உள்ளடக்கத்துக்குச் செல்

ரோபோ சங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோபோ சங்கர்
பிறப்பு(1978-12-24)24 திசம்பர் 1978
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு18 செப்டம்பர் 2025(2025-09-18) (அகவை 46)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்மதுரை காமராசர் பல்கலைக்கழகம் - எம்.ஏ. (பொருளாதாரம்)
பணிநகைச்சுவை நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1997-2007; 2011-2025
அறியப்படுவதுகலக்கப் போவது யாரு? (நிகழ்ச்சி), (விஜய் தொலைக்காட்சி)
வாழ்க்கைத்
துணை
பிரியங்கா சங்கர்
பிள்ளைகள்இந்த்ரஜா சங்கர்
விருதுகள்கலைமாமணி விருது

ரோபோ சங்கர் (24 திசம்பர் 1978 – 18 செப்டம்பர் 2025)[1] தமிழ் மேடை சிரிப்புரைஞரும், நடிகருமாவார். ரோபோ சங்கர் தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டவர். விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.[2][3].

திரை வாழ்க்கை

[தொகு]

சங்கர் கிராமத்து நிகழ்ச்சிகளில் ரோபோ நடனம் ஆடி ரோபோ சங்கர் என்ற பெயரை பெற்றார். ரௌத்திரம் (2011) படத்தில் கோகுல் ஒரு கதாபாத்திரத்தை வழங்கியபோது இவர் ஒரு மிமிக்ரி கலைஞராக இருந்தார்;[4] இருப்பினும், இவரது காட்சிகள் படத்திலிருந்து திருத்தப்பட்டன. கோகுல் மீண்டும் இவரை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (2013) படத்தில் நடிக்க வைத்தார்.[4][5] இப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. யாருடா மகேஷ், கப்பல் போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்த சங்கரை, பாலாஜி மோகன், வாயை மூடி பேசவும் (2014) படத்தில் நடிக்க வைத்தார். இவரது நடிப்பு விமர்சகர்களால் "உச்சம்" என்று விவரிக்கப்பட்டது.[6] இதன் பின்னர் டூரிங் டாக்கீஸில் (2015) எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் மாரி (2015)-இல் தனுசுடன் நடித்தார். இப்படத்தில் சங்கரின் நடிப்பு விமர்சகர்களால் குறிப்பிடப்பட்டது. இவர் "சிறப்புக் குறிப்புக்குத் தகுதியானவர்", "தனது தனித்துவமான நகைச்சுவை, உடல் மொழி ஆகியவற்றால் அனைவரையும் கவர்ந்தார்.[7][8][9]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

சங்கரின் மகள் இந்திரஜா பிகில் திரைப்படத்தில் பெண் கால்பந்து வீராங்கனைகளில் ஒருவராக அறிமுகமானார்.[10] மேலும் ஜீ தமிழின் சர்வைவர் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டவர். இவருடைய மனைவி பிரியங்கா, கன்னி மாடம் (2020) மூலம் நடிகையாக அறிமுகமானார்.[11] 2023ஆம் ஆண்டில், இவரது எடை இழப்பு பயணத்தின் போது மஞ்சள் காமாலை காரணமாகக் கூடுதல் எடையை இழந்ததால் பல இணையவாசிகள் இவரது உடல்நிலைக் குறித்துக் கவலை தெரிவித்தனர்.[12]

நடித்துள்ள திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்பு
2007 தீபாவளி உள்ளூர்க் கிராமவாசி
2011 ரௌத்திரம் பாடலில் சிறப்புத் தோற்றம்
2013 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" சவுண்ட் சங்கர்
2013 யாருடா மகேஷ் கோபால்
2014 வாயை மூடி பேசவும் மட்ட ரவி
2014 கப்பல் சீனு அண்ணா
2015 டூரிங் டாக்கீஸ் சின்னையா
2015 ரொம்ப நல்லவன் டா நீ
2015 மாரி சனிக்கிழமை
2015 மூணே மூணு வார்த்தை
2015 புலி[13] ஜெகன்
2015 மாயா[14]
2016 சாகசம்

தொலைக்காட்சித் தொடர்கள்

[தொகு]
ஆண்டு நிகழ்ச்சி பாத்திரம் அலைவரிசை
2012 கலக்கப் போவது யாரு விஜய் தொலைக்காட்சி
2018 கிங்சு ஆப் காமடி ஜூனியர் நடுவர் விஜய் தொலைக்காட்சி
2020 இதயத்தை திருடாதே அவராகவே கலர்சு தமிழ்
கண்ணான கண்ணே கௌரவத் தோற்றம் சன் தொலைக்காட்சி
2021 கன்னித் தீவு (உல்லாச உலகம் 2.0) சல்சா கலர்சு தமிழ்
2022 செம்பருத்தி புவனேசுவரியின் கணவர் ஜீ தமிழ்
2022 கலக்கப் போவது யாரு 3 நடுவர் விஜய் தொலைக்காட்சி
2022 ராஜூ வூட்ல பார்ட்டி விருந்தினர் விஜய் தொலைக்காட்சி
2025 டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2 போட்டியாளர்
(4ஆவது வாரம் வெளியேற்றம்)
சன் தொலைக்காட்சி

இறப்பு

[தொகு]

சங்கர் 2025 செப்டம்பர் 18 அன்று சென்னையில் உடல்நலக் குறைவினால் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.[15][16]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Actor Robo Shankar passes away at 46". www.dtnext.in. 18 September 2025.
  2. "நான் யாருக்கும் போட்டியில்லை: 'ரோபோ' சங்கர் நேர்காணல்". தி இந்து. Retrieved 19 செப்டெம்பர் 2015.
  3. "காமெடியில் அசத்தல்: ரோபோ சங்கருக்கு தாஜ் ஹோட்டலில் விருந்து அளித்த தனுஷ்!". தினமணி. Retrieved 19 செப்டெம்பர் 2015.
  4. 4.0 4.1 "My Stomach Kept Growing With My Career: Robo Shankar Interview". Silverscreen.in. 21 July 2015. Archived from the original on 20 October 2015. Retrieved 18 September 2015.
  5. "An interview with actor Robo Shankar by Tamil Dharani". Archived from the original on 26 September 2015. Retrieved 18 September 2015.
  6. "Vaayai Moodi Pesavum Movie Review". The Times of India. Archived from the original on 28 September 2017. Retrieved 18 September 2015.
  7. "Review : Maari". Sify. Archived from the original on 19 July 2015. Retrieved 18 September 2015.
  8. Behindwoods Review Board (17 July 2015). "Maari (aka) Mari review". Behindwoods. Archived from the original on 15 September 2015. Retrieved 18 September 2015.
  9. "I don't need dialogues to make people laugh: Robo Shankar". The Times of India. 2015-08-12. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/i-dont-need-dialogues-to-make-people-laugh-robo-shankar/articleshow/48437724.cms?from=mdr. 
  10. ராஜன், அய்யனார் (29 September 2021). "கால்வலி மட்டுமே எலிமினேஷனுக்கு காரணமில்லை!". Ananda Vikatan.
  11. Subramanian, Anupama (22 February 2020). "Kanni Maadam review: A caste drama cast well by first-time director". Deccan Chronicle. Archived from the original on 8 April 2020. Retrieved 31 March 2020.
  12. "Robo Shankar's drastic weight loss sparks talk about his health". DT Next. 19 March 2023.
  13. "I don't need dialogues to make people laugh: Robo Shankar". Times of India. Retrieved 19 செப்டெம்பர் 2015.
  14. "Nayantara’s love for horror films benefited ‘Maya’: Director Ashwin Saravanan - See more at: http://indianexpress.com/article/entertainment/regional/nayantaras-love-for-horror-films-benefited-maya-director-ashwin-saravanan/#sthash.UCuNqFow.dpuf". Indian Express. http://indianexpress.com/article/entertainment/regional/nayantaras-love-for-horror-films-benefited-maya-director-ashwin-saravanan/. பார்த்த நாள்: 19 செப்டெம்பர் 2015. 
  15. . https://x.com/tamiltvchanexp/status/1968705517414428817?s=46. 
  16. "Actor Robo Shankar critical after collapsing on film set". Cinema Express (in ஆங்கிலம்). 2025-09-01. Retrieved 2025-09-18.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோபோ_சங்கர்&oldid=4347669" இலிருந்து மீள்விக்கப்பட்டது