தனுஷ் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தனுஷ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தனுஷ்
Dhanush at the ‘Asuran’ Success Meet.jpg
பிறப்புவெங்கடேஷ் பிரபு[1][2]
28 சூலை 1983 (1983-07-28) (அகவை 38)[3]
தேனி, தமிழ்நாடு, இந்தியா இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
2002–தற்போது வரை
பெற்றோர்கஸ்தூரி ராஜா - விஜயலட்சுமி
வாழ்க்கைத்
துணை
ஐசுவர்யா ரஜினிகாந்த் தனுஷ்
(2004–தற்போது வரை)
பிள்ளைகள்யாத்ரா (பி 2006)
லிங்கா (பி 2010)
விருதுகள்சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய திரைப்பட விருது (2011) (2019)[4]

தனுஷ் (Dhanush, பிறப்பு: 28 சூலை 1983) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு முதல் திருடா திருடி (2003), சுள்ளான் (2004), புதுப்பேட்டை (2006), பொல்லாதவன் (2007), ஆடுகளம் (2011), 3 (2012), வேலையில்லா பட்டதாரி (2014), மாரி (2015), அசுரன் (2019) போன்ற பல தமிழ் மொழி திரைப்படங்களிலும் மற்றும் ராஞ்சனா (2013) போன்ற இந்தி திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.[5]

இவர் 40 மேலான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் 14 தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள், 9 விஜய் விருதுகள், 7 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், 5 விகடன் விருதுகள், 5 எடிசன் விருதுகள், 4 தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகள் போன்றவை வென்றுள்ளார்.[6] இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியலில் தனுஷ் ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[7]

தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலமாக படம் தயாரிக்கிறார். இவருக்கு சிறந்த நடிகர் விருது மட்டுமல்லாமல் இவருடைய தயாரிப்பில் வெளிவந்த விசாரனை படத்திற்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

தனுஷ், தமிழ்த் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனும், இயக்குநர் செல்வராகவனின்[8] இளைய சகோதரரும் ஆவார். இவர் 2004ஆம் ஆண்டில், நடிகர் ரஜனிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார்.[9] அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கம் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள்.

திரைப்பட வாழ்க்கை[தொகு]

2002 ஆம் ஆண்டு செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்பு துறைக்கு அறிமுகமானார். பாரிய வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதன் பிறகு வெளியான திருடா திருடி[10] (2003) மற்றும் தேவதையைக் கண்டேன் (2005) போன்ற திரைப்படங்களின் மூலமாக தனது திரையுலக செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார்.[11] அதை தொடர்ந்து சுள்ளான் (2004), புதுப்பேட்டை (2006), திருவிளையாடல் ஆரம்பம்[12][13] (2006), பொல்லாதவன் (2007) போன்ற பல திரைப்படங்களில் நடித்தார்.

2011 ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம்[14] என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ல் சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய திரைப்பட விருது பெற்றார்.[15] அதை தொடர்ந்து அதே ஆண்டில் மயக்கம் என்ன என்ற திரைப்படமும் 2012 ஆம் ஆண்டு 3 என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். 3 என்ற திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சுருதி ஹாசன் என்பவர் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்காக 2011 ஆம் ஆண்டு இறுதியில் இவர் பாடிய வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் யூடியூப் இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்வையிடப்பட்டதால் ஓரிரு நாட்களில் தேசிய அளவில் பேசப்பட்டார்.

2013 ஆம் ஆண்டு ராஞ்சனா என்ற இந்தி மொழி திரைப்படம் மூலம் பாலிவுட் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை ஆனந்த் எல். ராய் என்பவர் இயக்க ஏ. ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்துள்ளார். அம்பிகாபதி என்ற பெயரில் தமிழில் வெளியானது. இவரது 25 வது திரைப்படமாக வேலையில்லா பட்டதாரி என்ற திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியாக நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.[16][17] இந்த திரைப்படத்தை வேல்ராஜ் என்பவர் இயக்கியுள்ளார். அதை தொடர்ந்து ஷமிதாப் என்ற இந்தி திரைப்படத்திலும் கே. வி. ஆனந்த் இயக்கிய அனேகன் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு இவர் நடித்த மாரி, தங்க மகன்[18] போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. 2016 ஆம் ஆண்டு கொடி என்ற பரபரப்பூட்டும் அரசியல் திரைப்படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி 2 (2017), வட சென்னை (2018), மாரி 2 (2018) போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் என்ற திரைப்படம் வெளியான ஒரு மாதத்திற்குள் 100 கோடி ரூபாய் வசூலித்ததற்காக 100 கோடி கிளப்பில் நுழைந்தது.[19]

இசை[தொகு]

இவர் முதல் முதலில் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற திரைப்படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதை தொடர்ந்து புதுப்பேட்டை என்ற திரைப்படத்திலும் பாடல் பாடியுள்ளார். இவர் பாடிய வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் யூடியூப் இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்வையிடப்பட்டது.[20]

பாடல்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு திரைப்படம் இசையமைப்பாளர் மொழி பிற கலைஞர் (கள்)
2004 "நாட்டு சரக்கு" புதுக்கோட்டையிலிருந்து சரவணன் யுவன் சங்கர் ராஜா தமிழ்
2005 "துண்டை காணோம் " தேவதையைக் கண்டேன் தேவா அனுராதா ஸ்ரீராம்
2006 "எங்க ஏரியா" புதுப்பேட்டை யுவன் சங்கர் ராஜா
2010 "உன் மேல" ஆயிரத்தில் ஒருவன் ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண்ட்ரியா ஜெரமையா
2011 "ஓட ஓட"
"காதல் என் காதல்"
மயக்கம் என்ன செல்வராகவன்
2011 "வொய் திஸ் கொலவெறி டி"
"கண்ணழகா"
3 அனிருத் ரவிச்சந்திரன் தமிழ், தெலுங்கு, இந்தி சுருதி ஹாசன்
2013 "டெட்டி பீர் " நய்யாண்டி தமிழ்
2014 "அம்மா அம்மா"
"போ இன்று நீயாக"
"வார்ட் எ கறவாட்"
வேலையில்லா பட்டதாரி அனிருத் ரவிச்சந்திரன்
2015 "டங்காமாரி " அனேகன் ஹாரிஸ் ஜயராஜ்
2015 "நோ ப்ரோப்ளம்" வஜ்ரகாய அர்ஜுன் கன்னடம்
2015 "நெஞ்சமெல்லாம் " எதிர்நீச்சல் அனிருத் ரவிச்சந்திரன் தமிழ் அனிருத் ரவிச்சந்திரன்
2015 "பழங்கால" இரண்டாம் உலகம் ஹாரிஷ் ஜயராஜ் மேகா
2015 "ஓ ஓ"
"ஜோடி நிலவு"
தங்க மகன் அனிருத் ரவிச்சந்திரன் தமிழ், தெலுங்கு நிகிதா, சுவேதா மோகன்
2015 "மாரி தாரா லோக்கல்"
"டோனு டோனு டோனு"
"பகுலு ஒடயும் டகுலு மாரி"
மாரி அனிருத் ரவிச்சந்திரன் தமிழ்
2016 "மாலை வரும் வண்ணில்லா" நெஞ்சம் மறப்பதில்லை யுவன் சங்கர் ராஜா
2016 "கொடி" கொடி சந்தோஷ் நாராயணன்
2016 "திக்கா" திக்கா தமன் தெலுங்கு
2017 "சொல்லி தொலையேன் மா" யாக்கை யுவன் சங்கர் ராஜா தமிழ்
2017 "சூரகத்து"
"வென்பனிமலரே"
ப. பாண்டி ஷான் ரோல்டன் ஸ்வேதா மோகன், ஷான் ரோல்டன்
2017 "புதுவாய்" யாதுமாகி நின்றன்
(இசை காணொளி)
அஸ்வின் விநாயகமூர்த்தி
2017 "ரகுவரனின் வாழ்க்கை"
"ரகுவரனின் சித்திரவதை"
வேலையில்லா பட்டதாரி 2 சீன் ரோல்டன்
2018 "கோயிந்தம்மாவல" வட சென்னை சந்தோஷ் நாராயணன்
2018 "இங்கிலீஷ் லவ்ஸ்" பக்கரி அமித் திரிவேதி
2018 "லோக்கல் சரக்கா" படை வீரன் கார்த்திக் ராஜா
2018 "ஏழவா" எழுமின் கணேஷ்
2018 "மாரி கெத்து"
"ரவுடி பேபி"
மாரி 2 யுவன் சங்கர் ராஜா தமிழ், தெலுங்கு தீ, எம்.எம். மானசி
2019 "நெஞ்சோடு விநாய" பிரதர்'ஸ் டே 4 மியூசிக்ஸ் தமிழ்
2019 பொல்லாத பூமி
"கண்ணழகு ரத்தினமே"
அசுரன் ஜி. வி. பிரகாஷ் குமார்
2020 "சில் ப்ரோ" பட்டாஸ் விவேக்-மெர்வின்
2020 "கதோடு காதானென்" ஜெயில் ஜி. வி. பிரகாஷ் குமார் அதிதி ராவ் ஹைதாரி

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்பு
2002 துள்ளுவதோ இளமை மகேஷ்
2003 காதல் கொண்டேன் வினோத்
திருடா திருடி வாசு
2004 புதுக்கோட்டையிலிருந்து சரவணன் சரவணன்
சுள்ளான் சுப்பிரமணி (சுள்ளான்)
ட்ரீம்ஸ் சக்தி
2005 தேவதையைக் கண்டேன் பாபு
அது ஒரு கனாக்காலம் சீனு
2006 புதுப்பேட்டை கொக்கி குமார்
திருவிளையாடல் ஆரம்பம் திருக்குமரன்
2007 பரட்டை என்கிற அழகுசுந்தரம் அழகுசுந்தரம்
பொல்லாதவன் பிரபு
2008 யாரடி நீ மோகினி வாசு
குசேலன் அவராகவே சிறப்பு தோற்றம்
2009 படிக்காதவன் ராதாகிருஷ்ணன்(ராக்கி)
2010 குட்டி குட்டி
உத்தம புத்திரன் சிவா
2011 ஆடுகளம் கருப்பு
சீடன் சரவணன்
மாப்பிள்ளை சரவணன்
வேங்கை செல்வம்
மயக்கம் என்ன கார்த்திக் சுவாமிநாதன்
2012 3 ராம்
2013 ப்ரோபிரியேட்டர்ஸ்: கம்மத் & கம்மத் அவராகவே மலையாளத் திரைப்படம்
சிறப்பு தோற்றம்
எதிர்நீச்சல் அவராகவே சிறப்பு தோற்றம்
ராஞ்சனா குண்டன் ஷங்கர் இந்தித் திரைப்படம்
மரியான் மரியான்
நய்யாண்டி சின்னா வண்டு
2014 வேலையில்லா பட்டதாரி ரகுவரன்
2015 ஷமிதாப் டேனிஷ் இந்தித் திரைப்படம்
அனேகன் அஸ்வின், முருகப்பா, காளி
வை ராஜா வை அவராகவே சிறப்பு தோற்றம்
மாரி மாரி
தங்க மகன் தமிழ்
2016 தொடரி பூச்சியப்பன்
கொடி கோடி, அன்பு
2017 ப. பாண்டி பாண்டியன் பழனிசாமி
வேலையில்லா பட்டதாரி 2 ரகுவரன் ஒரே நேரத்தில் தெலுங்கில் விஐபி 2 ஆக படமாக்கப்பட்டது
2018 பக்கீரின் அஜதாஷத்ரு லாவாஷ் படேல் ஆங்கிலத் திரைப்படம்
வட சென்னை அன்பு
மாரி 2 மாரி
2019 அசுரன் சிவசாமி
எனை நோக்கி பாயும் தோட்டா ரகு
2020 பட்டாஸ் சக்தி, திரவியம் பெருமாள்
ஜகமே தந்திரம் சுருளி
கர்ணன் கர்ணன்
2021 அட்ரங்கி ரீ இந்தித் திரைப்படம்
2021 தி க்ரே மேன் ஆங்கிலத் திரைப்படம்

தயாரிப்பாளராக[தொகு]

வருடம் திரைப்படம் குறிப்புகள்
2012 3
2013 எதிர்நீச்சல்
2014 வேலையில்லா பட்டதாரி
2015 ஷமிதாப் இந்தித் திரைப்படம்
காக்கி சட்டை
காக்கா முட்டை
மாரி
நானும் ரவுடி தான்
தங்க மகன்
2016 ஷமிதாப் இந்தித் திரைப்படம்
காக்கி சட்டை
2014 வேலையில்லா பட்டதாரி
2016 விசாரனை
அம்மா கணக்கு
2017 சினிமா வீரன்
ப. பாண்டி
வேலையில்லா பட்டதாரி 2
விஐபி 2 தெலுங்கு திரைப்படம்
தரங்கம் மலையாளத் திரைப்படம்
காலா
2018 வட சென்னை
மாரி 2

மேற்கோள்கள்[தொகு]

 1. "Dhanush". India today. https://www.indiatoday.in/Dhanush. 
 2. "Dhanush: Lesser known facts". Times of india. 19 Jan 2015. https://m.timesofindia.com/entertainment/hindi/bollywood/photo-features/dhanush-lesser-known-facts/photostory/45939894.cms. 
 3. "Dhanush Interview". YouTube. 1 ஏப்ரல் 2013. https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-TYXi9BJxZs#t=487s’. 
 4. அசுரன்' தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது... விஜய்சேதுபதி, பார்த்திபனுக்கும் விருதுகள்!. விகடன் இதழ். 22 மார்ச் 2021. https://www.vikatan.com/tamil-cinema/dhanush-vijay-sethupathi-parthiban-gets-national-film-awards-2019. 
 5. "Dhanush on being pushed into acting at 16 and judged by his looks". The Indian Express (18 January 2015). மூல முகவரியிலிருந்து 4 June 2016 அன்று பரணிடப்பட்டது.
 6. "It is a triple joy: Dhanush on National awards for 'Visaranai'" (28 March 2016). மூல முகவரியிலிருந்து 8 June 2016 அன்று பரணிடப்பட்டது.
 7. "Dhanush - Forbes India Magazine" (en). மூல முகவரியிலிருந்து 5 June 2020 அன்று பரணிடப்பட்டது.
 8. "K. Selvaraghavan". Internet Movie Database. மூல முகவரியிலிருந்து 21 May 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 31 May 2007. "their father Kasturi Raja"
 9. Tamil Nadu / Chennai News : Rajnikanth turns grandfather பரணிடப்பட்டது 24 செப்டம்பர் 2009 at the வந்தவழி இயந்திரம். The Hindu (13 October 2006). Retrieved 10 April 2013.
 10. Rangarajan, Malathi (12 September 2003). "Review: Thiruda Thirudi". தி இந்து. மூல முகவரியிலிருந்து 4 October 2003 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 11 November 2007.
 11. Rangarajan, Malathi (11 July 2003). "Review: Kadhal Kondain". தி இந்து. மூல முகவரியிலிருந்து 7 November 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 11 November 2007.
 12. "Thiruvilayadal Arambam – Breezy masala". Indiaglitz.com (18 December 2006). மூல முகவரியிலிருந்து 14 January 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 20 December 2007.
 13. Davis, Franko. "Review: Thiruvilayaadal Arambham". Nowrunning. மூல முகவரியிலிருந்து 9 August 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 1 January 2007.
 14. "Yatra is my lucky mascot: Dhanush ". The Times Of India. 28 July 2009. Archived from the original on 9 ஜூன் 2012. https://web.archive.org/web/20120609144040/http://articles.timesofindia.indiatimes.com/2009-07-28/news-interviews/28210690_1_lucky-mascot-kutty-dhanush. பார்த்த நாள்: 10 September 2011. 
 15. Bollywood beaten back at National Film Awards – Movies News News – IBNLive பரணிடப்பட்டது 22 மே 2011 at the வந்தவழி இயந்திரம். CNN-IBN.in.com. Retrieved 31 May 2011.
 16. Seshagiri, Sangeetha (2015-01-01). "From Vijay's 'Kaththi' to Ajith's 'Veeram': Top Grossing Tamil Films of 2014" (english). மூல முகவரியிலிருந்து 19 June 2020 அன்று பரணிடப்பட்டது.
 17. "'Velai Illa Pattathari' Box Office: Dhanush Starrer Earns ₹50 Crore Worldwide". IBTimes. 14 August 2014. http://www.ibtimes.co.in/velai-illa-pattathari-box-office-dhanush-starrer-earns-50-crore-worldwide-606871. 
 18. "Dhanush Thangamagan Movie Firstlook Poster HD". TNPlive (Bangalore). 11 October 2015. http://www.telangananewspaper.com/dhanush-thangamagan-movie-posters-hd-vip2/. 
 19. "Asuran movie review: Dhanush is terrific in this well-made revenge drama" (en-IN) (4 October 2019). மூல முகவரியிலிருந்து 5 October 2019 அன்று பரணிடப்பட்டது.
 20. "Kolaveri is the most searched video". The Times of India. 21 November 2011. Archived from the original on 10 நவம்பர் 2013. https://web.archive.org/web/20131110214532/http://articles.timesofindia.indiatimes.com/2011-11-20/news-interviews/30421962_1_youtube-video-dhanush-tamil-nadu. பார்த்த நாள்: 23 November 2011. 

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனுஷ்_(நடிகர்)&oldid=3314994" இருந்து மீள்விக்கப்பட்டது