைத்துப் பாடல்கள்
செய் ஹீரோ ஹீரோ & இறைவா இறைவா
2019 விசுவாசம் வேட்டி வேட்டி வேட்டி கட்டு
மெஹந்தி சர்க்கஸ் வெள்ளாட்டு கண்ணழகி, கோடி அருவி கொட்டுதே, லவ் பொல்லாதது, சிறகி உன் சிரிப்பால
அயோக்யா காடு காடு & யாரோ யாரோ
மான்ஸ்டர் டபக்குனு
மாயநதி அனைத்துப் பாடல்கள்
கொரில்லா "Gorilla Theme"
நம்ம வீட்டு பிள்ளை மைலாஞ்சி மைலாஞ்சி, எனக்காகவே பொறந்தவளே
அசுரன் Polladha Boomi, எள்ளுவய பூக்கலையே, கண்ணழகு ரத்தினமே
2020 நாடோடிகள் 2 "Adhuva Adhuva", "Raila Raila", "Aana Varudha Paarungadi", "Paga Paga", "Adhuva Adhuva (Rain Version)"
ஜிப்சி காக்கிக்கலரு காக்கிக்கலரு
சூரரைப் போற்று கையிலே ஆகாசம்
பாவக் கதைகள் கண்ணே கண்மணியே
2021 ஈஸ்வரன் அனைத்துப் பாடல்கள்
கர்ணன் ஏ ஆளு மஞ்சனத்தி, தட்டான் தட்டான்
லாபம் லாபம் / யாழா யாழா
உடன்பிறப்பே அண்ணே யாரண்ணே மண்ணுல உன்னாட்டம், ஒத்த பனை காட்டேறி, தெய்வம் நீதானே, எங்கே என் பொன்மாலை
ஜெய் பீம் செண்டுமல்லி, வேட்டைக்கார கூட்டம், இந்தப் பொல்லாத உலகத்திலே, மண்ணிலே ஈரமுண்டு
அண்ணாத்த சார காற்றே
அட்ராங்கி ரே (மொழி மாற்றம்) சக்கா சக்களத்தி
எதற்கும் துணிந்தவன் உள்ளம் உருகுதையா

2022 - present[தொகு]

Year Film Songs
2022 யுத்த சத்தம் அனைத்துப் பாடல்கள்
சர்தார் ஏறுமயிலேறி
மை டியர் பூதம் அனைத்துப் பாடல்கள்
நானே வருவேன் பிஞ்சு பிஞ்சு மழை
ரெஜினா சூறாவளி, கோடி கோடி
2023 வாத்தி கலங்காதே, நாடோடி மன்னன், சூரிய பறவைகளே
கர் பந்துக் பிரியாணி(மொழிமாற்றம்) அனைத்துப் பாடல்கள்
மாமன்னன் ராசா கண்ணு, ஜிகு ஜிகு ரயில், கொடி கொடி பார்க்குற காலம், நெஞ்சமே நெஞ்சமே, உச்சந்தல, வீரனே,
மாவீரன் வண்ணாரப் பேட்டையில ஒரு வெளவாலு,


எழுதிய நூல்கள்[தொகு]

கவிதைத் தொகுப்புகள்[தொகு]

  • மனப்பத்தாயம்
  • பஞ்சாரம்
  • தெப்பக்கட்டை
  • நொண்டிக்காவடி
  • தெருவாசகம்
  • அந்நியர்கள் உள்ளே வரலாம்
  • மராமத்து,
  • முனியாண்டிவிலாஸ்,
  • பாதாளக்கொலுசு

கட்டுரைத் தொகுப்புகள்[தொகு]

  • கண்ணாடி முன்
  • நேற்றைய காற்று
  • ஒன்று
  • நடுக்கடல் தனிக்கப்பல்
  • வீட்டுக்கு வெளியே வெவ்வேறு சுவர்கள்
  • அதாவது
  • நானொருவன் மட்டிலும்
  • நண்மை
  • தத்தகாரம்
  • இடம்பொருள் இசை,
  • பின்பாட்டு
  • அகத்திரை
  • நல்லார் ஒருவர்
  • ஒருபாட்டு கொஞ்சம் பின்னணி
  • நிழல் பொம்மை
  • ஊஞ்சல் தேநீர்
  • முன்னிருக்கைக்காரர்கள்
  • ஒன்று
  • நடுக்கடல் தனிக்கப்பல்
  • ஒரு மரத்துக் கள்

இவரது திரைப்பாடல்கள் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. நேர்நிரை வெளியீட்டின் மூலம் ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

விருதுகள்[தொகு]

இரண்டு முறை கவிதைக்காக தமிழக அரசின் பரிசை வென்றுள்ளார். சிறந்த பாடலாசிரியருக்கான விருதையும் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.[3] இவருடைய படைப்புகளைப் பாராட்டி கோவை பாரதியார் பல்கலைக்கழகம் `ஐந்தமிழ் விருதை’ வழங்கியுள்ளது. திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, பிலிம்பேர் விருது, ஸ்டேட்பேங்க் விருது, காசியூர் ரங்கம்மாள் விருது, பெரியார் விருது ஆகியனவும் பெற்றுள்ளார்.[4] ஐந்துமுறை ஆனந்தவிகடன் விருதும், எட்டுமுறை மிர்ச்சி விருதும் பெற்றுள்ளார்.


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "கவிஞர் யுகபாரதி". தென்றல். பார்க்கப்பட்ட நாள் 16 September 2023.
  2. "யுகபாரதி நேர்காணல் கேள்வி பதில்கள்". www.keetru.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-23.
  3. "தமிழக அரசின் உயரிய விருதான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு". நியூஸ்ஜெ. https://newsj.tv/announcing-the-kalaimamani-awards-13344/. பார்த்த நாள்: 16 September 2023. 
  4. "2016ஆம் ஆண்டின் கழக முக்கிய நிகழ்வுகள்". விடுதலை. https://cms.viduthalai.in/2017/01/01/2016-74/. பார்த்த நாள்: 16 September 2023. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுகபாரதி&oldid=3791048" இலிருந்து மீள்விக்கப்பட்டது