ப. பாண்டி
ப.பாண்டி என்னும் தமிழ் திரைப்படம் 2017ல் வெளிவந்தது. தமிழில் மட்டுமே வந்த இத்திரைப்படம் சிரிப்பூட்டும் படமாக இருக்கிறது. இத்திரைப்படத்தை தனுஷ் என்பவர் கதை எழுதி இயக்கி உள்ளார். படம் ஏப்ரல் 2017 ல் வெளிவந்து வளர்முக வரவேற்பைப் பெற்றுள்ளது.
கதைச்சுருக்கம்
ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகில் பிரபல நட்சத்திரங்களின் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராகப் பணியாற்றி, வெற்றி விழா கேடயங்களை வாங்கிக் குவித்தவர் பவர் பாண்டி. பவர் பாண்டியின் மனைவி மரணம் அடைந்துவிட, ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் தனது ஒரே மகன் ராகவன் (பிரசன்னா), இல்லத்தரசியாக இருக்கும் மருமகள் பிரேமா (சாயாசிங்), பள்ளியில் படிக்கும் பேரன் துருவ (மாஸ்டர் ராகவன்), பேத்தி சாடா (பேபி சவி சர்மா) ஆகியோருடன் பவர் பாண்டி வாழ்ந்து வருகிறார்.
குடும்பத்தில் வசதிக்கும், பாசத்துக்கும் குறைவில்லாத நிலையில், தினசரி வாழ்க்கை முறையில் பவர் பாண்டிக்கும், அவரது மகன் ராகவனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு தொடர்கிறது சமூகத்தில் தன் கண்ணெதிரே எந்தத் தவறு நடந்தாலும் எதிர்த்துக் கேட்கும் மனோபாவம் கொண்டவர் பவர் பாண்டி. இதனால் சமூக விரோதிகளுடன் மோதல், போலீசில் புகார் எனப் பல பிரச்சனைகளில் சிக்குகிறார். இதனால் நிம்மதியை இழக்கும் மகன் ராகவன், “எங்கே எது நடந்தால் நமக்கென்ன? நாம் உண்டு, நம் வேலை உண்டு என்று இருக்க வேண்டியது தானே?” என ஒரு கார்ப்பரேட் மனிதராய்க் குமுறுகிறார். அவரின் கருத்துக்கு அவருடைய மனைவி பிரமாவும் ஆதரவாகச் செயல்படுகிறார். ஆனால், பேரனும் பேத்தியும் எப்பொழுதும் தாத்தாவுக்கு ஆதரவாகவே இருக்கின்றனர்.
அப்பாவுக்கும், மகனுக்கும் இடையிலான இந்தக் கருத்து வேறுபாடுகள் ஒரு கட்டத்தில் தீவிரமடைகிறது. எனவே கடிதம் எழுதி வைத்துவிட்டு, யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறுகிறார் பவர் பாண்டி. தான் வங்கியில் சேமித்து வைத்திருந்த ரூ.25 லட்சத்தை எடுத்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் இலக்கு இல்லாமல் போகிறார் போகிறார். வழியில் ஓர் உணவகத்தில், தன்னைப் போல் வீட்டில் இருக்கப் பிடிக்காமல் கூட்டாக இருக்கும் சில முதியவர்களைச் சந்திக்கிறார் பவர் பாண்டி. அவர்களிடம் பேசுகையில் பேச்சு, ‘முதல் காதல்’ பக்கம் திரும்புகிறது. தனக்கும் ஒரு முதல் காதல் இருந்தது என்று சொல்லும் பவர் பாண்டி, “அது ஒரு சாதாரணக் காதல் கதை தான்” என்ற முன்னுரையுடன் தனது முதல் காதலை விவரிக்கிறார்
பவர் பாண்டியின் பிளாஷ் பேக் ஒரு கிராமத்தில், புரூஸ்லீயின் தீவிர ரசிகராக இருக்கிறார் இளம் பருவத்துப் பாண்டி (தனுஷ்). மதுரை நகரில் வசிக்கும் பூந்தென்றல் (மடோனா செபாஸ்ட்டியன்) குடும்பம், விடுமுறை காலத்தைக் கழிக்க அந்தக் கிராமத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு வருகிறார்கள். அக்கிராமத்தில் மிகச் சிறப்பாகக் கபடி விளையாடும் பாண்டியைப் பார்த்து ரசிக்கிறார். பல்வேறு நிலைகளில் அவர்களுக்குள் காதல் உருவாகிறது. இவர்களின் காதல், பூந்தென்றலின் அப்பாவுக்கு (ஆடுகளம் நலனுக்கு) தெரிய வர, அவர் எந்தக் களேபரம் செய்யாமல், எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், உடனடியாக மகளுடன் மதுரைக்குச் சென்று விடுகிறார்கள். பூந்தென்றல் உருக்கமாகக் கடிதம் எழுதி, அதைப் பாண்டியிடம் சேர்க்க ஏற்பாடு செய்துவிட்டு, அப்பாவோடு சென்று விடுகிறார். காதலியைப் பிரிந்து தவிக்கும் பாண்டி, மதுரைக்குப் போய்ப் பூந்தென்றலைச் சந்திக்க முயல்கிறார், அது முடியாமல் போகவே விரக்தியுடன் சென்னைக்குச் சென்று, சினிமாவில் சேர்ந்து, பவர் பாண்டி ஆகிறார்.
வீட்டைவிட்டு வெளியேறிய பவர் பாண்டி இலக்கு இல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கையில் அவருக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது. அதாவது அது பூந்தென்றலைப் பார்க்க வேண்டும் என்பது தான். இத்தனை வருடங்களுக்குப் பிறகு பூந்தென்றல் எங்கே இருப்பார்? எப்படி இருப்பார்? என்ற எந்தத் தகவலையும் அறியாத பவர் பாண்டி தனது காதலியை விரும்புகிறார். பவர் பாண்டி தனது முதல் காதலியான பூந்தென்றலைச் சந்திப்பது? பவர் பாண்டியைக் காணவில்லை என்று மகன் ராகவன் அப்பாவைத் தேடி அலைவது என்று நீள்கிறது மீதிக்கதை.[1]
நடிகர்[தொகு]
- ராஜ்கிரண் என பாண்டியன்
- தனுஷ் என இளைய பாண்டியன்
- ரேவதி
- மடோனா செபாஸ்டியன் இளைய
- பிரசன்னா என ராகவன் "ராம்போ"
- சாயா சிங்
- ரின்சன் சைமன்
- ஆடுகளம் நரேன்
- பாரதி கண்ணன்
- மாஸ்டர் ராகவன்
- பாலாஜி மோகன் என ராகவன்
- சென்ராயன் என மருந்து விற்பனையாளர்
- கௌதம் மேனன் என போலீஸ் இன்ஸ்பெக்டர்
- ராம்நாத் ஷெட்டி
சிறப்புத்தோற்றம்
- கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குனர்
- ரோபோ ஷங்கர்
- திவ்யதர்ஷினி
- ஸ்டண்ட் சில்வா என புல்லட் ராஜா
- பாபா பாஸ்கர் என கிராமவாசி
படம்[தொகு]
திரைப்படம் தொடங்கிய நாளில் அதன் பெயர் பவர் பாண்டி என்று அறிவிக்கப்பட்டது. .[2][3] ஏப்ரல் 2017 இல், இத்தலைப்பு பின்பு ப.பாண்டி என மாற்றப்பட்டது. மாற்றப்பட்டதன் காரணம் வரி விலக்கு நாட என்பதற்கு எனக் கூறப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "ப.பாண்டி – விமர்சனம்". heronewsonline. 16 November 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Dhanush directorial debut Power Pandi starring Raj Kiran Prasanna Sean Roldan Music". 2016-09-08 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Power Paandi: Dhanush turns director, unveils the first look poster". 2016-09-08 அன்று பார்க்கப்பட்டது.